பருந்தானவன்

சகோதரர் சு.மு.அகமது எழுதிய ‘பருந்தானவன்’ சிறுகதைத் தொகுப்புக்கு முகநூலில் நண்பர் இரா.சுந்தரபாண்டியன் எழுதிய விமர்சனம் இது. நன்றியுடன் பகிர்கிறேன்.
*

புயல், மழையில் சிக்கி சிரமப்படாதவாறு மேகங்களுக்கு மேலாக பறந்து செல்லும் திறன் படைத்தவை பருந்துகள். மேகங்களுக்கு மேலாக உச்சபட்ச உயரத்தில் பறக்கும்போது தனது இறக்கையை பருந்துகள் விரித்து காற்றில் மிதந்து ஓய்வெடுக்கும்போதும் பூமியில் தனது இரை மீதான அவதானிப்பை பருந்துகள் விலக்குவதில்லை.

எனது நண்பர் முஸ்தாக் அகமது பாய் எழுதிய “பருந்தானவன்” சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 18 சிறுகதைகளை வாசித்து முடித்த பின்பு ஒரு பருந்தின் மேற்கண்ட குணாதிசயங்கள்தான் நினைவுக்கு வருகின்றன.

மொத்தம் 128 பக்கங்களை கொண்டுள்ள “பருந்தானவன்” சிறுகதைத் தொகுப்பை இரண்டு முதல் மூன்று மணி நேரத்துக்குள்ளாக வாசித்துவிட இயலும் என்றுதான் கையிலெடுத்தேன். ஆனால் முதல் சிறுகதையான ‘தென்றல் மறந்த கதை’ யை வாசித்த பிறகு அதன் தாக்கத்திலிருந்து என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு இயல்பு நிலைக்கு நான் மீண்டும் திரும்புவதற்கே இரண்டு முதல் மூன்று மணி நேரம் எனக்குத் தேவைப்பட்டன. இப்படியாக இத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு சிறுகதையையும் படித்து அதன் தாக்கம் என்னுள் இறங்கி அதிலிருந்து நான் மீண்டு மீண்டு…மீண்டும் மீண்டும் வாசித்து…தொகுப்பை முழுவதுமாக வாசித்து முடிக்க எனக்கு நான்கு நாள்களாகின.

வாசித்து முடித்த கையோடு இத்தொகுப்பின் ஆசிரியரும் எனது நண்பருமான முஸ்தாக் பாயிடம் சுமார் ஒன்னரை மணி நேரம் கைப்பேசியில் 18 சிறுகதைகள் குறித்து அளாவளாவிக் கொண்டிருந்தேன். அவர் எனது நண்பர் என்னும் உறவு கடந்து ஒரு வாசகன் ஓர் எழுத்தாளரை பாராட்டி அளிக்கும் கௌரவம் அது. ஓர் எழுத்தாளருக்கு வாசகன் அளிக்கும் அங்கீகாரம் அது.

‘நிவேதிதாவின் வயசுக்கென்ன இப்போது? (அல்லது) குருத்து வாசனை’ என்ற சிறுகதையின் தலைப்பும் சரி அதன் முடிவும் சரி எப்பேர்பட்ட தேர்ந்த வாசகனும் எதிர்பாராததும் ‘சபாஷ்’ எனகதையாசிரியரை பாராட்டத் தூண்டுவதும் ஆகும்.

தண்ணீர்த் தீவு, ஞாபக விருட்சம், சதுரத்தின் விளிம்பில், வேதங்களிலிருந்து தூரமாய் இருப்பவன்…. என ஒவ்வோர் சிறுகதையும் வாசகரின் ஒவ்வோர் ஞாபக அடுக்கையும் நிச்சயம் கிளறும்; அதுகுறித்து உரையாடவும் சிந்திக்கவும் தூண்டும்.

சிஆர்பிஎஃப் முன்னாள் இன்ஸ்பெக்டர், வழக்குரைஞர், தொழில் முனைவோர் என பல்வேறு பரிமாணம் கொண்ட ஒருவர் எழுத்தாளர் என்ற அவதாரம் எடுக்கும்போது கதைகள் படரும் தளமும், அவைகள் உரைக்கும் கருத்துகளும் அகலமாய் மட்டுமல்ல; ஆழமாயும் இருப்பதில் வியப்பொன்றும் இல்லையே என்றெண்ணிக் கடந்துவிட ஏலாதபடிக்கு 18 சிறுகதைகளை உள்ளடக்கி வெளியாகியிருக்கும் ‘பருந்தானவன்’, சிறுகதை வாசகர்களுக்கு நல்விருந்தானவன் என்பது உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை.

தமிழ்கூறும் சிறுகதை உலகில் தனது வரவை அழகாய் பதிவு செய்துள்ள பருந்தானவனை வருக! வருக!! வருக!!! என வாழ்த்தி வரவேற்கிறேன். அழகாக அட்டைப்படம் வரைந்த யாழன் ஆதிக்கும், நண்பர் முஸ்தாக் அகமது பாய்க்கும், அச்சேற்றிய கோதை பதிப்பகத்தாருக்கும் எனது வளர்பிறை வாழ்த்துகள்.

புத்தகம் வேண்டுவோர் கோதைப் பதிப்பகத்தின் Naan Rajamagal
அவர்களை தொடர்பு கொள்ளவும்.

*

நன்றி : இரா.சுந்தரபாண்டியன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s