சுத்தப்பால் – இஜட். ஜபருல்லாஹ்
————–
பாலில் ஒரு துளி
புளிப்பு கலந்தால்
பாலே கெட்டுத்
திரிவது இயற்கை..!
அன்று –
மூலவனின்
சொர்க்கப் பானையில்
பாலொடு பாலே
கலந்து போனதால்
பாவப் புளிப்பே
மிச்சம் ஆனது..!
அப்பால் –
புளிப்பு ஏறிய
அந்தப் பாலே
பூமியில் – கீழே
சொரியப்பட்டு
திரிந்தது..!
பின் –
பாவ மன்னிப்பெனும்
மூலிகை மருந்தால்
தூய்மை அடைந்து
அரை ஆடையும் பெற்றது..!
பரமனைப் போற்றி
பானையில் மீண்டது..!
இங்கு –
பாவப் புளிப்பு மட்டுமே
பூமியின் எச்சமாய்
தங்கிப் போனது..!
அருட்கொடையாக
வந்த அண்ணலே..!
நீங்கள்தான் – மறைப்
போதனைச் சூட்டால் – அதை
சுத்திகரித்தீர்கள்..!
அதனால் –
உலகில்
உறவின் நிலைகள்
உன்னதமாயின..!
பால்கள் கலப்பு
பரிசுத்தமாயின..!
திருமணம் எமக்கு
’சுன்னத்’ ஆனது..!
உங்களால் மட்டுமே
மறுமையில் நாங்கள்
சுத்தப் பாலாய்
சொர்க்கப்
பானையில் நிறைவோம்!
*
நன்றி : சடையன் அமானுல்லாஹ்
மறுமொழியொன்றை இடுங்கள்