நண்பர் நாகூர் ரூமியின் ‘நதியின் கால்கள்’ கவிதைத் தொகுப்பில் இருக்கும்
இந்தக் கவிதை எனக்குப் பிடிக்கும் – அவரைப்போல நானில்லை என்பதால்!- AB
என்னைப்போலவே
அப்பாவுக்கு ரொம்ப வருத்தம்
அவரைப்போல நானில்லை என
அம்மாவுக்கும் ரொம்ப வருத்தம்
அவளைப்போல நானில்லை என
இப்படியெல்லாம் வருத்தப்பட
வேறெவரும் வரமாட்டார்
என்றாலும் எனக்குண்டு
எப்போதும் சந்தோஷம்
என்னைப்போலவே
நானிருப்பதில்.
*
நன்றி : நாகூர் ரூமி , ஸ்நேகா
நாகூர் ரூமி said,
30/03/2022 இல் 10:39
அருமை! என்னைப்போல நீர் இல்லாமலிருப்பதுதான் எனக்கும் நல்லது!
ஆபிதீன் said,
30/03/2022 இல் 11:13
ஹாஹா, சூப்பர் பதில்ங்னி.