அசனா மரைக்காயர் மூலமாக அருட்கொடை வந்து விழுந்துவிட்டது காலையிலேயே. ‘பிறை காட்டும் ரமலான்’ பாடி உள்ளத்தைக் கொள்ளை கொண்ட A.R ஹாஜா பாடிய பாடலுக்கான சுட்டி அனுப்பியிருந்தார். அதைத் தவிர மற்ற பாடல்கள் நன்றாக இருந்தன! முக்கியமாக, ‘இணைகள் இல்லா குர்ஆன் ஞானபோதம் , இறைவன் அருளாலேதான் வந்த வேதம்…’ என்ற பாடல். கேட்டுப் பாருங்கள். ஒரான் பாமுக்கின் குதிரையுடன் நாளை வருகிறேன் 🙂
**
**
நன்றி : அருட்கொடை
Abdul Qaiyum said,
04/08/2014 இல் 19:44
இஸ்லாமியப் பாடல்கள் என்றால் வாய் ஒருபக்கம் கோண, மூக்கு விடைக்க, ஆள்காட்டி விரலை மார்பிலிருந்து இடது கண் புருவம் வரை மேல்தூக்கி பிறகு அதேபோன்று ரிவர்ஸில் இறக்கி, காதோரம் கைவைத்து, முக்கியமாக எட்டுகட்டை தொனியில் _____ தெறிக்க கத்தி பாடவேண்டும் என்ற நியதியை விடுத்து எதர்த்தமான குரலில் ஒலிக்கும் பாடல்.
ஆபிதீன் said,
05/08/2014 இல் 10:13
ஹாஹா, கொட்டை தெறிக்கப் பாடுபவர்களின் பெயர்களையும் கொடுத்துடுங்களேன்ஜீ :))
Abdul Qaiyum said,
05/08/2014 இல் 12:51
சீச்சீ.. (எட்டு) கட்டை தெறிக்க என்று மாற்றி படித்துக் கொள்ளவும்