எஸ்.ரா தேர்வு செய்த 100 தமிழ்ச் சிறுகதைகள் இலவசம் (pdf)

SRamakrishnan-Barathirajaநண்பர் எஸ். ராமகிருஷ்ணன் பட்டியலிட்ட தமிழின் சிறந்த நூறு சிறுகதைகளை ஒரு பைத்தியம் போல நாலைந்து வருடமாக தேடிஅலைந்து , கிடைத்ததை உடனே தட்டச்சு செய்து இணையத்தில் பகிர்ந்த எங்கள் சென்ஷிக்கு ஒரு நன்றியும் சொல்லாமல் 650 ரூபாய்க்கு புத்தகம் போட்டு விற்க முனைகிற சிலரின் அராஜகத்தைக் கண்டித்து pdf கோப்புகளை இங்கே இணைக்கிறேன். இதிலுள்ள எல்லா கதைகளும் அழியாச் சுடர்கள் தளத்திலும் தனித்தனியாகக் கிடைத்தாலும் ஒன்றாக pdfல் கிடைப்பது அநேகமாக இங்கேதான் (இனிமேல் எங்கும் கிடைக்கும், இன்ஷா அல்லாஹ்!) . ஒரு கிலோ  புத்தகமெல்லாம் தூக்கி அக்குளில் வைத்துக்கொண்டு சிரமப்படாமல் ஒரு மில்லிகிராம் pdfஐ எளிதாக தரவிறக்கி சேமியுங்கள். ஏன், படிக்கவும் செய்யலாம். சென்ஷி எங்கு தேடியும் கிடைக்காத சார்வாகனின் ‘கனவுக்கதை’, எஸ்,பொ’வின் ‘ஆண்மை’, செழியனின் ‘ஹார்மோனியம்’ கௌதம சித்தார்த்தனின் ‘தம்பி’ (சிறுகதை)போன்றவையெல்லாம் ஆபிதீன் பக்கங்களில்தான் முதன்முதலில் வெளியானது. இங்கிருந்து சுட்டு இணையத்தில் ‘தொகுப்புகள்’ போட்டவர்களும் நன்றி சொல்ல மறந்தது ஏனென்று தெரியவில்லை. இருக்கட்டும் அதற்கு ஒரு கதை இருக்கு.  ‘இந்தப் பட்டியலுக்கு வெளியிலும் அவசியம் வாசிக்க வேண்டிய பல முக்கிய சிறுகதைகள் நிச்சயம் இருக்கின்றன’ என்று எஸ்.ரா சொல்லியிருப்பதில் அது சேரட்டும். ஒரு விஷயம். pdf லிஸ்டில் ஏதோ ஒரு கதை கூடவந்து 101ஆகிவிட்டது. கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு சார்ஜா கஞ்சா பாக்கெட் இலவசம்! – ஆபிதீன்

Download :

எஸ். ரா  தேர்வு செய்த  சிறுகதைகள் (1 to 50)

எஸ். ரா  தேர்வு செய்த  சிறுகதைகள் (51 to 100)

***

நன்றி : எஸ். ராமகிருஷ்ணன், சென்ஷி, பண்புடன் குழுமம், யெஸ். பாலபாரதி

***

+

அப்படியே நேஷனல் புக் டிரஸ் வெளியிட்ட 22 நாவல்களையும் அள்ளுங்க! ஜெய் ஜென்ஷி!

72 பின்னூட்டங்கள்

 1. அனாமதேய said,

  04/01/2014 இல் 05:11

  Thank you sir

 2. 04/01/2014 இல் 05:29

  மிகப் பெரிய முயற்சி. நன்றி. எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. நாய் வாலாட்டிக்கொண்டே சோறு சாப்பிடுவது போல நன்றி நன்றி என்று முணுமுணுத்துக்கொண்டே தரவிறக்கிக் கொள்கிறேன்.

 3. 04/01/2014 இல் 06:55

  Thank u so much sir

 4. Hari B said,

  04/01/2014 இல் 07:16

  மிக மிக நன்றி. ஸ்ரீராம் அவர்கள் சொன்னதையே வழிமொழிகிறேன். மிக அழகான உதாரணம் அவர் கூறியிருப்பது

 5. 04/01/2014 இல் 08:23

  மிகப் பெரிய முயற்சி. நன்றி. எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை…மிக்க நன்றி ….சகோ …

 6. Venkat said,

  04/01/2014 இல் 08:50

  அரிய விஷயம். பாராட்டுகள் நண்பரே. நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை…..

  மனதார உங்களை வாழ்த்தியபடியே தரவிறக்கம் செய்து கொண்டேன். ஒவ்வொன்றாய் படிக்க வேண்டும்.

 7. 04/01/2014 இல் 09:16

  நல்ல தொகுப்பு. மிக்க நன்றி

 8. Sathiyaraj Thangavel said,

  04/01/2014 இல் 09:38

  மிக்க நன்றி…….

 9. 04/01/2014 இல் 11:39

  நன்றி : வேடியப்பன் , Vediyappan Discovery Book Palace (fb)

  மதிபிற்குரிய எதிரிகளே… எஸ்.ரா. தொகுத்த 100 சிறந்த சிறுகதைகளை, டிஸ்கவரி புக் பேலஸ் சார்பாக எஸ்.ரா. விடமும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடமும் முறையாக அனுமதி வாங்கி அதை புத்தகமாக அச்சில் கொண்டுவருவதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. வரும் வாரத்தில் புத்தகம் கிடைக்கும்படி வேலைகள் நடந்துவருகிறது. 1100 பக்கம் வரை உள்ள புத்தகத்தின் விலை ரூ.650 மட்டுமே. முன்பதிவு திட்டத்தில் 25% தள்ளுபடி விலையிலும் discoverybookpalace.com இணையத்தில் கொடுத்துள்ளோம். இன்று காலை அத்தனை கதைகளையும் pdf-ல் கொடுத்து என்னை அதிர்ச்சியில் உறைய வைக்கும் வேலையில் இறங்கிவிட்டதாக நினைத்துக்கொண்டு ஒரு நண்பர் தன் வலைபக்கத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளும்படி இணைப்பை கொடுத்துள்ளதாக நண்பர்கள் சுட்டிக்காட்டினார்கள். உங்களை நான் முட்டால்களே என்று திட்டுவதற்கான சந்தர்ப்பத்தை எனக்கு நீங்களே கொடுத்துவீட்டீர்களே என்பதுதான் எனது வருத்தம் . கடந்த இரண்டு வருடமாக அந்த கதைகளில் பெரும்பாலானவை இணையத்தில் கிடைக்கும் என்பது எனக்குத் தெரியாதா? அதோடு அந்தப் பக்கங்களில் நானே சென்று படித்தும் இருக்கிறேன். இன்னும் சொன்னால் இந்த புத்தக ஆக்கத்திற்கு அங்கிருந்தும்கூட உதவிகள் பெறப்பட்டது என்பதும் தகவலாக சொல்லிவிடுகிறேன். உங்களின் குற்றச்சாட்டு என்ன “மிகவும் கஷ்டப்பட்டு தட்டச்சு செய்து இணையத்தில் ஏற்றி வைத்துள்ளோம் , அதற்கு நன்றி தெரிவிக்கவில்லை” என்பதுதானே. இன்னும் புத்தகமே வரவில்லை. அதற்குள் நாங்கள் நன்றிதெரிவிக்கவில்லை என்பது எப்படி உங்களுக்கு தெரியும்? நீங்கள் pdf என்ன துண்டுப்பிரசுரம் போட்டு வினியோகித்தாலும் நாங்கள் கொண்டு வரும் புத்தகம் விற்பனையில் சதனை படைக்கும் என்பதை நீங்கள் எப்படி ஜீரணிக்கப்போகிறீகளோ என்பதே எனது வேதனை. ஒரு மதிப்பிற்குறிய தொகுப்பை உங்களின் இலக்கியப்பொறாமை இப்படி கீழ்தரமாக மதிப்பிட்டிருக்கே என்பது எனது அடுத்த வேதனை. அதோடு புத்தகம் என்பது அன்பு, காதல். அதனை நீங்கள் கட்டி அணைத்து முகர்ந்து முத்தமிட முடியும். நண்பர்கள் பலர் “நான் pdf-ல் அவற்றை படித்துள்ளேன். இதை யாரும் புத்தகமாக தரமாட்டார்களா என்று ஏங்கினேன். இப்போது அதை டிஸ்கவரி புக் பேலஸ் செய்வதில் மிக்க மகிழ்ச்சி” என்று எத்தனைப்பேர் சொன்னார்கள் என்பதும் உனக்குத் தெரியாது. முன்பதிவில் எத்தனைப் பிரதிகள் விற்றுள்ளது என்பதும் உனக்குத் தெரியாது! ஒன்று மட்டும் தெரிகிறது. உங்களையெல்லாம் திருத்திறது ரொம்பக் கஷ்டம்டா, நூறு கதைகள் இல்லை, ஆயிரம் கதைகள் படிச்சாலும் முடியாது சாமி!

 10. 04/01/2014 இல் 11:42

  ப்ளஸ்ஸில் நண்பர் அய்யனார் விஸ்வநாத்
  https://plus.google.com/u/0/114932058695693448795/posts/KbwFDNAXHWF

  ***
  விஷயம் புரியாது வேடியப்பன் என்பவரின் ஸ்டேட்டஸ் பார்த்தேன். தமிழின் அத்தனை பிழைகளோடும் ஒரு பத்தி எழுத முயன்றிருக்கிறார். நிச்சயம் இவரால் ஆயிரக்கணக்கான பத்திகளை இராப்பகலாக பிழையில்லாமல் டைப்படித்த சென்ஷியின் உழைப்பை புரிந்து கொள்ள முடியும். ஆனாலும் இது ஏன் நடந்தது என்பது புரியவில்லை. இணையத்தில் முந்தா நேத்து வந்த இலக்கிய பிஞ்சுகளுக்குக் கூட சென்ஷியின் இந்த மூன்று வருட உழைப்பு தெரிந்திருக்கும். எதன் அடிப்படையின் இவர் இதையெல்லாம் சுட்டு புத்தகமாகப் போடுகிறார் என்பது தெரியவில்லை. புத்தகம் வருவதாக இருந்தால் தேவை நன்றியல்ல, பங்கு. தொகுப்பாசிரியர் சென்ஷி எனப்போடாமல் இது அச்சில் வெளிவந்தால் அது மிக அயோக்கியத்தனமான செயலாக இருக்கும். சக பதிப்பாளர்கள் வேடியப்பனிடம் பேசி இதை சரிசெய்தால் இலக்கியம் மீதிருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கைகள் சாகாதிருக்கும்

 11. 04/01/2014 இல் 12:33

  அய்யனார் கருத்து மெத்தச்சரியென்று அதை அப்படியே வழிமொழிகிறேன்

 12. 04/01/2014 இல் 12:48

  நண்பர்களுக்கு,

  100 கதைகள் தொகுப்பதென்பது எனது தனிப்பட்ட விருப்பமாக மேற்கொண்ட செயல் மாத்திரமே! நண்பர்களின் உதவியின்றி இது சாத்தியமற்றது. பலரும் பல விதமாக என்னுடைய பிடிவாதத்திற்காக புத்தகங்களை தேடி அலைந்திருக்கிறார்கள். இன்னமும் சாமியார் ஜூவிற்குப் போகிறார் கதையைத் தட்டச்சி தன்னுடைய தளத்தில் வெளியிட்ட நண்பர் யாரெனத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவே இல்லை. என்னுடைய அன்பு அனைவருக்கும் உரித்தானதாகுக..

