சாஹூல்ஹமீதே நாகூரி…

இன்று நாகூர் கந்தூரி ஆரம்பம். எவ்வளவோ முயன்றும் போக இயலவில்லை. இந்த ஏழை மேல் என்ன கோபம் எஜமானுக்கு என்றுதான் தெரியவில்லை. எனக்குப் பிடித்த புலவர் ஆபிதீன்காக்காவின் பாட்டைப் பகிர்கிறேன். (பாடியவர் : – மர்ஹூம் ஈ.எம் ஹனீபா).  தமிழ் முஸ்லீம்களுக்கு என் சின்னமாமா நிஜாம் (‘கடை‘ குறுநாவலில் – லத்தீஃப் மாமாவாக – வருபவர்) ரிகார்டிங் செய்து கொடுத்த பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று. அனுப்பிவைத்த அசனாமரைக்காயருக்கு நன்றி.
*

*

7 பின்னூட்டங்கள்

  1. soman said,

    16/03/2016 இல் 13:14

    இங்கே ரூமியை பார்த்தேன். ஒரு துளி பேசி வச்சேன்.
    உம் ஞாபகம் தான் வந்து தொலைத்தது. தெருல போறவன்லாம் மூட்டை மூட்டையா எழுதறான்.
    இந்த மனுஷனுக்கு வாயைத்தொறந்தா மார்க்கம்
    தான் வரது. பேசாம மடத்தில் எதாச்சும் சேர்ந்து
    இருக்க வேண்டியது தானே. உமக்கெல்லாம் எதுக்கு
    வேலை? சொல்லும்.

    எழுத்தன்றி வேறொன்றும் அறியாமல்
    போகக்கடவதுன்னு சபிக்கிறேன்.

  2. soman said,

    16/03/2016 இல் 13:44

    நந்தன் நாளைப்போவேன்னு மனங்குமையறா மாதிரி இருக்கு உம்ம பதிவு. நீர் எடம்பர போய் இருந்துட்டு புலம்பினா என்ன பண்ணுவார் உங்க சுவாமி?.
    வேணும்னா, “வருகலாமோன்னு” எங்க சாரோட பாட்டு ஒண்ணு இருக்கு. கொஞ்சம் கொடஞ்சு தேடி கேட்டுப்பாரும். இல்லாட்டி தரேன். (ராமநாடக கீர்த்தனை (கேவிஎன் பாட்டு).

    எங்க மயிலாப்பூரில் இன்னிக்கு அதிகார நந்தி சேவை. “காணக்கண் கோடி வேண்டும்” னு பாபநாசம் சிவன் கதறி இருக்கார். எனக்கு போணும்னு தோணலை. அறிவில்லையா கொடுப்பினை இல்லையான்னு தெரியலை. தீபாவளி கூட வயசாக வயசாக அதோட மத்தாப்பு சந்தோஷங்கள் மறந்து, வெறுமனே போகணும்னு ஒரு
    வேலையாக மட்டுமே மனசை படுத்துகிறது. எப்படி ரயில் பிடிக்க, கூட்டமாச்சே, வேலை கெடக்கே அப்படின்னு தான் புத்தி போகுது. என்ன செய்ய.

    மகாமகம் போயிட்டு வந்தேன். ஏகப்பட்ட இடைஞ்சலில் . எல்லா உற்சவ மூர்த்திகளும் வலம் சூழ தீர்த்த வாரி. ஆஹா. என்ன சொல்ல, காத்திருந்து காத்திருந்து “அவனருளாலே அவன் தாள் வணங்கி” ன்னு சொல்றதை அனுபவிச்சா
    தான் தெரியும் ஓய்.

    • 16/03/2016 இல் 15:39

      அவனவன் ஃபேஸ்புக் ட்விட்டர்னு ப்ள்ஸ்னு போய்ட்டான், தளமா, யார் வந்து பார்க்கிறார்கள்? தவிர, அரபு நாட்டுல இருந்துகிட்டு அவ்வளவு சங்கடங்கள் சார். ஒரு நொடி உங்க சாமிட்ட எனக்காக துஆ (ஓ, மதமா?!) கேட்டிருப்பிங்களா? எழுத்தாம் எழுத்து! போங்க, உங்கள் மேல் கோவம்…

      • soman said,

        17/03/2016 இல் 14:18

        பிரிய ஆபிதீன்,

        அந்த “பத்தே மாறி” படம் பாத்துட்டு ரொம்ப மனசு நொந்து போனேன். முந்தி “அரபிக்கதா” கூடத்தான். ‘அட பாவி’ ன்னு இருந்துச்சு அன்னிக்கு பூரா.

        சுஜாதா கூட இந்த நடப்பில் யோசிச்சு இருப்பார். அந்த கதை அனேகமா ஸ்ரீ ரங்கத்து தேவதைகள்ல இருக்கும். அந்த அணுகுமுறை இது போல் தான்.
        மிகச்சிறு வயதில் தன் பாட்டிக்கு இஷ்டமான ஒரு அய்யங்கார் ஜீனியஸ் நாராயணன் என்கிற நாணா. அத்தனை வேதங்களும் அத்துப்படி. பாடசாலைக்கு
        ஒரு வாரிசு இருக்கு என்று மகிழ்ந்து இருக்க, திடீரென்று காட்சிகள் மாறும். ஒரு மகா நிமிஷத்தில் உச்சிக்கு போய் கடைசியில் ஒரு கணம் விமான
        நிலையத்தில் க்ளியரன்சில் சவப்பெட்டிக்கு உள்ளே இருந்ததை பாக்கறப்போ, அவன் ஏதோ சொல்ல வரான்னு தோணிற்று என்பார்.

