மின்தூக்கி

தூக்குவது பற்றி நண்பர் ஆசாத் எழுதியிருப்பது உற்சாகம் தருகிறது!

//1857ம் ஆண்டு முதலாக மின்தூக்கிகள் கட்டிடங்களின் செங்குத்துப் போக்குவரத்துக்கான பயன்பாட்டில் இயங்கிவருகின்றன. பயனர்கள் செல்லும் கூண்டு, அது மேலும் கீழும் சென்றுவரத் தண்டவாளம், கூண்டின் எடைக்கும் பயனர்களின் எடைக்கும் எதிர் எடை, அனைத்தையும் இணைக்கும் எஃகு முறுக்குக் கயிறுகள், இயக்கும் இயந்திரம், கதவுகள் இவற்றை மின்தூக்கிகளின் முக்கியமான பாகங்கள் எனச் சொல்லலாம்.// என்று சிறு குறிப்பும் வரைகிறார், எச்சரிக்கையாக. வாழ்த்துகள்.

ஆசாத் நாவல் பற்றி ஃபேஸ்புக்கில் அய்யனார் விஸ்வநாத் எழுதியதை நன்றியுடன் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

*

அபுல்கலாம் ஆசாத் அவர்களின் மின்தூக்கி நாவலை வெளிவருவதற்கு முன்பே வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1980 மற்றும் 90 களின் வளைகுடா வாழ்வை நாவலாக எழுதியிருக்கிறார். சவுதி அரேபிய நிலம் குறித்தும் அங்கு வேலை நிமித்தம் செல்லும் தமிழர்களின் தனியர் வாழ்வு குறித்தும் சுவாரசியமான மற்றும் இலகுவான மொழியில் எழுதப்பட்டிருக்கும் நாவல்.

சவுதியிலிருந்து கதை துபாய்க்கும் வந்து சேர்கிறது. கதையின் நாயகனான ஆரிஃப் பாஷாவிடமிருந்து நடுத்தர வர்க்கத்திலிருந்து வந்த – குடும்பம் மற்றும் வேலை சார்ந்து வளைகுடாவில் வசிக்க நேரிடும் நம் ஒவ்வொருவரின் தன்மைகளையும் பார்த்துக் கொள்ள முடியும்.

பெரும்பாலான வளைகுடா வாசிகளின் பிரதிநிதியாக சித்தரிக்கப்பட்டிருக்கும் ஆரிஃப் பாஷாவின் பயணமும் எதிர்காலம் குறித்தான கனவுகளுடன் வாழும் இளைஞனின் மன ஓட்டமும்தான் இந்த நாவல். வளைகுடாப் பின்னணியிலிருந்து வந்திருக்கும் மின்தூக்கி நாவலுக்கு வரவேற்பும் அன்பும்.

ஆசாத் அண்ணனின் தனித்துவமான பல குணங்களை ஆரிஃப் பாஷாவிடமும் காண முடிவது இன்னொரு சுவாரசியம்
*
நன்றி : அய்யனார் விஸ்வநாத்

அமேஜானில் வாங்க இங்கே அழுத்தவும்.

*

முப்பத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கிச் சுழன்று பார்க்கும் கதை இது. சவூதி அரேபியாவில் வரிசையில் நின்று, நிமிடத்துக்குப் பதினாறு ரியால் நாணயங்களை பொதுத் தொலைபேசியில் ஒவ்வொரு நாணயமாகப் போட்டுக் குடும்பத்தாருடன் வளைகுடாவாசிகள் உரையாடிய நாள்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரச் செய்த முயற்சி இது. அபாரமான வளர்ச்சியை நோக்கி துபை சென்றுகொண்டிருக்கையில் அதனுடன் சேர்த்துத் தன்பயணத்தையும் அமைத்துக்கொண்டவனின் சில ஆண்டுகளை வாழ்ந்து பார்க்கும் களம் இது. – ஆசாத்

 

 

2 பின்னூட்டங்கள்

 1. 27/11/2019 இல் 11:12

  ’மின்தூக்கி’ பற்றி பிலால் அலியார் எழுதியது :

 2. 31/12/2019 இல் 15:24

  ’மின் தூக்கி’ பற்றி முகநூலில் ஜ்யோவ்ராம் சுந்தர் எழுதியது :
  அபுல் கலாம் ஆசாத் சாரின் மின்தூக்கி படித்து முடித்தேன்.

  இந்த நாவலில் எனக்குத் தெரிந்த முக்கியப் புள்ளிகள் :

  1. ஆற்றொழுக்க நடை. எங்கேயும் தடுக்கவேயில்லை.

  2. அருமையான தமிழ். அங்குலம் என்ற வார்த்தையைப் பார்த்தபோது அவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்தது. சி மோகன் போன்ற ஜாம்பவான்களே ஓநாய் குலச் சின்னத்தில் இன்ச் என எழுதியிருப்பதைப் படித்தவன் நான்.

  3. நம்பகத்தன்மை. எதார்த்த வகை நாவலுக்கு மிக முக்கியமானது இந்த அம்சம். ஒரு வரி, ஒரு தகவல்கூடச் சந்தேகத்தை எழுப்பவில்லை.

  4. மருந்துக்குக்கூட செக்ஸ் இல்லை. சினிமாவில் மது அருந்துவது, புகை பிடிப்பது தொடர்பாக ஸ்லைட் போடுவார்களே… அதெல்லாம்கூடத் தேவையே படாது இந்த நாவலுக்கு. முழு முற்றான கனவான் இந்நாவலின் கதைசொல்லி.

  5. அபாரமான உழைப்பு. அந்தந்தக் காலத்திய சினிமா பாடல்கள், எக்ஸ்சேஞ்ச் ரேட் எனப் பல விவரங்கள்.

  6. போகிற போக்கில் வாழ்க்கையின் தரிசனங்களைச் சொல்லிச் செல்கிறார் (ஒருத்தனோட முன்னேற்றம் பலரோட கூட்டு முயற்சி என்பது மாதிரி).

  சில வரிகள் திரும்ப வருகின்றன. ஓரிடத்தில் துபாயில் கதை நடக்கும்போது ரியால் செலவைப் பற்றி வருது (திர்ஹாமுக்குப் பதிலா). ரொம்ப யோசிச்சாலும் நிறைய தவறுகள் தெரியலை.

  மிக நல்ல வாசிப்பனுபவம். நண்பர்களுக்கு இந்நாவலைப் படித்துப் பார்க்கும்படி பரிந்துரைக்கிறேன்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s