  இந்த சமயத்தில் கதைகளை அனுப்புவதில் அல்லது வாங்கித் தருவதில் எனக்காக சிரமப்பட்ட எல்லோரையும் நினைவு கொள்கின்றேன். கதைகள் அனுப்பி உதவியவர்கள் பெயர் தட்டச்சித் தந்தவர்கள் பெயரை முன்பே இங்கு ஒவ்வொரு கதையின் மேற்புறத்திலும் குறிப்பிட்டுள்ளேன். அண்ணாச்சி இதற்காக எனக்கு தனிப்பட்ட முறையில் செய்த உதவிகள் வேறு யாரும் எவருக்கும் செய்வார்களா என்பது கேள்விக்குறியே! கதைத்தேடலில் என்னுடைய அத்தனை தொல்லையையும் தாங்கிக்கொண்டு கதைகளைத் தேடி தட்டச்சி அனுப்பிய கயல்விழி முத்துலட்சுமி, சித்தார்த், காயத்ரி சித்தார்த், ஆபிதின் அண்ணன், கிருஷ்ணபிரபு, சுரேஷ் கண்ணன், யாழினி, மங்கை, ஜ்யோவ்ராம் சுந்தர், பாலபாரதி, எம். ஏ. சுசீலா, கானா பிரபா, கிரிதரன், சங்கரநாராயணன், புதுச்சேரி அஜய், கதைகளைப் பதிவில் தொகுக்க இடம் தந்த ராம்பிரசாத் மற்றும் பலரின் (பெயர்களை தனித்தனியே குறிப்பிடாமைக்கு மன்னிக்கவும்.) அன்பில்லாமல் இது சாத்தியமற்றது.

  இது புத்தகமாய் வருதல் குறித்தோ, அதில் என் பெயரைக் குறிப்பிடுவது அல்லது குறிப்பிடாதது என்னைப் பொறுத்தவரை தேவையற்ற சச்சரவு. புத்தகமாகக் கொண்டு வரவேண்டுமென்று கூறிய அண்ணாச்சியிடமும் இதைக் குறிப்பிட்டேன். இணையத்தில் இயங்குவோர் வாசிப்பிற்கு என்பதே இணையத்தில் தட்டச்சி ஏற்றியதன் முதல் வேலை. இதைவிடுத்து, இவர் நன்றி கூறினாரா? பெயரை இட்டாரா என்பதிலெல்லாம் எனக்கு எந்தவித கவலையும் இல்லை. மேலும் இணையத்தில் ஏற்றும்போதே இதன் காப்புரிமை ஆசிரியருக்குத்தான் என்பதிலும், எந்தவித வணிக நோக்கு எண்ணத்திலும் இவை பகிரப்படுதல் அல்ல என்பதையும் அழியாச்சுடர்கள் தளத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இதையும் மீறி ஒரு சில நண்பர்களால் காப்புரிமை பிரச்சினை முன்னெடுக்கப்பட்ட போதும், சில நட்பு உள்ளங்களின் உதவியினால், கதைகளைத் தட்டச்சி பொதுவெளியில் இட சில முக்கியமான எழுத்தாளர்கள் அனுமதியும் வழங்கியுள்ளார்கள் என்பது மகிழ்வு தரும் செய்தி. உதவிய பிற நண்பர்களைக் குறிப்பிடாமல் ஒருவனுக்கு மாத்திரம் நன்றியறிவித்தல் என்பது மிக மோசமான சங்கடநிலைக்குக் கொண்டு செல்லும் என்பது மாத்திரம் உறுதி.

  திருவாளர் வேடியப்பன் அவர்கள் இதனை தனது பதிப்பகத்தின் மூலம் புத்தகமாய்க் கொண்டு வருவதன் மூலம் நல்ல இலக்கியவாதியாகவும், தொகுப்பாசிரியர் பெயரில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பெயரை இட்டதன் மூலம் சிறந்த வியாபாரியாகவும் இருப்பதைக் கண்டு மகிழ்வு. இணையத்தில் மொத்த கதைகளும் கிடைக்கும் முன்பே, இந்த புத்தகம் வந்திருந்தால் இன்னமும் மகிழ்ந்திருப்பேன் என்பது உறுதி.

  மதிப்பிற்குரிய எதிரிகளே என்று ஃபேஸ்புக்கில் விளித்திருப்பதைக் கண்டேன். எனக்கு யாரையும் எதிரியாக்கிக் கொள்ள விருப்பம் இருந்ததில்லை. ஆபிதின் அண்ணனுக்கு எதிரியாகும் தகுதி இங்கு எவனுக்கும் இல்லையென்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 13. ஜமாலன் said,

  04/01/2014 இல் 12:55

  காக்கா.. அருமையான பணியை செய்தீர்கள். இப்போதுதான் பார்த்தேன். மற்றதை சுற்றிவிட்டு வருகிறேன். இன்னும் கமெண்ட் படிக்கல. 101 கண்டுபிடிச்சா கஞ்சா உண்டா சார்ஜா கஞ்ச என்று எதாவது சுலைமானியை தந்துவிடாதீர்கள். – ஜமாலன்

  • 04/01/2014 இல் 21:54

   //எதாவது சுலைமானியை// நோ நோ, மஜீத் கசக்கிய அசல் கஞ்சா உத்தரவாதம்!

   • sundar said,

    04/01/2014 இல் 22:10

    அந்த ஒரு கூடுதல் கதை பிரபஞ்சன் எழுதிய அப்பாவின் வேஷ்டி

 14. 04/01/2014 இல் 12:58

  இக்கதைகளுக்கான சென்ஷியின் உழைப்பு இணையில்லாதது. தேடலோ வடதுருவம் முதல் ஈழம் வரை நீண்டதாகும். ஒப்புக்கொள்ளவும் அங்கீகரிக்கவும் மறுப்பது நேர்மைக்கு எதிரானது.

 15. Stalin Felix said,

  04/01/2014 இல் 13:08

  சென்ஷியின் நான்காண்டு கால உழைப்பு..

  https://groups.google.com/forum/#!topic/panbudan/DQ_DqHlArMI%5B1-25-false%5D

 16. ஜமாலன் said,

  04/01/2014 இல் 13:08

  அய்யனார், சென்ஷி மற்றும் அண்ணாச்சி உட்பட இதில் உழைத்த அனைவரின் உழைப்பும் மதிப்பிட முடியாதது. நான் அட்டைப்படம் பார்த்தவுடன் நினைத்தேன். தனக்கு பிடித்த கதை என்று போடாமல் சிறந்த என்று பொட்டு உள்ளாரே என்று. இப்போ அந்த சிறந்த பின்னணயில் இத்தனை நபர்களின் தேர்வம் உழைப்பும் இருந்து உள்ளது. அப்போ அந்த 100 கதகளை படித்தாரா இல்லையா அவர். ஆபிதினுக்கு எதிரியாகும் தகுதி எவனுக்குமில்லை என்ற சென்ஸியின் வாக்கியம் 100 சதமானம் எனக்கு உடன்பாடானது. நான் சார்ஜா வந்தபோது ஆபிதின் காக்கா அவரை எனக்க காட்டாமல் விட்டுவிட்டார். தமிழ் சிறுகதையில் ஆபிதின் ஒரு கலைக்கான சொத்து. அவரை சொத்தையாக்கிவிட பலர் முயன்றும் தொடர்ந்து இயங்குகிறார் என்றால் அவரது தணியாத கலைதாகம்தான் காரணம். தமிகத்தின் மும்மூர்தி கதை சொல்லிகளில் ஒருவர் முன்பு இவர் முதுகில் குத்தி இன்று எதை எதையோ குத்தியதைப் பற்றி எழுதி நெம்பர் ஒன்னாகிவிட்டார். அடுத்த மூர்த்தி இப்படி ஆரம்பிக்கிறார். ஒரு மனிதன் என்னத்தான்ய செய்வான்? இந்த இலக்கிய அலம்பகள் தாங்க முடியவில்லையே. இலக்கிளம் எழுதி இறுமி இறுமி செத்த அந்த ஆன்மாக்கள் இவர்களை மன்னிக்காது. – ஜமாலன்.

 17. ஜமாலன் said,

  04/01/2014 இல் 13:14

  நான் பலகதைகளை அழயாச்சடரில்தான் வாசித்தேன். தமிழில் அது ஒரு முக்கியமான தளம். நூலாக வருவதில் பிரச்சனையில்லை. உழைப்பு மதிக்கப்படவேண்டும். அடுத்து எஸ். ரா. வின் பங்கு அதில் என்ன? அவர் அதில் தேர்ந்த 100 கதைகளை எடுத்து பதிப்பிக்கிறார்களா? வெறும் கதைகளை பதிப்பிப்தில் என்ன உள்ளது. அதை ஏன் தேர்ந்தேன் என்பது பற்றி விரிவா எழுதவேண்டும் என்பது முக்கியம்.

 18. 04/01/2014 இல் 13:17

  //இணையத்தில் மொத்த கதைகளும் கிடைக்கும் முன்பே, இந்த புத்தகம் வந்திருந்தால் இன்னமும் மகிழ்ந்திருப்பேன் என்பது உறுதி//

  இதுதான் விஷயம்.

 19. 04/01/2014 இல் 13:31

  ஜமாலன் அண்ணன்,

  சிறுகதைகள் அனைத்தும் எஸ்.ரா. அவர்கள் தேர்வு செய்தது. அவர் வாசித்ததில் பிடித்த/சிறந்த 100 கதைகள் என்றுதான் முன்பு குறிப்பிட்டிருந்தார்.

 20. adt nayahan said,

  04/01/2014 இல் 15:51

  nichyam nalla muyarchi parattukkal

 21. Sathyamoorthy said,

  04/01/2014 இல் 16:29

  Thnks for a worthy collection …!!

 22. தாஜ் said,

  04/01/2014 இல் 16:38

  சென்ஷிக்கும்
  ஆபிதீனுக்கும்
  இந்தத் தொகுப்பின்
  பெரும் உழைப்பில் பங்கெடுத்த
  இதர நண்பர்களுக்கும்
  என் மேலான நன்றி.
  – தாஜ்

 23. எஸ்.ராமகிருஷ்ணன் said,

  04/01/2014 இல் 18:04

  அன்பு ஆபிதீன் அவர்களுக்கு

  நூறு சிறந்த சிறுகதைகள் பற்றிய இந்தச் சர்ச்சையை இப்போது தான் கவனித்தேன்,

  எனது தொகுப்பின் முன்னுரையில் சென்ஷியின் அரிய உழைப்பிற்கு மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்திருக்கிறேன், அவரைப்போல இந்தக் கதைகளைத் தேடி தந்த பல்வேறு நண்பர்கள், வெளியிட்ட இணையதளங்கள், அனுமதி தந்த எழுத்தாளர்கள் அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறேன், புத்தகம் வெளியாகும் முன்பு எப்படி இது போல ஒரு சர்ச்சை வெளியானது, அதுவும் நான் பெரிதும் மதிக்கும் ஆபிதீன் அவர்களின் இணையதளத்தில் என்பது வருத்தமளிக்கிறது

  இந்தக் கதைகள் எனது வாசிப்பில் சிறந்தவையாக நான் தேர்வு செய்தவை, இதுபோன்ற தொகுப்புகள் ஆங்கிலத்தில் வெளியாகி உள்ளன, அது போனற் ஒரு முயற்சியே இத்தொகுப்பு

  இக்கதைகளை எப்படி. ஏன் தேர்வு செய்தேன் என்பது பற்றி விரிவான முன்னுரை எழுதியிருக்கிறேன், நூல் வெளியானதும் வாசித்துப் பாருங்கள்,

  இந்தப் பட்டியலில் உள்ள விடுபடல்கள் நான் அறிந்தவையே, இக்கதைகளில் இரண்டாயிரத்திற்குப் பிறகான பல நல்ல கதைகள் சேர்க்கபடவில்லை, அவற்றை இன்னொரு தொகுப்பாகக் கொணடுவர எண்ணம் இருக்கிறது.

  ஒரு இளம்வாசகன் நூறு சிறந்த கதைகளை வாசிக்க உதவியாக இருகக்ட்டும் என்பதே இத்தொகுப்பின் நோக்கம், இரண்டு ஆண்டுகளாகவே இதனை நூலாக வெளியிட இரண்டு பதிப்பகங்கள் முயன்றன, ஆயிரம் பக்கம் என்பதால் பொருளாதாரத் தட்டுபாடு காரணமாக முயற்சி வெற்றிபெறவில்லை, ஆனால் வேடியப்பன் தனது சொந்த ஆர்வத்தால் அதனைச் சாத்தியமாக்கியிருக்கிறார்,

  இதனைப் பிடிஎப்பாகத் தரவிறக்கி படிக்கப் போகிறவர்கள் தாரளமாகப் படித்துக் கொள்ளட்டும், அதில் ஒரு பிரச்சனையுமில்லை,

  ஆனால் இப்படி நூறு எழுத்தாளர்களின் உழைப்பை,உரிமையை, எந்தப் பதிப்புரிமையும் இல்லாமல், இலவசமாகத் தரவிறக்கிக் கொள்வது நியாயம் தானா என அவரவர் மனசாட்சியே பதில் சொல்லட்டும்

  மற்றபடி சென்ஷி மற்றும் அவரது நண்பர்களின் தேடுதல்,மற்றும் தட்டச்சு செய்தஉழைப்பு ஈடு செய்யமுடியாத ஒன்று, அதற்கு நன்றி சொல்வது கூடச் சம்பிரதாயம் தான், அதைத் தாண்டி அவர்களுக்கு நான் கடமைபட்டிருக்கிறேன்

  மிக்க அன்புடன்
  எஸ்ராமகிருஷ்ணன்

  • 04/01/2014 இல் 21:42

   அன்பின் எஸ்.ரா, உங்களுக்காக இணையத்தில் முன்பு சண்டையிட்டவன் நான். உங்களின் வழக்கமான writerramki@gmail.com முகவரியிலிருந்து வராமல் kirushi@yahoo.comயிலிருந்து வந்த இந்த பதில் நீங்கள் எழுதியதுதானா என்று தெரியவில்லை. ஆனாலும் சொல்கிறேன். எங்கள் சென்ஷியின் உழைப்பில்/தேடுதலில் கிடைத்த அத்தனை கதைகளும் இணையத்தில் பல பகுதிகளிலும் நீண்டநாளாக (டெக்ஸ்டாக ) இருக்கின்றன. குறிப்பாக அழியாச்சுடர்கள், மற்றும் தொகுப்புகள் தளத்தில். அப்போது தோன்றாத உரிமைப் பிரச்சினை, இங்கே pdfஆக மாறியதும் ஏற்படுவது ’வேடியப்பன் விளைவு’ போலும். ப்ளஸ்-ல் தம்பி நந்தகுமார்தான் கேட்டார் இப்படி : ’நூறு எழுத்தாளார்களின் உழைப்பை, உரிமையை முறையான பதிப்புரிமை வாங்கித்தான் இந்தப் புத்தகம் வெளி வருகிறதா? இந்தப் புத்தகத்திற்கான விற்பனையிலிருந்து குறிப்பிட்ட தொகையேனும் எழுத்தாளார்களுக்கு பகுதி ராயல்டி தொகையாகவேனும் செல்ல இருக்கிறதா? அப்படி ஏதும் இல்லையெனில் இந்த சிறுகதைகளை பதிப்பகம் பதிப்பித்தால் மனசாட்சிக்கும எதும் குந்தகம் விளைவிக்காது, இணையத்தில் பி.டிஎஃப் ஆக படித்தால் மட்டும் மனசாட்சிக்கு பதில் சொல்ல வேண்டுமோ?’ என்று.

   நீங்கள் பதில் சொல்ல வேண்டாம்.

   மிகுந்த வருத்தங்களுடன்
   ஆபிதீன்

   • ஜமாலன் said,

    05/01/2014 இல் 14:46

    ஆபிதின் சொல்வது சரியே. அந்த 100 எழுத்தாளர்களக்கு இதில் பதிப்புரிமை இல்லை எனும் போது, அந்த 100 பேரின் அரிய சிந்தனை, படைப்பை தொகுத்து நூலாக்கி அதில் வரும் லாபத்தை அவர்களுக்கு பகிர்ந்தளிக்க மனம் இல்லாதபோது. அதற்கு உருத்தாத மனசாட்சி எப்படி பிடிஎப்பில் உறுத்தும் என்று எதிர்பார்க்கிறார். இதென்ன சாபமா? வரமா? சரி தட்டச்சில் அதை இணையத்தில் செய்தவருக்கு என்ன பலன். அவரது பணிதான் கருமம் லாபம் பாராதது. அவரது பணிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

 24. 04/01/2014 இல் 19:01

  வேலைக்குப் போய்விட்டு வந்து எப்போதுமே சாயந்திரம்தான் ஆபிதீன் பக்கத்துக்கே போவேன். இன்று என்னவோ ஆபிதீனுக்கு ஃபோன் பண்ணியபோது விஷயத்தை சொன்னார். அர்த்தராத்திரி 12 மணிக்கு பதிவில் ஏற்றிருக்கிறார். இதற்கு ஆபிதீனைப் பாராட்டவேண்டும். (எப்போதும் என் பாராட்டு இருக்கு என்பது வேறு விஷயம்)

  அடுத்து சென்ஷிக்கு….
  நான்காண்டு உழைப்பு, சாதாரணமானதல்ல. ஆர்வம் குறையாமல் உழைத்திருக்கிறாரே…! அதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. நிச்சயமாக நானாக இருந்தால் செய்திருக்கமாட்டேன். அந்த அளவுக்கு பொறுமை கிடையாது எனக்கு, எனவே சென்ஷியின் ஆர்வம், உழைப்பு, எடுத்த முயற்சியில் வெற்றி, ஆபிதீனின் பக்க(ம்) பலம்… ஜிந்தாபாத்..!!!

 25. 04/01/2014 இல் 19:16

  //ஆனால் இப்படி நூறு எழுத்தாளர்களின் உழைப்பை,உரிமையை, எந்தப் பதிப்புரிமையும் இல்லாமல், இலவசமாகத் தரவிறக்கிக் கொள்வது நியாயம் தானா என அவரவர் மனசாட்சியே பதில் சொல்லட்டும் //

  அன்பின் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு,

  ஒன்றரை வருடங்களுக்கு முன் உங்களுக்கு மின்மடலில் ஐம்பதுகதைகள் அடங்கிய முதல் பாக தொகுப்பு பிடிஎஃப் வந்து சேர்ந்தபொழுதே இந்த கேள்வியைக் கேட்டிருந்தீர்களானால், என் மனசாட்சி இப்போது குலுங்கியிருக்காது. ;(

  • 04/01/2014 இல் 21:23

   இது உண்மையா? ஒரு பிரபல எழுத்தாளரே இவ்வாறு செய்கிறாரா? எப்படி நம்புவது….! இதனை எஸ்.ரா அவர்கள் தான் விளக்க வேண்டும்.

   – பாலா
   http://www.chennaishopping.com

 26. velmurugan.k said,

  04/01/2014 இல் 19:40

  தங்கள் முயற்ச்சிக்கு நன்றி

 27. 04/01/2014 இல் 21:08

  அன்பு ஆபிதீன்

  நீண்ட அவதானிப்பின் பின்னர் இன்று தங்கள் பக்கத்தில் ஒரு பின்னூட்டம் இடுகின்றேன்.
  நியாயமாகவே எதையும் செய்யும் தாங்கள் அநியாயத்திற்கு எதையும் தூக்கிப் பிடிக்க மாட்டீர்கள்என்பது எனக்குத் தெரியும்.

  100 கதைகள் விடயத்தில் இது மிகவும் பிரயோசனமான தொகுப்பு. நான் கூட முதலில் தரவிறக்கி ஒருமுறை மேலோட்டமாக மேய்ந்துவிட்டு்ததான் இதை எழுதுகிறேன்.