        நம்ம பயலுவ சோறு தான் திங்கரானுகளான்னு தோணும். என்ன மாதிரி தீம் எல்லாம் எடுத்து பொளக்கறான் அவனவன். இங்க ஏன் பாயை
        பிறாண்டறான்கள் எப்போவும்?. அந்தப்புள்ள காவ்யாமாதவன் நடிச்ச படம் மட்டும் எப்பிடியோ தப்பிச்சு போய்டுச்சு. தேடணும். நல்லாப்
        புலம்பறீர்னு யாரோ தட்டிக்கொடுத்தா மாதிரி வஞ்சு தள்ளறீங்க ஊரை.நம்ப பயலுக யாரும் வந்திடப்படாதுன்னு தானான்னு தெரியலை.

        உமக்கு துவா என்ன கேக்கட்டும், திரும்ப இங்க வரணும்னுட்டா, இல்ல பொண்டு புள்ளைகளோட அங்கேயே போயி சேரணும்னுட்டா, சொல்லுங்க. நிறைய கேட்டாச்சு. மனசுக்குள்ள. அம்புட்டு தான். அதுசரி, திரியும் திரியும் அந்த ஊரை ஏன்யா கரிச்சு கொட்டறீர்? வேணா ஊரைப்பேத்துட்டு அங்கன ஊணிடலாமா?

        “போதும்யா காசு” என்பார் அப்பா. கண்ணு கலங்கறது. உமக்கு எழுத ஆரம்பிச்சா இது ஒரு இம்சை.

  3. 19/03/2016 இல் 09:53

    உங்கள் பிரியமும் பிரார்த்தனையும் தெரியும் சோமன். சும்மா சொன்னேன். வீட்டு விசேசத்திற்கு பணம் அனுப்பிவிட்டு எப்படி நடக்கிறது என்று ஃபோன்செய்து கேட்கும் ‘பதேமாரி’ மம்முட்டிக்கு ஒருத்தியாவது ஒழுங்காக பதில் கொடுக்க மாட்டாள். கலங்கி நிற்பார் . அவர் ஃபோன் செய்யும் இடம் , என் அலுவலகத்திற்கு மிக அருகே உள்ள க்ளாக் டவர். அங்கிருந்து பலமுறை நானும் பட்டிருக்கிறேன்.

    பார்த்து அழுத படங்களுள் இதுவும் ஒன்று. நண்பர் போகன் சங்கர் எழுதிய விமர்சனத்தை என் வலைப்பதிவிலும் பகிர்ந்திருக்கிறேன் . வாசியுங்கள் :
    சுட்டி : http://abedheen.blogspot.ae/2015/12/blog-post_16.html

    சுஜாதா எழுதிய அந்த வரி சரியாக எந்தக் கதையில் இருக்கிறது என்று சொல்ல முடியுமா? நானும் தேடிப் பார்க்கிறேன்.

    ஊர் வந்தால் ஒரு நாளாவது உங்களை இம்சை செய்யாமல் ஓயமாட்டேன்.

    வஸ்ஸலாம்!

    • அனாமதேய said,

      19/03/2016 இல் 15:00

      நீர் படித்து பின்னூட்டமிடுவதற்குள் விடிந்து போகுமென்று இருந்தேன். அடடா, பாவம் நீர்
      மூணு நாள் லீவில் நெட் பக்கம் போகாமல் படம்
      பாத்துட்டுக் கிடப்பேண்டு தானே சொல்லி இருந்தீர்
      ஒரு தடவை. உமக்கு முதல் முதல் எழுதும்போதும் இப்படித்தான் தடுத்தாட்கொண்ட மாதிரி பதில் வந்தது.

      இந்த மாதிரி நிமித்தங்கள் எல்லாம் பூர்வ ஜன்ம
      வாசம்ன்னு வச்சிக்கலாம். நாத்தம்னு கூட. (செண்ட் நாத்தம் தான்.) நாகூர் ரூமி கூடத்தான் ஒரு தடவை நல்லி விழாவில் என்கூட பேசிக்கொண்டே இருந்தார். ரொம்ப நேரம். ஒரு வெள்ளை வெளேர் மல்லிகை போல. பேசாம வீட்டுக்கு வாங்க சார்ன்னு கூட்டுட்டு போய்
      இருக்கலாம் போல இன்னும் ஒரு தோ|ணல். .

      போற போக்கைப் பார்த்தால் பத்தி எழுதறதை விட உம்மைப் – பற்றி எழுதவே மனம் மகுந்து போகுதென் சகா… இதைப்படித்து முடியும் இன்னொரு ஈடு வெந்துக்கிட்டு இருக்கு.

      • 19/03/2016 இல் 15:06

        //இன்னொரு ஈடு வெந்துக்கிட்டு இருக்கு.// :)))


soman -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி