பாகனேரி K.பில்லப்பன் நாதஸ்வரம்

Nadaswaram vidvan, Sri Pillappan, performing Nadaswaram music beautifully inside a temple. Have not heard music more beautiful than this in recent times. Unalloyed and unsullied by anything. – indiaviews

*

Kay Vee in FB :

சஹானாவின் சாரல்
—–
இன்னும் முறையான கோடை காலம் ஆரம்பிக்கவில்லை , வசந்தத்தின் ஓரிரு வாரங்கள் இன்னும் மீதமிருக்கிறது . இத்தோடு நீண்ட கால பருவநிலை மாற்றமான La Nina வும் இந்த வருடம் தொடங்கியிருப்பதால் ஒரே கலவையாக வானிலை மாற்றங்கள் , தெளிந்த வானம் கொண்ட காலைகள் , இடி மழையான மதியங்கள் , வெது வெதுப்பாக நீராவி மணம் அடிக்கும் மாலைகள் என்று யாரோ ரிமோட்டை அழுத்தி விளையாடுவது போலாகிவிட்டது வானிலை
இன்று காலை கார் டீலர்ஷிப்பில் ஒரு சின்ன வேலைக்காக வண்டியை விட வேண்டியிருந்தது , வேலை முடிய ஒரு மணி நேரம் ஆகும் என்றார்கள் காத்திருக்கிறீர்களா என்று கேட்டார்கள் . அங்கேயே உட்கார்ந்து ஏதாவது வாசித்துக்கொண்டிருந்திருக்கலாம் . இல்லை ஒரு சின்ன நடை போய்விட்டு வருகிறேன் என்று கிளம்பினேன் .
கிளம்பிய ஓரிரு நிமிடங்களிலேயே நல்ல மழை . திரும்பிப் போய்விடலாமா என்று யோசித்து முடிப்பதற்கும் வந்த வேகத்திலேயே மழை நின்று விட்டது . சரி வந்தால் வரட்டும் என்று ஹெட்போனை மாட்டிக்கொண்டு மீண்டும் நடக்க ஆரம்பித்து விட்டேன். வெறேதோ பாட்டு கேட்டுக்கொண்டிருக்கு யூடியூபில் அதுவாக தேர்ந்தெடுத்து அடுத்து இந்த நாதஸ்வர இசையில் வந்து நின்றது .
யார் வாசித்தது என்று கூட பார்க்கவில்லை ஆனால் அந்த பத்து நிமிடங்களில் அப்படியே மெய்மறக்க வைத்து விட்டது , எதிர்பாராமல் கேட்கக் கிடைக்கும் நல்லிசை ஒரு வரம் . திரும்ப வரும் வரை பலமுறை இதையே மீண்டும் மீண்டும் கேட்டிருந்தேன். அற்புதமான சஹானா ஆலாபனை . அப்படியே எல்லாவற்றையும் கழுவி விட்டதுபோன்ற உணர்வு , தன்னென்று இருந்தது .
கேட்டுப் பாருங்கள்.

இந்த நாதஸ்வர இசை இந்தப் பாடலையும் நினைவுறுத்தும் , இதுவும் சஹானாவில் அமைந்தது தான் .
Chenthar Mizhi – Perumazhakkalam

*

Geetha Narayanan in FB :

இந்த அருமையான சஹானாவை முன்பே பகிர்ந்திருந்தேன்.நிறைய சிற்றூர் கோவில்களில்,திருமண வீடுகளில் பிரமாதமாக நாதஸ்வரம் வாசிப்பவர்களைப் பார்க்கிறேன்.இவர்களுக்கு ஏன் அங்கீகாரம் இல்லை என்பதே வேதனை.சென்ற வருடம் பிரமாதமாக நாதஸ்வரம் வாசித்த இரு பெண்களை மதுரையில் சந்தித்தேன்.
சஹானாவை எளிதாக விளங்கிக் கொள்ள சில திரைப் பாடல்கள்.
வீர அபிமன்யு படத்தின் பார்த்தேன் ,சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்.
பார்த்தாலே பரவசம் திரைப் படத்தின் அழகே சுகமா
ரயில் சினேகம் தொடரின் இந்த வீணைக்குத் தெரியாது.
பெரு மழைக்காலம் மலையாளப் படத்தின் செந்தார்மிழி.

*

Thanks to : Kay Vee & Geetha Narayanan

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s