  அமைதியாக இருந்து எல்லோர் கருத்துக்களையும் அமைதியாகப் படித்துவிட்டுத்தான் எனது கருத்தை பதிவு பண்ணுகிறேன்.

  எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் – ”எனது தொகுப்பின் முன்னுரையில் சென்ஷியின் அரிய உழைப்பிற்கு மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்திருக்கிறேன், அவரைப்போல இந்தக் கதைகளைத் தேடி தந்த பல்வேறு நண்பர்கள், வெளியிட்ட இணையதளங்கள், அனுமதி தந்த எழுத்தாளர்கள் அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறேன்” என்கிறார்
  சென்சியின் உழைப்பு குறைத்து மதிப்பிட முடியாது என்பதைப் பலரும் பதிவு செய்துள்ளனர்
  ஒன்றரை வருடங்களுக்கு முன் உங்களுக்கு மின்மடலில் ஐம்பதுகதைகள் அடங்கிய முதல் பாக தொகுப்பு பிடிஎஃப் வந்து சேர்ந்தபொழுதே இந்த கேள்வியைக் கேட்டிருந்தீர்களானால், என் மனசாட்சி இப்போது குலுங்கியிருக்காது என்று சென்ஷியே சொல்லியிருப்பது எல்லாவற்றையும் பார்க்கும் போது ராமகிருஷ்னன் இன்னும் சில விடயங்களைத் தெளிவு படுத்த வேண்டியிருக்கிறது என்பது மட்டும் விளங்குகின்றது. இதற்கு முற்றுப்புள்ளி கிடைக்க வேண்டும்தானே

  -முஸ்டீன்-

  • ஆசிப் மீரான் said,

   04/01/2014 இல் 21:33

   ஒரு சிறுகதை – இலங்கை எழுத்தாளர் எழுதியது.. அதன் பிரதி எங்கும் கிடைக்க வாய்ப்பேயில்லை என்ற நிலையில் விஜய் மகேந்திரனிடம் அந்தப் பிரதி இருப்பதை அறிந்து அந்த ஒரே சிறுகதைக்காக ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து அதனை வாங்கினான் +me senshe. நான் கூட அவனைத் திட்டினேன். “இவ்வளவு கிறுக்குத்தனம் பிடித்து இதனைத் தொகுத்து என்ன செய்யப் போகிறாய்? ” என்று. ஆனால் இலக்கியத்தின் மீதிருந்த தீவிர ஆர்வமும் தேடித் தேடி வாசிப்பதில் இருக்கும் ஆனந்தமும் அடைய முடியாதையும் அடைந்தே தீர வேண்டுமென்ற தீராத வேட்கையும், இரவு பகல் பாராமல் தட்டச்சு செய்து கொட்டிய உடல் உழைப்பும், அதற்குப் பின்ன்னல் இருந்த பொருள் செலவுகளுமாக நான்கரை வருடங்களாகத் தவம் போல கடும்பாடுபட்டு ஒருவன் சிறுகதைகளைத் தேடித் தேடி தொகுப்பான். வலிக்காமல் வியாபாரம் செய்வார்கள் இலக்கிய வியாபாரிகள்.. எஸ். ரா தன் முன்னுரையில் நன்றி சொல்லி விட்டாராம்.. அடடே!! அவருக்குத்தான் எத்தனை பெரிய மனது?? இங்கே இலக்கியம் செய்கிறோம் என்று சொல்லிக் கொள்ள எந்த மயிரானுக்கும் அருகதையில்லை.. காசு.பணம்..துட்டு..மணி மணிதான்.. இந்த நான்கரை வருட உழைப்பிற்கான அங்கீகாரம் தராதவர்களைக் காலம் மன்னிக்காது.

   • 05/01/2014 இல் 11:10

    வார்த்தைப் பிரயோகங்களில் கூடுதல் கவணம் செலுத்துதல் நல்லது அன்பரே

 28. 05/01/2014 இல் 08:12

  //அவரைப்போல இந்தக் கதைகளைத் தேடி தந்த பல்வேறு நண்பர்கள், வெளியிட்ட இணையதளங்கள், அனுமதி தந்த எழுத்தாளர்கள் அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறேன்//

  அது எல்லாவற்றையும் செய்து தொகுத்து சென்ஷி வழங்கி விட்ட பிறகு, அதுவும் அதை அப்படியே PDF கோப்பாக அனுப்பி வைத்த பிறகும் இவர் எதனை தேடிக் கொண்டிருந்தாராம்?! சொல்லுற பொய்யை பொருந்தச் சொல்லுங்கய்யா. கவிதைக்கு தான் பொய்யழகு. விடுற கதைக்கு அல்ல.

 29. 05/01/2014 இல் 10:29

  இந்த சிறுகதை தொகுப்பில் உள்ள நூறு சிறுகதைகளை (101??) பல ஏழுத்தாளர்கள் பல்வேறு காலங்களில் எழுதியிருக்கிறார்கள். இதில் பல சிறுகதைகள் இணையத்தில் விரவி கிடக்கின்றன. ஆனால் இவை அனைத்தையும் தேடி எடுத்து (அதற்காக பல கஸ்டங்களை அனுபவித்தது மட்டுமல்லாது, பல மணி நேரங்கள் மற்றும் தன் சொந்தப்பணத்தை செலவிட்டதையும் ) பல நல்ல நண்பர்களின் உதவியுடன் தட்டச்சி, ஒவ்வொரு கதை தட்டச்சப்பட்டவுடன் பண்புடன் குழுமத்தில் வெளியிட்டு, பின் அதை தொகுப்பாக்கியவரையில் சென்ஷியின் உழைப்பு மகத்தானது. பல கதைகளை பண்புடனில் தான் படித்திருக்கிறேன். இப்பொழுது அது தொகுப்பாக வரும் வேளையில் சென்ஷியின் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்பதே இணைய நண்பர்கள் பலரின் விருப்பம். சரியாக அங்கீகரிக்கபடாமல் அது மறைக்கப்பட்டு விடுமோ என்ற எண்ணத்தில் இணைய நண்பர்கள் பலரும் ஆதங்கப்பட்டு எழுதிவருகின்றனர். என் ஆதங்கமும் அதுவே. அந்த ஆதங்கத்தை புத்தகம் வெளியிடுபவர்கள் போக்குவார்கள், போக்கவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

 30. அனாமதேய said,

  05/01/2014 இல் 10:33

  எதுவாயிருப்பினும் சாதாரண மக்களை விட சகிப்புத்தன்மை பொறுமை ஆகிய குணங்கள் அதிகம் இருக்கவேண்டிய மக்களாகிய இலக்கியம் தொடர்பானவர்க்குள் வரும் பிரச்சனைகள் பார்க்க மிகவும் நகை சுவையாக இருக்கிறது .

 31. மாடசாமி said,

  05/01/2014 இல் 10:55

  நன்றி சார்!

 32. 05/01/2014 இல் 11:58

  எஸ்.ரா. தனது முன்னுரையில் நன்றி தெரிவித்ததை அத்தனை பெரிதாக முன்னிருத்தியிருப்பதற்கு ஆஸிஃப் மீரான்சொன்ன பதில் மிகமிகப் பொருத்தம். ஏதோ இலக்கிய சேவைக்கே அவதரித்ததைப்போலப் பேசும் அவருக்கு ‘தனலாபம்’ ஒன்றுமே இல்லையா? உழைப்பைச் சுரண்டிவிட்டு நன்றி மட்டும் சொல்வது அருவருப்பாக இல்லையா? கிடைப்பதில் உத்வேக இலக்கை நோக்கி உழைத்தவருக்கு கிள்ளியாவது கொடுக்க வேண்டும் என்ற மனம்கூட இல்லையே..? அதுதானே அங்கீகாரம்?. அந்த சில நூறுகள் அல்லது ஆயிரங்கள் மதிப்பிலான காகிதங்கள், சென்ஷியைப் பொறுத்தவரை, உதிர்ந்த உரோமத்திற்குச் சமானம் என்றாலும், பொற்கிழியின் எடைமதிப்பிலோ பணமுடிப்பின் மதிப்பிலோ இல்லை அங்கீகாரம் என்பது நாடுகளைக் கடந்துபோய் விருது’வாங்கி’யவருக்குத் தெரியாதா என்ன…

  புத்தகத்தின் தொகுப்பாசிரியர் என்ற அந்தஸ்தை சென்ஷிக்கு வழங்கியிருக்க வேண்டும். வழங்க மனமில்லாமல் போனது ஏமாற்றும் மனநிலையே.

  ஒவ்வொரு வருடமும் புத்தகத்திருவிழா வரும் வேளைகளில், எந்த வழியிலும் ஈடுபட்டு, ஏதாவது ஒரு சில புத்தகங்களை வெளியிட்டு லாபமடைய எத்தனிக்கும் அருவருப்பான மனநிலை இலக்கியவாதிகள் என்று தங்களை அழைத்துக்கொள்பவர்களிடம் அதிகரித்துக் கொண்டே செல்வது துரதிருஷ்டம்.

 33. 05/01/2014 இல் 12:55

  எனக்கு ஒரு டவுட்டு.. ஆக்ட்சுவலி ஸ்பீக்கிங் ‘தொகுப்பாசிரியர்’ அப்படீன்ற இடத்திலே ‘சென்ஷி’ பேரு தானே வரணும்?!

 34. Yamuna Rajendran said,

  05/01/2014 இல் 19:47

  பதிப்பகத்துறை அறம் அறிந்தவர்கள் தேர்வு என்பதற்கும் தொகுப்பு என்பதற்கும் உள்ள மலையளவு வித்தியாசத்தை உணர்வார்கள். உலக சினிமா நூல் துவக்கம் எஸ்.ராமகிருஷ்ணன் இத்தகைய அணுகுமுறையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார். உலக சினிமா நூல் ஒரு தொகுப்பு நூல். அது எஸ்.ராமகிருஷ்ணன் எனும் தனிப்பட்ட எழுத்தாளரால் எழுதப்பட்டது இல்லை. ஆனால், அட்டையைப் பாருங்கள். அது எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நூலாகவே தோற்றம் தரும். இதே முறைதான் நூறு கதைகளிலும் நடந்திருக்கிறது. நடந்தவைகளை வைத்துப் பார்க்கும்போது தொகுப்பாளர் என்று எஸ்.ராமகிருஷ்ணன் தனது பெயரைப் போட்டுக்கொள்ள முடியாது. சென்ஷிதான் இக்கதைகளின் தொகுப்பாளர். கதைகள் தனது தேர்வு என்று மட்டும்தான் அவர் உரிமை கொண்டாட முடியும். பொருளாதார இழப்பு உள்பட பிறரின் உழைப்புக்கு மரியாதை தரவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளாத எழுத்தாளர்கள் சமூக அறம் அல்லது தார்மீகம் பேசுவதில், அதனை நைச்சியமான சொற்களில் கடந்து போவதில்; என்ன அர்த்தம் இருக்க முடியும்?

