இலக்கியத்தின் பணி வாழும் சமூகத்தின் கட்டமைக்கப்பட்ட போலித்தனங்களை, உண்மை என்ற தற்சார்புகளை எல்லாம் கலைத்துப் போட்டு ஒரு மனிதனை சரியான உயிர்த்தலை நோக்கி நகர்த்துவதாக இருப்பது. மனிதன் தன்னையே கேள்விக்கு உட்படுத்தி மாற்றிப்போடுவது. வாழ்தல் என்கிற போலி உலகின் நியதிகளை உயிர்த்தல் என்கிற நிலைக்கு நகர்த்துவது. அது ஒருவகையான சுயதேடலை நோக்கியது. அதற்காக நிறுவப்பட்ட உண்மைகளை எள்ளி நகையாடுவது. ஒருவனது சுயத்தை அதன் போலிக்கட்டமைப்பை கலைப்பது. சுயம் என்பதே பிறராதலில்தான் உள்ளது என்பதை நோக்கி நகர்த்துவது. தால்ஸ்தாய் துவங்கி காந்திவரை இந்த பிறராதல் சகமனித துயரை ஏற்றல் என்பதைதான் தங்களது செயல்வடிவமாக முன்வைத்தார்கள். வாழ்வின் போலித்தனங்களை வெளிப்படுத்திக் காட்டும் குறைந்தபட்ச பணியையாவது இலக்கியம் செய்யவேண்டும். இலக்கியம் புதிய மனிதனை படைக்க வேண்டும் புதுமைப்பித்தனை வாசித்த பின் இந்த உலகின் உண்மை என்பது எப்படி போலியானது என்பதை புரிந்துகொள்ளும் அனுபவம் கிட்டும். இப்படித்தான் தமிழின் மணிக்கொடி தொடர்ந்து இலக்கியவாதிகள் செயல்பட்டனர். ஆனால் இன்று… வெகுசன இலக்கியம் சீரிய இலக்கியத்தை தீர்மானிப்பதாக மாறி உள்ளது. இதுதான் வருந்தத்தக்கது. இலக்கிய மடங்கள், ஆதினங்கள், ஆலயங்கள் உருவாகி உள்ளன. இலக்கியத்தைதான் காணவில்லை. (மேலும்…. )
நன்றி : ஜமாலன்
https://www.facebook.com/jamalan.tamil
http://jamalantamil.blogspot.com/
மறுமொழியொன்றை இடுங்கள்