ஏ.ஆர்.ரகுமானுக்கு புகழ் மாலைகள் குவியும் இத்தருணத்தில் எப்பொழுதோ ‘கிளிக்’கிய இந்த புகைப்படம் தங்களுக்கு உதவியாக இருக்கலாம் அல்லவா? – அப்துல் கையூம்
இருக்கும் – எங்கே, எப்போது, யாரால் ‘க்ளிக்’கப்பட்டது என்று சிறு குறிப்பு இருக்கும் பட்சத்தில். இயன்றால் அதை கவிதையாகச் செய்து அனுப்பி வையுங்கள். உடனே ஆபிதீன் பக்கங்களில் பிரசுரமாகும்!
1992-ஆம் ஆண்டு’ரோஜா’ படம் வந்த புதிதில் என்று நினைக்கிறேன்இடம் : குருவி சாபு இல்லம்உடன் இருப்பவர் : அப்துல் ரஜாக். ஹாரூன் அவர்களின் புதல்வர். (கெளஸ் அவர்களின் தம்பி);கிளிக்’கியது யார் தெரியவில்லை.பழசு பட்டதை கிண்டியதில் கண்ணில் தென்பட்டது. – அப்துல் கையூம்
***
‘ரோஜா’ ஈன்ற ரோஜா

அமைதியான ‘இசைப்புயல்’
இச் சின்னப் பயல்
உருவம் சிறியது;
இவனுக்கு
உலகமும் சிறியது
சிறு வயதிலேயே
விறுவிறுவென்று
உலகை வலம் வந்தவன்
நமக்கெல்லாம்
உள்ளங்கையில் ரேகை
இவனுக்கோ
உள்ளங்கையில் உலகம்
சிந்தசைஸரினால்
சிந்தனைச் செய்யும்
சிந்தனைச் சிற்பியிவன்
இசையில் எதை கலக்கின்றான்
இந்த லாகிரி வஸ்தாது?
கேட்டதும்
கிறுகிறுத்துப் போகின்றோமே?
(ஆர்மோனியக்)
கட்டையைப் பிடித்து
பட்டையைக் கிளப்பும்
கெட்டிக்காரன் இவன்
இவனை
‘நம்மவன்’ என்று
பீற்றிக் கொள்ளுகையில்
உதடுகள் கூட
ஒட்டிக் கொள்கிறது
சாந்தமான இவனின்
காந்த இசை
வடதுருவம்
தென்துருவம்
இரண்டையும் இணைக்கும்
பரிகாசம் செய்தவர்களெல்லாம்
இவன்
பிரகாசத்தைக் கண்டு
வாயடைத்து
வனவாசம் போய்விட்டனர்.
பாவேந்தன் புரட்சிக் கவிஞன் என்றால்
இவ்விசை வேந்தன் புரட்சிக் கலைஞன்
இசையுலக வரை படத்தில்
இந்தியாவை இணைத்த
இசைத் தூதுவன் இந்த
நவீன தான்சேன்
ரகுமானுக்கு இதுபோன்ற
வெகுமானமெல்லாம்
தொலைவானம் அல்ல
தொடுவானம்தான்
இவன்
‘ஆஸ்கார்’ வாங்கட்டும்
அப்புறம் பாருங்கள்
‘ரோஜா’ தந்த ரோஜாவை
சட்டைப் பையில் குத்திக்கொள்வான்
ஒவ்வொரு இந்தியனும் .
**
நன்றி : அப்துல் கையும்
***
ரஹ்மானின் பரந்துபட்ட இசைத் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம் இது (கோல்டன் குளோப் விருது) என்று நான் கருதுகிறேன். 1992ல் இசையமைத்த ரோஜா முதல் இன்று வரை தொடரும் இடைவிடாத இசைத் திறமையின் வெளிப்பாட்டிற்கு கிடைத்த பரிசு இது. மென்மையான காதல் மெல்லிசை மெட்டுக்கள், சாஸ்திரீய பாணி பாடல்கள், கஜல் அடிப்படையிலான பாடல்கள், தாளம் போட வைக்கும் டெக்னோ பாடல்கள், இன்றைய ஹிப் ஹாப் பாடல்கள் போன்றவைகள் எல்லாம் வழியாக இந்திய திரை இசையில் ஒரு புதிய பரிமாணத்தையை அவர் உருவாக்கினார். புதிது புதிதாக பல்வேறு இசைக் கருவிகளையும் ஓசைகளையும் பயன்படுத்திய ரஹ்மான் கடந்த 18 வருடங்களில் இந்திய வெகுஜன இசையில் பல உச்சங்களை தொட்டிருக்கிறார். – ஷாஜி