  யமுனா ராஜேந்திரன்

 35. tshrinivasan said,

  05/01/2014 இல் 22:31

  இங்கு அனைவருமே ஒரு விஷயத்தை தெரிந்தே மறந்து விடுகின்றோம். காப்புரிமை.

  சென்ஷி அவர்கள் எத்தனை எழுத்தாளர்களிடம் அனுமதி பெற்று, அவர்களது படைப்புகளை மின்னாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்?

  எத்தனை பதிப்பகங்களிடம் பேசி, அவர்கள் வெளியிட்ட நூல்களின் பகுதிகளை மின்னாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்?

  எழுத்தாளர்களின், பதிப்பகங்களின் காப்புரிமையை துணிவாக மீறுகிறார். கதைகளின் மூலப்புத்தகம், பதிப்பாளர், தொகுப்பாளர் பற்றிய விவரங்களை தருவதில்லை.

  ‘நான் உங்கள் அனைவரின் பொருட்களையும் உங்கள் அனுமதியின்றி எடுத்து பிறருக்கு தருகிறேன். நீங்கள் ஆட்சேபித்தால், உங்கள் பொருட்களை உங்களுக்கே திருப்பித் தருகிறேன்.’ என்ற அறிவிப்பு சரியானதா என்ன?

  இன்னும் சில ஆண்டுகளில், சென்ஷி அவர்கள், ஊரில் உள்ள எழுத்தாளர்கள் அனைவரின் எல்லா படைப்புகளையும், அனுமதி இன்றி, பலரது உதவியுடன் மின்னாக்கம் செய்து, இணைய தளங்களில் வெளியிடுவார். எல்லா எழுத்தாளர்களின் எல்லா படைப்புகளும் அங்கே இருக்கும்.

  எஸ்.ரா அவர்கள் தாம் படித்த ஓராயிரம் படைப்புகளில், தமக்குப் பிடித்த 100 படைப்புகளை பட்டியலிட்டு, அவற்றை எழுதியவர்களின் அனுமதி பெற்று, அச்சு நூலாக வெளியிட விரும்புகிறார். ( பதிப்பாளர் வேடியப்பன் அவர்கள் கூற்றுப்படி, எழுதியவர்களின் அனுமதி பெறப்பட்டுறள்ளது.)

  இந்த 100 படைப்புகளும் சென்ஷி அவர்கள் தமது தளத்தில் வெளியிட்டுருப்பதால், அவரா தொகுப்பாளர்? இனி தமிழில் வரப்போகும் எல்லா தொகுப்பு நூல்களுக்கும் அவரா நிரந்தர தொகுப்பாளர்?

  காப்புரிமை மீறலுக்கு இப்படி ஒரு நிரந்தர பதவியா? சபாஷ் 😉

  நான் எனக்குப் பிடித்த 100 திருக்குறள்களை மட்டும் வெளியிட்டால், தொகுப்பாளர் நானே.
  1330 திருக்குறள்களையும் வைத்துள்ள Project Madurai திட்டக்குழு அல்ல.

  சென்ஷி அவர்கள் குழுவின் உழைப்பு மிகவும் பெரிது. ஆனால், காப்புரிமையை சிறிதும் மதிக்காமல், குழுவில் உள்ள அனைவருமே காப்புரிமை மீறலுக்கு உதவுவது வருத்தமே.

  பல பேர் சேர்ந்து, மிகவும் கஷ்டப் பட்டு, 4-5 வருடங்கள் உழைத்து, ஆனால் யாரையும் கேட்காமல், காப்புரிமை பெற்ற படைப்புகளை, தொகுத்து வெளியிடுதல், காப்புரிமை சட்டப்படி குற்றமே.

  பலரது, பல வருட உழைப்பு என்பதால் மட்டுமே, தவறான செயலை ஏற்றுக் கொள்ளலாகாது.

  அச்சு நூலோ, மின்னூலோ, இணையப் பதிப்போ, மூல ஆசிரியரிடம் அனுமதி பெற்று வெளியிடுங்கள்.

  பிறகு தொடருங்கள், தொகுப்பாசிரியர் பதவி பற்றிய விவாதங்களை.

  ஒரு வேண்டுகோள்;
  உங்கள் படைப்புகளை கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளியிடுங்கள். இது அனைவருக்கும் படைப்புகளை பகிரும் உரிமையை அளிக்கிறது. மூல ஆசிரியர் விவரங்களைத் தந்து, யாரும் பகிரலாம். தொகுக்கலாம். வெளியிடலாம்.

  நன்றி

  ஸ்ரீனிவாசன்

  tshrinivasan AT gmail DOT com

  http://FreeTamilEbooks.com

  எங்களைப் பற்றி http://freetamilebooks.com/about-the-project/

  • 06/01/2014 இல் 10:02

   //பல பேர் சேர்ந்து, மிகவும் கஷ்டப் பட்டு, 4-5 வருடங்கள் உழைத்து, ஆனால் யாரையும் கேட்காமல், காப்புரிமை பெற்ற படைப்புகளை, தொகுத்து வெளியிடுதல், காப்புரிமை சட்டப்படி குற்றமே.//

   அப்படி சென்ஷி எங்கே அறிவிப்பு விட்டிருக்கிறார் என்று சொல்ல முடியுமா?

   காப்புரிமை சட்டம் எது எதையெல்லாம் கட்டுப்படுத்தும்? அந்த 100 சிறுகதைகளும் காப்புரிமை சட்டத்தின்கீழ் வருமா என்பதெல்லாம் தெரியுமா?

   திருக்குறள் உதாரணம் கேலிக்கூத்து.

   திருக்குறளில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள 100 குறள்கள் எனக்குப் பிடிக்கும் என்று கூறி விட்டு விட்டு, திருக்குறள் எங்கே கிடைக்கும் என்று தேடி அலைந்து ஒருவர் அதனை தொகுத்து தந்தால், “அட இதைத்தான் சொன்னேன்” என்று நோகாமல் நோன்பு கும்பிட்டு போவது தான் தவறு என்கிறோம். இங்கே திருக்குறள் பொதுவில் கிடைக்கிறது. ஆனால் இந்த 100 கதைகள் விஷயம் அப்படியல்ல.

   மூல ஆசிரியரிடம் அனுமதி பெறாமல் வெளியிட்டார் என்பது உங்களின் கற்பனை.

   முழு விபரங்களும் இங்கே :

   http://www.seythigal.com/?p=1201

  • 06/01/2014 இல் 10:05

   //சென்ஷி அவர்கள் எத்தனை எழுத்தாளர்களிடம் அனுமதி பெற்று, அவர்களது படைப்புகளை மின்னாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்?

   எத்தனை பதிப்பகங்களிடம் பேசி, அவர்கள் வெளியிட்ட நூல்களின் பகுதிகளை மின்னாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்?//

   இது கேணத்தனமான கேள்வி. எழுத்தாளர்களிடம் அனுமதி பெறப்பட்டது என்று வேடியப்பன் சொன்னால் நம்புவீர்கள். ஆனால் சென்ஷி சொன்னால் நம்ப மாட்டீர்கள். என்ன நியாயம் இது?

   அனுமதி பெற்று விட்டீர்களா என்று கேட்டு பதில் பெற்று விட்டு அல்லவா குற்றச்சாட்டுகளை அள்ளி வீச வேண்டும்?

   வெறும் பட்டியலை மட்டும் இட்ட எஸ்.ரா.வோ, வேடியப்பனோ அந்த பட்டியலில் உள்ள சிறுகதைகளை தேடித் தேடி தொகுத்த சென்ஷியிடம் அனுமதி பெற்றார்களா அவரது தொகுப்பை உபயோகப்படுத்திக் கொள்ள?

   இனி தமிழில் வரப்போகும் அனைத்து நூல்களுக்கும் சென்ஷி தொகுப்பாளர் என்று சொல்லிக் கொண்டாரா? ஏன் இந்த உளறல்? ஒன்றும் தெரியவில்லையென்றால் பொத்திக் கொண்டு உட்காரலாம்.

   நயா பைசாவுக்கு உதவாத உமது இணைய தளத்திற்கு ஒரு லிங்க் பரபரப்பு பெறுவதற்காக ஒரு கமெண்ட்டா? அடத்தூ

 36. sundakka said,

  06/01/2014 இல் 09:28

  என் வலைப்பதிவின் ஒரு பகுதி.

  அ. சென்ஷி நல்ல ஆக்கங்களுக்கு பலருக்கும் அணுக்கம் தர வேண்டும் என்ற எண்ணத்துடன் உழைத்திருந்தாலும் அவர் ‘திருடர்’.
  ஆ. இணையமில்லாதவர்களுக்கும் சென்று சேர வேண்டும் என்று அதே நல்ல நோக்கத்துடன் (வணிகமும் கலந்து) எஸ்.ரா அதனை புத்தகமாக வெளியிட்டால், அதற்கு சென்ஷிக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கவில்லை என்றால் அவரும் திருடர்.

  இரு ‘திருடர்களுக்குள்’ யார் தொகுப்பாசிரியர் என்ற சண்டை நகைச்சுவைக்குரியது. இருவரும் நல்ல எண்ணங்கள் கொண்ட நல்ல மனிதர்கள். காப்புரிமை என்ற அபத்தமான சட்டத்தினுள் திருடியவன் ‘திருடனில்லை’, ‘திருடாதவன்’ திருடன். ஆனால் உண்மையில் அனைவருமே ‘திருடிய’ நல்லவர்கள். ஆயினும் நாம் சட்டத்தை இருக்கி பிடித்துக்கொண்டு நம்மை நாமே தாழ்த்திக்கொள்வதில் எவ்வளவு இன்பம்.

 37. தாஜ் said,

  06/01/2014 இல் 12:39

  ஆதிக்க அகம்பாவ திமிர்தானே உங்களுக்கெல்லாம்?
  ——————————————————————————
  நம்மால் நம்பப்படுகிற
  பிரபலங்களிடம் தார்மீக நியாயங்கள்
  சகஜத்திற்கு செத்துக் கிடப்பதை
  மீண்டும் ஒரு முறை
  ‘சென்ஷி / 100-கதைகள்’ குறித்த விவாதம்
  மெய்ப்பித்திருக்கிறது.

