நாஞ்சில் நாடனின் ‘கான் சாகிப்’

khan sahib cover1மும்பைக்கு 1972-ல் பிழைக்கப் போன நாஞ்சில் நாடனை திடீரென்றுதான் சந்திக்கிறார் கான் சாகிப். ‘இதில் அதிசயம் கொள்ள ஒன்றுமே இல்லை. பிரபஞ்ச வெளியில் ஏற்கனவே பெயரிடப்பட்ட கோள்களும், பின்பு காணப்பட்ட கோள்களும் இன்னும் அறிந்துகொள்ளக் காத்திருக்கின்றன. கோள்களும் ஒன்றையொன்று முட்டிக் கொள்வதில்லை. மோதிக் கொள்வதில்லை. உராய்ந்து கொள்வதும் இல்லை. ஒரு கோளின் ஓட்டுநர் எட்டிப் பார்த்து அடுத்த கோளின் ஓட்டுநரை, ‘தாய்ளி, லெப்ட் சிக்னல் போட்டுக்கிட்டு ரைட்ல திரும்பறான் பாரு” என வாழ்த்துவதும் இல்லை’ என்கிறார் நாஞ்சில்!

ஒருசமயம் ஏதோ ஒரு நாடகம் பார்த்துவிட்டு இருவரும் நள்ளிரவில் திரும்பும்போது நாஞ்சிலை கான் சாகிப் தன் ரூமிலேயே படுத்துக்கொள்ளச் சொல்கிறார்.

“இல்ல பாய், போயிருவேன்” – நாஞ்சில். அவர் இடம் ரொம்ப தூரம்.

“அரே சலோனா சாலா.. மை துஜே காண்ட் நை மாரேங்கா” என்கிறார் கான் சாகிப்.

அரைகுறை இந்தி தெரிந்த எனக்கே சிரிப்பு வந்துவிட்டது. அவ்வளவு அடி வாங்கியிருக்கிறேன்!  ‘அப்போது நான் புஷ்டியாக இருந்தேன். என் நண்பர் கான்சாகிபை பட்டாணிய இனம் என்று வேறு சொல்லியிருந்தார். எனது அச்சத்துக்கு அந்தரங்கமாய் ஆதாரம் இல்லை என்று சொல்ல இயலாது. நண்டுக்கு நாவூறாத நரி உண்டா?’ என்று நாஞ்சில் அடுத்து எழுதும்போது  இங்கே துபாய், ஷார்ஜாவிலுள்ள சில நண்பர்களை நினைத்து மேலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

சிரிப்பு மட்டுமே இல்லையே வாழ்க்கை?

கான் சாகிப் அடிக்கடி சொல்லும் ஒரு கவிதை வரியை நாஞ்சில் எழுதும்போது கண் கலங்கிவிடுகிறது.

எந்தக் கவிஞர் எழுதியதோ அறியேன், அந்த வரி இது :

யாவர் வீட்டு முற்றத்தில் நின்றும் கண்ணுக்குத் தெரியாத தடம் ஒன்று ஓடுகிறது கப்ருஸ்தானுக்கு.

ஒரு வரி போதும். கதையை இங்கே க்ளிக் செய்து வாசியுங்கள்.

ஒரத்தநாடு கார்த்திக்கின் களஞ்சியம் மூலமாக (பேசாமல் புத்தகத் திருவிழாவில் ஒரு பிடிஎஃப் ஸ்டால் போடலாம் இவர்) அற்புதமான சிறுகதைகள் அடங்கிய ‘கான் சாகிப்’ தொகுதியைப் பதிவிறக்கியும் வாசிக்கலாம். ஆனால், PDF-ல் உள்ள ஒரே சங்கடம் , குப்புறப்போட இயலாது. கவனமாகப் போடவும்!
*

நன்றி : நாஞ்சில் நாடன், விகடன் , தமிழினி, ஏர்வாடி S.i.சுல்தான்பாய்

*
‘கான் சாகிப்’ பற்றி காமராஜ்-ன் சிறு விமர்சனம் : பிரியமான மனிதர்களை நினைவுபடுத்துகிற எல்லாமே பிரியமானதாகவும் பொக்கிஷமாகவும் மாறும். அப்படி ஒரு தோல்பையை மாற்றிக் கையில் கொடுக்கிற சிறுகதையை படிக்கும் எல்லோரும் தங்களை உரசிப் பார்த்துக் கொள்ளச் சொல்லும் . முடிந்தால் அப்படியொரு கதையை எழுதவேண்டும் என்கிற ஏக்கத்தை உண்டுபண்ணும் கதை ’கான்சாஹிப்’.

1 பின்னூட்டம்

 1. தாஜ்... said,

  20/01/2016 இல் 09:23

  // இவ்வாண்டு
  நாஞ்சில் நாடனுக்கு கிட்டிய
  சாகித்தியஅகாடமி விருதையொட்டி அவருக்கு
  சென்னை – ரஷ்யன் கல்ச்சுரல் அகாடமியில்
  ஜெயமோகன் தயவில் / டைரக்சனில்
  நடந்தேறிய பாராட்டுக் கூட்டத்தில்
  நாஞ்சில் நாடனின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பான
  ‘கான் சாகிப்’ வெளியீடும் நிகழ்ந்தது.

  விழாவுக்கு போயிருந்த நான்
  அத்தொகுப்பை அங்கே வாங்கினேன்.
  அன்று இரவே
  குறிப்பிட்ட அந்தக் கதையைப் படித்தேன்.
  மறுநாள் புத்தகத் திருவிழாவில்
  நாஞ்சில் நாடன் அவர்களை சந்திக்க வாய்த்தபோது
  ‘கான் சாகிப்’ குறித்து அவரிடம் சிலாகிக்கவும் செய்தேன்.

  ‘கான் சாகிப்’
  சுத்த யதார்த்தம் சார்ந்த புனைவு.
  ஜெயமோகனுடனான நேர்ப்பேச்சில்
  நிகழ்வின் சம்பவங்களை நினைவுகூர்ந்து
  நாஞ்சில் நாடன்
  சொல்வது மாதிரியான அமைப்பியல்.

  பம்பாயில் வைத்துப் பழகிய
  இஸ்மாமிய நண்பர் ஒருவரின்
  ஆத்மார்த்த நினைவுகளின் தொகுப்பாய்
  அவரது மாண்புகளையும்
  குறிப்பாய் அவரது விருந்து உபசரிப்புகளையும் மெச்சி
  நாஞ்சில் நாடன்
  மனமுருக சொல்லிக் காட்டியிருக்கிற கதைதான்
  ‘கான் சாகிப்’
  அது பலரது பாராட்டையும் பெற்றக் கதையும் கூட…. //

  ‘நாஞ்சில் நாடனின் கான் சாகிப்’ பற்றி
  மேற்கண்ட யென் சிலாகிப்பை
  ‘இஸ்லாமிய இலக்கிய இளவல்களுக்கு…..
  ஜெயமோகன் தந்திருக்கும் இருட்டுக்கடை அல்வா’
  விமர்சன கட்டுரையில் காண முடியும்!
  அத்தனைக்கு அழுத்தமான அழகு அது!

  *


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s