‘உம்ராஜான்‘-ல் (Urdu: امراؤ جان ) உஸ்தாத் குலாம் முஸ்தஃபா கான் பாடிய அற்புதமான இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. முந்தாநாள் கேட்டுக்கொண்டிருக்கும்போது , தம்பி தீனிடமிருந்து ‘இசை‘ என்ற கவிதையோடு ஒரு மின்னஞ்சல்! இந்த ‘கவிக்கோ’வும் மேத்தாவும் ரொம்ப பேரை கெடுத்திருக்கிறார்கள்! சரி, எங்கள் தீனுக்கு ஜக்ஜித்சிங்தான் பிடிக்கும் என்று நினைக்கிறேன். உஸ்தாதையும் அவர் கேட்கலாம் – உங்களோடு. நிஜாமுதீன் அவுலியா வருகிறார்களே..! கேட்டுவிட்டு – கொஞ்சம் உயரே பறக்க விரும்புபவர்கள் மட்டும் – உஸ்தாதின் Sur Dhwani முழு ஆல்பத்தையும் (MP3) இந்த தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து மகிழுங்கள். நன்றி
*
Thanks to : Hamheen
*
last updated on 01.08.2019
*
தீன் :
ராகத்தின் தாகம் நீ
தாளத்தின் மூலம் நீ
சாந்தியின் ஆத்மாவுக்கும்
ஆத்மாவின் சாந்திக்கும்
ஆருயிர் நண்பன் நீ!
சுமைகளை ஓட வைப்பாய்
இமைகளை மூட வைப்பாய்
குரல்களை கூட வைப்பாய்
விரல்களை ஆட வைப்பாய்
மொழியின் மொழியே!
செவியின் விழியே!
நீ இசையாவிட்டால்
வாத்தியக் கருவிகள்
வாழ்க்கை இழந்திருக்கும்
புல்லாங்குழலில்
ஓட்டை போட்டது உனக்காக
எல்லா மொழியிலும்
பாட்டை போட்டதும் உனக்காக
நீ விருந்தும் தருகிறாய்
மருந்தும் தருகிறாய்
உனக்கு எத்தனை முகங்கள்
தொட்டிலுக்கு தாலாட்டு
கட்டிலுக்கு கெட்டிமேளம்
வீட்டுக்கு திரைப்பாடல்
நாட்டுக்கு தேசியகீதம்
நடனத்தில் சலங்கை ஒலி
மரணத்தில் ஒப்பாரி
தொட்டில் முதல் சுடுகாடு வரை
தொடர்ந்து வரும் தோழன் நீ
உன் நீண்ட ஆயுளுக்கு
பிரார்த்தனை தேவையில்லை
தொடரட்டும் உன் தொண்டு…
*
நன்றி : நாகூர் தீன் | dnh@pacific.net.sg