  2000-முன்னாலான
  தமிழின் மிகச் சிறந்தக் கதைகளாக
  ஒரு பட்டியலிட்டு
  பிரசுரத்திற்கு வைக்கிறார் எஸ்.ரா.
  அது,
  அவர் தன் கீர்த்தியை மறைமுகமாக
  வெளியுலகிற்கு காட்டும் முயற்ச்சி சார்ந்தது.

  எஸ்.ரா.வின்
  அந்த நூறு கதைகளின் பட்டியலை
  வாசிக்க நேர்ந்த
  தேர்ந்த வாசகர்கள் மகிழ்ந்திருக்கலாம்.
  சிலர்
  அதனில் சிலவற்றை தேடி வாசித்தும் இருக்கலாம்!
  கிட்டவே கிட்டாத பல கதைகளை
  தேடி வாசிக்க
  பெரிதாய் ஆர்வம் காட்டாமல் விட்டுமிருக்கலாம்!

  இங்கே சென்ஷி
  அப்படி ஆர்வப்பட்ட வாசகர்களில்
  ஒருவராக இருந்திருக்கிறார்.
  போதாதென்று
  எஸ்.ரா.வின் பட்டியலுக்கு
  அநியாயத்திற்கு மரியாதை கொடுத்திருக்கிறார்.

  அந்தப் பட்டியலையொட்டிய கதைகளில்
  கிட்டியது போக
  கிட்டாதவைகளை இவர் விட்டுவிடவில்லை.
  தன் பெரும் முயற்ச்சியில்
  தேடி கண்டெடுத்து வாசித்ததோடு மட்டுமில்லாமல்
  தட்டச்சு செய்து
  வலைத்தள பக்கங்களில் ஏற்றியும் பார்த்திருகிறர்!
  அப்படியொரு ஆர்வம்!
  நல்ல இலக்கிய கதைகள்
  எல்லோருக்கும் போய் சேரட்டுமே என்கிற
  நல்ல சிந்தனை!

  அவர் கொண்ட அந்த பெரும் முயற்ச்சிகள்
  சொல்லத் தகுந்தது.
  நிஜமான இலக்கிய ஆர்வளர்களின் பக்கம்
  அவரை நிறுத்தி வைத்து பார்க்கத் தகுந்தது.

  சென்ஷியின்
  ஒரு நான்கு வருட உழைப்பும்
  அதன் சாதிப்பும் நிறைவுக் கொண்டப் பிறகு
  வருகிறார்கள்
  எழுத்தை போற்றுவதாக சொல்லிக் கொள்ளும்
  எழுத்து சார்ந்த வியாபாரிகள்.

  சென்ஷியின்
  நான்கு வருட உழைப்பை
  கொஞ்சமும் சட்டை செய்யாமல்
  “பிரசுரிக்க இருக்கிறோம்
  நிஜமாகவே உங்கள் உழைப்பு பெரிது!” யென
  அவருக்கு நன்றி காட்டும் முகமாய்
  நாகரீக அனுகுமுறையைக் காட்டாமல்
  அதையொட்டிய
  ஒரு கடிதத் தகவல் இல்லாமல்,
  ஒத்த நாளில்..
  எஸ்.ரா. என்கிற எழுத்து வியாபாரி
  ஒரு பதிப்பகத்திற்கு
  சென்ஷியின் உழைப்பை
  பிரசுரிக்க அனுமதிதருகிறார்!

  (இப்படி அனுமதி கூசவேணாமா?
  பதிப்பகத்துகாரன் எத்தனை லட்சம்
  ராயல்டி தர முன்வந்தாலும்
  இவர் எப்படி அனுமதி தந்துவிட முடியும்?
  அத்தனையும் அவரது கதைகளா என்ன?)

  ஒத்த நாளில்…
  பதிப்பக வியாபாரி ஒருவன்
  அதனையெல்லாம் தரவிறக்கம் செய்து
  புத்தகமாக்கும்
  அடுத்தக் கட்டப் பணியை
  ஜரூராக செய்கிறான் என்றால்…
  யோசிப்பவனுக்கெல்லாம்
  எத்தனை மனச்சூடு!

  குறைந்த பட்சம்
  இத்தனைக் கதைகலையும் தொகுக்க
  சிரமம் கொண்ட சென்ஷியே
  இக்கதைகளை
  புத்தமாக கொண்டு வந்தாலும் வரலாம்
  என்கிற யோசனை
  எஸ்.ரா.வுக்கோ, அந்தப் பதிப்பகத்தானுக்கோ
  ஏன் இல்லாமல் போனது?
  அதையொட்டியேணும்…
  “நாங்கள்
  புத்தகமாக போட்டுக் கொள்ள விரும்புகிறோம்
  நீங்கள் அதற்கு ஒப்புதல் தரவேண்டும்.” என்று
  கேட்டிருக்கணுமா இல்லையா?

  எஸ்.ரா.வின் பட்டியலில் உள்ள
  அத்தனைக் கதைகளையும்
  நாங்கள் தேடியெடுத்தோம்
  பிரசுரம் வேண்டி
  அத்தனையையும் பெரும் செலவில்
  தட்டச்சு செய்தோம் என்று
  நீங்கள் சொல்லக் கூடுமானால்
  சென்ஷியோ
  அவரது நட்பு குழுமமோ
  வருத்தப்பட எந்த முகாந்திரமும் இருக்காது.
  அதனை நீங்கள்…
  இன்றைக்கல்ல
  ஒரு மூன்று வருடங்களுக்கு முன்னாலேயே
  செய்திருக்கும் பட்சம்
  எவன் கேட்க முடியும் உங்களை?

  நீங்களெல்லாம்…
  படைப்பாளி, பதிப்பகத்தார் என்கிற
  புனிதமான ஸ்தானத்தில் இருக்கலாம்..
  அகம்பாவம் கூட உங்களது
  அடிநாதமாக இருக்கலாம்!
  அதற்காக
  எந்த நாகரீக மீறலை
  சர்வசாதாரணமாக செய்யலாம் என்று
  உங்களுக்கு யார் சொன்னது?

  இன்னொரு பக்கம்…
  நான்கு வருடம்
  தேடி, தட்டச்சு செய்தவரும்
  அவர்களது
  நட்பு வட்டம் சேர்ந்த குழுவினர்களும்
  அந்தக் கதைகளை (pdf) ஃபைலாய்
  தங்களது வலைத் தளத்தில் பிரசுத்தால்….
  அந்தத்
  தார்மிகம் செத்துப் போனவர்கள்
  அவசர அவசரமாக
  நியாயத்திற்கு குரல் கொடுக்க…
  நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டும்
  அதட்டல் செய்துக் கொண்டும்
  சவால் விட்டுக் கொண்டும்
  ஜாடையில்
  தூற்றுதல் மிகு
  கன வார்த்தைகளை உபயோகித்தப்படிக்கும்
  பெருங்குரல் தந்திருக்கிறார்கள்!

  நம்மிடம் செல்வாக்கு,
  புகழ், பணபலமுமென்று எல்லாமும் இருக்கிறது,
  இவர்களால் ஒண்ணும் செய்ய முடியாது என்கிற
  ஆதிக்கத் திமிர்தானே உங்களுக்கெல்லாம்?
  இந்த முகமூடியோடு
  இலக்கிய சேவை செய்கிறார்களாம்
  இந்த மூஞ்சிகள்.
  காலம் இப்படியே போய்விடாது என்பதை
  உங்களுக்கு இங்கே
  அழுத்தமாக சொல்லிக் கொள்கிறேன்.

  – தாஜ்

  *

 38. 06/01/2014 இல் 13:39

  நல்ல தமிழ் சேவை. வாழ்க.

 39. யூஸஃப் குளச்சல் said,

  06/01/2014 இல் 18:09

  அன்பு ஆப்தீன், இந்தப் பிரச்சினைக் குறித்து அவ்வப்போது சில பகுதிகள் இடை யிடையே கண்ணில்பட்டன. வழக்கம் போல் சரியாக விளங்கிக்கொள்ளாமலும் விரும்பாம லும் அப்படியே விட்டு விட்டேன். எதேச்சையாகவே, இந்தப் பகுதிக்கு வந்தேன்.

  சிலரைத் தவிர, பதிப்பகச் சூழல்களைப் பொறுத்தவரைக்கும் நேர்மைக்குப் பிண்டம் வைப்பதற்கான உரிமைகூட இவன்களுக்குக் கிடையாது. படைப்பைப் பெற்றெடுத்தவர் களைப் புறக்கணித்து விட்டு, அவர்களால் கிடைக்கும் பணத்தை மட்டும் சுரண்டித் தின்னும் இவன்களுக்கு ஏது பிண்டம் வைக்கும் உரிமை?

  தாங்களே தொகுத்து விட்டு, ஏதேனும் முக்கிய எழுத்தாளர் களிடம் தொகுப்பாளர் என்று போட்டு விட அனுமதி கேட்பார் கள். என்னை அப்படியெல்லாம் ஏமாற்றி விட இயலாதாக்கும் என்று மனதுக்குள் கருவியபடி, அனுப்பச் சொல்லிவிட்டு, வழக்கம்போல் கிடப்பில் போடுவார்கள். எழுத்தாளர்கள். பதிப்பாளர் நெருக்கியதும் பெயரளவில், ஒன்றிரண்டை வாசித்து விட்டோ வாசிக்காமலோ பச்சைக்கொடியோ காவிக்கொடியோ காட்டுவார்கள். முன்னுரையும் எழுதிக் கொடுத்து விடுவார்கள். எழுத்தாளர்களாச்சே, பாவம் அப்பாவி ஜீவன்கள்! இப்படி வந்துச் சிக்கிக்கொண்டவர்தானா எஸ்ரா என்றும் தெரியவில்லை. தார்மிக ரோஷங்களுடன் எழுதுபவர்களது மனதின் அடியாழத்துக்குள் அது கொஞ்சமா வது படிந்துக் கிடக்கக்கூடுமென்ற ஐதீகத்தின் அடிப்படையில் தான் இதைச் சொல்கிறேன். உண்மையென்பது பரம் பொருளுக்கு நிகரானது.

