இங்கே இலவச தமிழ் ஆடியோ புத்தகங்கள் கிடைக்கும் (4.44 GB)

இலவசமென்றதும் என்ன வேகமாக ஓடி வருகிறீர்கள், என்னைப் போலவே! வாழ்க.  இப்போது நான் கேட்டுக்கொண்டிருக்கும் வாரியார் சுவாமிகளின் மஹாபாரத உரை முதல்,  தென்கச்சி சுவாமிநாதனின் ‘இன்று ஒரு தகவல்’, கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’, முனைவர் கு. ஞானசம்பந்தனின் ‘சிரிக்கலாம் வாங்க’, அறிஞர் அண்ணாவின் சுதந்திரம் (முஸ்லீம்கள் கவனிக்கவும் : இதில் இஸ்லாம் பற்றிய 80 கே.பி உரையும் அடங்கும்!), நடிகவேள் எம்.ஆர். ராதா, வைரமுத்து, திருச்சி கே.கல்யாணராமன், முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சார்யர், டி.ஏ.ஜோஸப், சுகி.சிவம் மற்றும் பலரின் ‘ரிலாக்ஸ் ப்ளீஸ்’ உரைகள் கீழ்க்கண்ட சுட்டியில் கிடைக்கின்றன. PDF சென்ஷி மாதிரி MP3 சென்ஷியாக விளங்கும் எமது நண்பர் எம்.டி. மூர்த்திக்கும் எழில்மிகு கடற்கொள்ளைக்காரனுக்கும் நன்றி.

இங்கே சொடுக்கி டோரண்ட் கோப்பை இறக்குங்கள். சுட்டி வேலை செய்யாவிடில் வேறு காதுகளை வாங்கிக் கொள்ளுங்கள் 🙂

வாரியார் சுவாமிகள்

‘சோதனை வரும்போதெல்லாம் நமது நன்மைக்கு என்று எண்ணுவேன்’ என்கிறார் சுவாமிகள்.  ஹஜ்ரத் சொன்னதுதான். எல்லா பெரிய உள்ளங்களும் உரைப்பதுதான். நமக்கு விளங்கத்தான் நாளாகிறது. நேற்று முழுக்க அவருடைய சொற்பொழிவுகளை முருகன் பக்தி தளத்திலிருந்து இறக்கி கேட்டுக்கொண்டிருந்தேன்.  இன்றும் அந்த ஆன்மீகக் கடலின் நினைவு மேலோங்கி நிற்பதால் அபூர்வமான புகைப்படங்கள் அடங்கிய இந்த வீடியோவை இணைக்கிறேன். அவசியம் பாருங்கள். நலமே விளையும்.

***

***
நன்றி : பொதிகை தொலைக்காட்சி, குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்