கூகுள் ப்ளஸ்ஸில், என்ஃபீல்ட் இளவஞ்சி தந்த முகவரி மூலம் கிடைத்த விகடன் ‘சீமா சீரீஸ்’ ஜோக் இது. ‘மைதா கோந்து’ (!) ஒட்டிய மற்ற இமேஜ்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். சுவாரஸ்யம்!
ப்ளஸ்ஸில் இளவஞ்சி எழுதியது :
Flickrல் மைதாகோந்துன்னு ஒருத்தர் ( பெயரே படுசுவாரசியம் ) அந்தக்கால பத்திரிக்கை துணுக்கு விளம்பரம் சினிமா ஸ்டில்ஸ் எல்லாம் 844 புகைப்படங்களாக ஸ்கேன் செய்து வைத்திருக்கிறார்.
https://m.flickr.com/#/photos/31397567@N03/
ஒவ்வொன்றையும் பார்க்கப்பார்க்க மூளையின் மடிப்புக்குள் புதைந்திருக்கும் அந்தக்கால நிகழ்வுகள் சட்டென வெளிவருவது ஆச்சரியம். நாஸ்டால்ஜியா அதாங்க கொசுவத்தியின் பவர் சாதரணமானதல்ல!
சாம்பு சோப்பு லாட்டரி சினிமா போஸ்ட்ர் மூலம் செம்பகம் அக்கா, லாரிபட்டர சங்கர் அண்ணன், பேப்பர்பைப்போட்டு வார இறுதியில் சில்லரை எண்ணி கணக்கெழுதும் முக்குவீட்டு தாத்தா, சங்கரி சித்தி, நாலாப்பு கோபாலகிருஷ்ணன் நாமக்கல்லில் குடும்பத்தோட பார்த்த தீ படம், தொடர்களை பைண்டு புத்தகமாக்கும் செல்வியக்கான்னு ரெண்டுமணி நேரத்தில் எத்தனையெத்தனை மனிதர்களை வெளிக்கொணர்ந்து போட்டு அக்கடான்னு ஆக்கிய அந்த மைதாமாவு எங்கிருந்தாலும் வாழ்க!
ப்ளசுலக பெருசுங்களுக்கு சமர்ப்பணம்!
முகநூல் போராளிகள் அந்தக்கால அரசியல் துணுக்குகளை தேடியெடுத்து பொங்கல் வைக்கவும் 🙂
*
நன்றி : மைதா கோந்து & இளவஞ்சி
மறுமொழியொன்றை இடுங்கள்