  எஸ்ராவின் பெயரால் எழுதப்பட்ட அந்தக் கடிதம் உண்மையாக இருந்தால், ”நன்றி தெரிவித்திருக்கிறோமோ இல்லையா என்பது தெரியாமல், நூல் வெளிவருவருவதற் குள் எப்படி அது சர்ச்சைக்குள்ளானது” என்ற கேள்வி அபத்தமானது. தேர்வு செய்யப்பட்ட உடனே சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும். அதுதான் மரியாதை, அவர்களுக்குச் செய்யும் கௌரவம். ஒரு பெரிய படைப்பாளி நம்மையும் தேர்வு செய்திருக்கிறார் என்ற அங்கீகாரம் ஒருபுறமிருந்தாலும் அனுமதியின் மூலம் இதை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். ஒரு சிறு தகவலைப் பகிர்ந்துகொள்வதன்மூலம் தமிழின் பதிப்புச்சூழலை விளங்கிக் கொள்ள முடியும். மலையாள எழுத்தாளர்கள் பதினொரு பேர் களின் சிறுகதைகளைத் தேர்வு செய்து விட்டு, அவர்களிடம் எழுத்துமூலமாக அனுமதி பெற்று அதைத் தமிழில் மொழிமாற்றம் செய்தேன். இதில் பரிதாபத்துக்குரிய விஷயம் என்னவெனில், அனுமதி வாங்கப்பட்டதா என்றுகூட கேட்காமல் ஒரு பதிப்பகம் அதை வெளியிட்டது என்பதுதான்.

 40. யூஸஃப் குளச்சல் said,

  06/01/2014 இல் 18:25

  தமிழ் எழுத்துச்சூழலிலும் தமிழனின் சூழலிலுல் இப்படியான ஏமாற்றுகள் நடப்பது இலக்கிய வளர்ச்சிக்கு ஏந்தலாக அமையும். அந்த நூறுபேர்களையும் பல ஆயிரம்பேர்கள் அறிந்துகொள்ளவும் வாசிக்கவும் உதவும். ஆப்தீனுக்கும் இதற்கு உதவியாக இருந்த பதிப்பகத்துக்கும் பல்லாயிரம் நன்றிகள்.

 41. யூஸஃப் குளச்சல் said,

  06/01/2014 இல் 18:49

  ஒரு நூறு தடவை ஜெய் ஜென்ஷினு சொல்லியும் அந்த 22 உம், இறங்கி வரமாட்டேங்குதே ஆப்தீன்? எழுந்து நின்னு கைகளை அகலமாக உயர்த்தி ஜெய் ஆன்ஷினு முழங்கியும் பாத்துட்டேன். என்னவோ ஏதோன்னு ஓடி வந்த எம்பட்ட மகிர்ஷி, ”கொஞ்சம் முத்தித்தான் போச்சுப் போலிருக்கு”னு சொல்லிட்டுப் போறாங்க. நீங்கல்லாம் அத்திப் பூத்தாப்ல மனைவியைப் பாக்குறவுங்க. நாங்க பக்கத்துல இருக்குற வங்க. கிட்டத்தட்ட கொலைவெறியோட குடும்பம் நடத்திட்டு இருக்குறவங்க. இந்த மாதிரி வேண்டாத ஐடியால்லாம் குடுக்காதீங்க ஆப்தீன்?

  • 07/01/2014 இல் 11:38

   அன்புள்ள ‘குளச்சல்’,

   நண்பர்கள் ஜமாலன், யமுனா ராஜேந்திரன் , தாஜ், மஜீத் மற்றும் எல்லா சகோதரர்கள் போலவே ஆதரவுக்கரம் நீட்டியதற்கு நன்றி.

   ‘நூறு கதைகளை சுட்டிக்காட்ட எஸ்.ரா எத்தனை ஆயிரம் கதைகளை படித்திருக்க வேண்டும்?’ என்று ஒரு நிருபர் நேற்று ப்ளஸ்ஸில் வியந்திருக்கிறார். எனவே ‘எனக்குப் பிடிக்காத ஏழாயிரம் கதைகள்’ என்ற தலைப்பில் நண்பர் எஸ்.ராவின் இன்னொரு நூலும் வெளிவரலாம். என்ன அநியாயம்…! ஒரேயொரு உதாரணம் சொல்கிறேன். செழியனின் ஹார்மோனியம் கதைக்காக அலையோ அலையென்று அலைந்த சென்ஷி என்னிடம் சொன்னபோது நான் நண்பர் பி.கே.எஸ்ஸை முதலில் தொடர்புகொண்டேன். அவராலும் இயலாதபோது இலங்கை ஹனீபாக்காவை தொடர்புகொண்டேன். சத்திர சிகிச்சையை எதிர் நோக்கியிருக்கும் அந்த 68 வயதிலும் இருந்த எல்லா ‘கணையாழி’களையும் புரட்டி ‘உனது நண்பனின் கதைப் பசி தீரட்டும்’ என்று எடுத்துக் கொடுத்தார் அவர் . அது இங்கே முதலில் வெளியாவதே நியாயம் என்று உடனே டைப் செய்து கொடுத்து மகிழ்ந்தவர், இலக்கிய சேவைக்காக ஒரு பைசா கூட யாரிடமிருந்தும் எதிர்பார்க்காத எங்கள் சென்ஷி.

   ‘அஸர் தொழுத கையோடு கணையாழிகளை ஒரு கை பார்த்து விட்டேன். சும்மா விடுவேனா பார்.’ என்ற ஹனீபாவின் மெயில் பற்றியெல்லாம் ‘டிஸ்கவரி’க்கு என்ன தெரியும்? இவர்களா எஸ்.பொ , சார்வாகன் போன்றோரிடமிருந்தெல்லாம் அனுமதி வாங்கியிருப்பார்கள்?

   அப்புறம்.. அந்த நேஷனல் புக் டிரஸ்ட் புத்தக விவகாரம். அழுத்தும்போது – சரி, க்ளிக் செய்யும்போது – வேறு ஏதோ உங்களுக்கு இறங்கி விட்டது என்று நினைக்கிறேன் (தினம் பார்த்தால் அப்படித்தான்!). மறுபடியும் கத்திக்கொண்டு முயற்சிக்கவும்!

   கடைசியாக.. (இது மற்றவர்களுக்கு) ‘ஃபக்கீர் கா கஞ்சா’ பஞ்சாய் பறந்து விட்டது.’சுல்தான் கா அபின்’தான் சுதியா இருக்கு. வேணுமா?

 42. Iqbal said,

  07/01/2014 இல் 09:08

  //ஒரு விஷயம். pdf லிஸ்டில் ஏதோ ஒரு கதை கூடவந்து 101ஆகிவிட்டது. கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு சார்ஜா கஞ்சா பாக்கெட் இலவசம்! – ஆபிதீன்//
  naan kandu pidithu vittein…. athu ‘ Appavin Veshti ‘ – Birapanchan….

  Kanja vendam…..

 43. அனாமதேய said,

  07/01/2014 இல் 12:30

  என்னை போன்ற வாசிப்பனுபவம் அதிகம் இல்லாதவர்க்கு உங்கள் சேகரிப்பு பொக்கிஷம். மிக்க நன்றி.உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் 🙂

 44. தமிழன் said,

  07/01/2014 இல் 14:44

  //‘நூறு கதைகளை சுட்டிக்காட்ட எஸ்.ரா எத்தனை ஆயிரம் கதைகளை படித்திருக்க வேண்டும்?’ என்று ஒரு நிருபர் நேற்று ப்ளஸ்ஸில் வியந்திருக்கிறார்//

  நிருபர்? ஹெஹ்ஹே, அந்தாளு தப்பும் தவறுமா இங்கிலீஷிலேர்ந்து தமிழிலே காப்பி அடிக்கிற நபர்.

 45. 07/01/2014 இல் 15:41

  //புத்தகம் இன்னும் ஒரு வாரம் தள்ளி வரலாம். அவ்வளவே. கடந்த மூன்று நாட்களாக மீண்டும் இப்போது முழுமையாக தட்டச்சு நடந்துகொண்டிருக்கிறது//
  இது திருவாலர் வேடியப்பனின் ஃபேஸ்புக் சால்ஜாப்பு –

  இது நான் போட்ட வெடி:

  //நடு இரவில் தென்னைமரத்தில் இருந்தவனிடம் மரத்துக்காரர் கேட்டாராம் என்னடா பண்றேன்னு. புல்புடுங்க வந்தேன்னு சொன்னானாம். தென்னை மரத்துல ஏதுடா புல்லுன்னு திருப்பிக்கேட்டதும், அதான் இறங்கிக்கிட்ருக்கேன்ல ன்னு சொன்னானாம்.

  எங்க பாட்டி சொன்ன கதை இது.//

 46. Srini Vasan said,

  08/01/2014 இல் 13:47

  தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் தனது நீண்ட வாளை எடுத்துக் கொண்டு, மீண்டும்
  முருங்கை மரத்தில் ஏறிக்கொண்ட வேதாளத்தை தன் தோள் மீது போட்டுக் கொண்டு கீழே இறங்கி நடக்க
  ஆரம்பித்தான்.
  போகும் வழியில் அவனிடமிருந்து விடுபட, அவனது மௌனத்தை கலைக்க வேண்டும். இதனை மனதில் நினைத்த
  வேதாளம், வழக்கம்போல ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது…

  முன்னொரு காலத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் என்னும் சிறந்த எழுத்தாளர் தனக்கு பிடித்த சிறந்த 100 சிறுகதைகளை
  பட்டியலிட்டார். பிறிதொரு காலத்தில் சென்ஷி என்னும் வாசகர் அவ்வனைத்து கதைகளையும் படிக்கவேண்டும் என உறுதிபூண்டு அவைகளைத் தேடி பல வருடங்களாக படாத கஷ்டம் எல்லாம் பட்டு படித்ததோடு அல்லாமல் தான் பெற்ற இன்பம் அனைவருக்கும் கிடைக்கவேண்டுமென இணையத்தில் பகிர்ந்து வந்தார். மேலும் ஒரு pdf எஸ்.ரா அவர்களுக்கும் அனுப்பி வைத்தார்.

  இதில் உள்ள வியாபாரத்தை கண்டு கொண்ட டிஸ்கவரி புக் பேலஸ் உரிமையாளர் வேடியப்பன் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ராயல்டி தருவதாக ஒப்புக்கொண்டு இந்த தொகுப்பை 650 Rs விலையில் எஸ்.ராமகிருஷ்ணன் பெயரில் கொண்டு வருவதாக அறிவித்தார். தொகுக்க சிரமப்பட்ட சென்ஷிக்கு எந்தவித தகவலும் இல்லாமல் நன்றி கூட தெரிவிக்காமல் அவருடைய பெயரையும் அட்டையில் குறிப்பிடாமல் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இணையதளத்தில் pdf வெளியிடப்பட்டது.

  கதையை நன்கு கேட்டாயா விக்கிரமாதித்தனே?
  கஷ்டப்பட்டு தொகுத்த சென்ஷிக்கு நியாயமாக என்ன கிடைத்திருக்கவேண்டும்
  சிறுகதை எழுத்தாளர்களுக்கு ராயல்டி எதுவும் கொடுக்காமல் வெளியிடுவது நியாயமா?
  எஸ்.ரா அவர்கள் ராயல்டி பெறுவது எந்த அடிப்படையில்?
  எவ்வித உழைப்பும் இல்லாமல் லாபம் அடையப் போகும் டிஸ்கவரி புக் பேலஸ் என்ன செய்திருக்க வேண்டும்?
  இந்த கேள்விகளுக்கு

  பதில் தெரிந்தும் நீ சொல்லவில்லையானால், உன் தலை சுக்கு நூறாகட்டும்’, என்றது வேதாளம்.

  வழக்கம் போல், விக்கிரமாதித்தன் சரியான பதிலை சொல்லவே, அவனது மௌனம் கலைந்த காரணத்தினால்,

  வேதாளம் மீண்டும் முருங்கை மரமேறியது.

  விக்கிரமாதித்தன் சொன்ன பதில் என்ன ?

  • தாஜ் said,

   09/01/2014 இல் 20:28

   //விக்கிரமாதித்தன் சொன்ன பதில் என்ன ?//
   நான் என்ன பதில் சொன்னேன் என்று
   எனக்கு கூடவா தெரியாது!?
   அந்தக் கச்சடா வசவு மொழியிலான பதிலை
   இங்கே பதிவது நாகரீகமாக இருக்காது Srini.

 47. kalyani said,

  08/01/2014 இல் 17:17

  thanks i really appreciate and happy abt this

 48. 11/01/2014 இல் 00:08

  தமிழ் புத்தக ரசிகர்களின் தாகம் மற்றும் தமிழ் புத்தக உலகின் வேகம் எனக்கு தமிழகத்தை விட்டு வெளியே வந்த பின்புதான் தெரிந்த்தது. நமது வாசிக்கும் ஆவல் பற்றி அமெரிக்கர்கள் பெரிதும் ஆச்சரியம் கொள்கின்றனர்.

  சிறு கதைகளை எழுதிய நுறு பேரும் இது குறித்து சிறிதளவும் கவலை கொள்ள போவதில்லை.

  புத்தகத்தை விலை கொடுத்து வாங்குபவர்கள் எண்ணிக்கை ஆபிதீன் வெளியிட்டதால் சிறிதளவும் குறைய போவதும் இல்லை.

  சென்ஷி ஒருவரின் முயற்சிதான் மிகவும் பாராட்ட தக்கது. மேலோட்டமாக பார்த்தால் சென்ஷியின் உழைப்பு மற்றவரால் திருடப்பட்டு விற்க படுகிறது என்றுதான் அர்த்தமாகிறது.

  வேடியப்பன் , சென்ஷி மற்றும் ஆபிதீன் அனைவரும் சமாதானமாக போகனும். ஆபிதீன் அவர்கள் இந்த பிடிஎஃப் தரவிறக்கத்தை நீக்கி தமிழ் புத்தக உலகத்தின் சுகாதாரத்தை காக்கணும் என்பதே எங்களின் ஆவல்.

 49. 11/01/2014 இல் 00:25

  வேடியப்பன் , சென்ஷி மற்றும் ஆபிதீன் அனைவரும் ஒன்றாக செயல்பட்டு பழைய முத்து காமிக்ஸ் களை மீண்டும் உயர்ப்பிக்க முடிந்ததால் தமிழ் உலகமே தாழ் பணிந்து நன்றி சொல்லும்.

 50. 11/01/2014 இல் 18:18

  சென்ஷியின் உழைப்பு பலன் கருதாது என்றாலும் அதை இருட்டடிப்பு செய்து அலட்சியபடுவது இலக்கிய நேர்மையல்ல.

 51. 13/01/2014 இல் 15:17

  ‘100 சிறுகதைகளை PDFஆக வெளியிட்ட ஆபிதீனின் கையை ஒடிக்க வேண்டும் என்ற மனுஷ்ய புத்திரனின் அகங்காரக் குரலுக்கு எதிராய் கிளர்ந்தெழாவிடில் நான் என்ன மனிதன்?’ என்று நண்பர் மாமல்லன் தன் பதிவில் (http://www.maamallan.com/2014/01/blog-post_12.html ) கேட்டிருந்ததைப் படித்து ஒருமாதிரியாகிவிட்டது மனது.

  ***

  இது இன்றைய ப்ளஸ்-ல் நண்பர்கள் உரையாடியது :
  ————————————————————————-
  நாடோடி இலக்கியன் : பிடிஎஃபில் காஞ்சனைன்னு இன்டெக்ஸ்ல ஒரு சிறுகதை தலைப்பு இருக்கு. உள்ளே இருக்கா மேரி தெரியலை. 100 ன்னா 100ம் இருக்க வேண்டாமா?

  Vasu Balaji : பிடிஎஃப்னதும் இப்புடியெல்லாம் கேப்பீங்க. 650ரூ குடுத்து வாங்கிட்டு அதுல இப்டின்னா எஸ்ராவ கேக்கறதா? வேடியப்பன கேப்பீங்களா?

  ரா கின் : பிடிஎஃப் ல இல்லைன்னா என்ன ஓய்? இந்தாரும் படியுங்கள் :

  http://azhiyasudargal.blogspot.in/2010/10/blog-post_31.html

  ***
  ‘காஞ்சனை’ சேர்க்கப்பட்ட pdfஐ இணைத்திருக்கிறேன் இப்போது (Part 1). அனைவருக்கும் நன்றி.

  • 14/01/2014 இல் 13:20

   நரசிம்மன் என்று பெயர் வைக்கப்படும்போதே மாமல்லனுக்கு, அநியாயத்தைக் கண்டவுடன் குத்திக்கிழிக்கும் கோபமும் உடன் வந்துவிட்டதுபோல.

   அது கிடக்கட்டும்,

   யார் கையையாவது ஒடித்து முடமாக்குவதில் ம.பு.வுக்கு அப்படி என்ன ஆனந்தம்?

 52. எஸ்.எல்.எம். ஹனீபா said,

  15/01/2014 இல் 10:26

  அன்புள்ள ஆபிதீன்,
  100 கதைகளில் 2 கதைகளையாவது தேடிப் பிடித்து நானும் ஸபீர் ஹாபிஸும் அனுப்பினோம். இப்படியொரு கூத்து இதற்குப் பின்னணியில் இருக்கிறதென்று எனக்குத் தெரியாது. 2000ம் ஆண்டு தமிழினியின் போது, எஸ்.ரா.விடம் மூன்று மணிநேரங்கள் உரையாடி, இலங்கையில் வெளிவரும் அமுது சஞ்சிகையில் அந்த உரையாடலை அப்படியே பதிவேற்றம் செய்தேன். அவர் என்னிடம் புத்தனின் பல் என்றொரு கதையைக் கூடச் சொன்னார். பிரம்மாண்டமான கதை. அந்தக் கதையை விட இங்கே பின்னூட்டமாக வந்துள்ள கதைகள் இன்னும் பிரமாண்டமாகத் தெரிகிறது. இப்படியொரு இலக்கிய சர்ச்சைக்கு வழிவகுத்த சகோதரன் சென்ஷியையும் ஆபிதீனையும் எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. எஸ்.ரா. சொல்லும் மனச்சாட்சி எது? அற்பதமான அந்தக் கதைகளை எழுதிய தனிமனிதர்களின் விஷயத்தில் இல்லையா? எல்லாவற்றிலும் ஒட்டுமொத்த வியாபாரிகளே அள்ளிக் கொண்டு போவதுதானா தர்மம்?
  எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகளைப் படித்துத் தெளிந்த எனக்கு, அவர் சொல்கின்ற இந்த மனச்சாட்சி புரியமாட்டேன் என்கிறது.

 53. Sargunam Shafi said,

  21/01/2014 இல் 08:08

  சென்ஷி, ஆபிதீன் அண்ணன், மிக்க நன்றி.
  (உரிமைக்கு எதிரான) போராட்டம் வெல்லட்டும்.

 54. 01/02/2014 இல் 12:53

  சினிமால மற்றும் பலர்னு போடுறமாதிரி கலந்துகட்டி ஃபேஸ்புக்ல விளம்பரம்….தோ இப்பதான் 5 நிமிசம் ஆச்சு!!
  🙂 🙂

  டிஸ்கவரி புக் பேலஸ்-ன் புதிய வெளியீடு மற்றும் விற்பனை உரிமை பெற்ற புத்தகங்களை சென்னையில் பனுவல், நீ புக் லேண்ட் -லும், சேலத்தில் பாலம் புத்தகக் கடையிலும், கோயம்பத்தூரில் விஜயா பதிப்பகத்திலும் பெற்றுக்கொள்ளலாம். விரைவில் தமிழகமெங்கும்..

  1. 100 சிறந்த சிறுகதைகள் – தொகுப்பு .எஸ்.ரா
  2. பிக்சல் . சி.ஜெ.ராஜ்குமார்
  3. அசையும்படம் . சி.ஜெ.ராஜ்குமார்
  4.. தெரிவை . பத்மஜா நாராயணன்
  5. லிண்ஷேலோகன் w/o மாரியப்பன். வா.மணிகண்டன்
  5. லீனா மணிமேகலையின் புத்தகங்கள் மற்றும் DVD – கள்

 55. மணி said,

  29/04/2014 இல் 11:55

  படிக்க தேடிய போது அருமையான பதிவு கிடைத்தமைக்கு நன்றி..

 56. சோ.வே.செல்வமூர்த்தி said,

  18/01/2018 இல் 12:42

  தரவிறக்கம் செய்துகொள்ளவா வேண்டாமா ஐயா?

  • 18/01/2018 இல் 12:46

   செய்துகொள்ளுங்கள். அதற்காகத்தானே இங்கே சேமித்திருக்கிறோம்.

 57. கலைச்செல்வி said,

  10/08/2018 இல் 15:50

  மிக அருமையான முயற்சி. நன்றி

 58. சரவணக்குமார். ரா said,

  29/11/2018 இல் 18:47

  சரவணக்குமார்

 59. Priya said,

  06/01/2022 இல் 16:05

  சிறப்பு


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s