காலம் மாறுகிறது! – எஸ்.எல்.எம். ஹனீபா

இப்போதுதான் மெயில் வந்தது , ஒரு சூப்பர் ஃபோட்டோவுடன். காக்கா கொஞ்சம் கைலியை தூக்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். நல்லதே விளையட்டும்! – ஆபிதீன்.
***slmDSC06313
காலம் மாறுகிறது!

என்னுடைய 68 வருட ஆயுளில் மழை பெய்யாத மாதங்களாக இந்த வருடத்தின் ஒக்டோபர், நவம்பர் மாதங்களைக் கண்டிருக்கிறேன். விதைத்து ஒரு மாதமாக மழையில்லை. உரம் போட்டு 15 நாட்களாக மழையில்லை. களை நாசினி அடித்து 10 நாட்களாக மழையில்லை. எங்கள் விவசாயியும் வானம் பார்த்த பூமியும் ஆடு புலியாட்டம்.

கடந்த 3 வருடங்களாக விவசாயிகள் பாரிய நஷ்டத்தை அனுபவித்து வந்திருக்கிறார்கள். இந்த ஆண்டுடன் அதிகமான விவசாயிகள் தங்கள் வாழ்வின் கனவுகள் அத்தனையையும் பறிகொடுத்து வானத்தைப் பார்த்து மானத்தையும் பறிகொடுத்த மனிதர்களாகப் போவார்களோ என்று கவலைப்படுகிறேன்.

அண்மையில் எனது நண்பரின் தோட்டத்திற்குச் சென்ற நான், அவரின் சிறு பயிர்களுக்கு கொஞ்சம் யூரியா ஊட்டத்தை எவ்வாறு வேகமாகச் செலுத்தலாம் என்பதை செயல் முறை மூலம் காண்பித்தேன். 30 நிமிடங்களில் 300 பயிர்களுக்கு உரம் இடலாம். ஒரு சுரங்கைக் கைக்குள் பிடிக்கும் உரத்தை பத்துக் கன்றுகளுக்கு இடலாம். அதுவும் ஒரு பக்குவம், அதுவும் ஒரு பழக்கம்.

***

நன்றி :  எஸ்.எல்.எம். ஹனீபா

4 பின்னூட்டங்கள்

 1. 12/12/2013 இல் 11:45

  ஃப்ளஸ்ஸில் சகோதரர் கென் (Ken Tvlm)
  ———————————————-

  எங்கப்பாவின் இரு கை விரல்களும் ஏன் கையும் காலுமே சரியில்லாத போதும் ( ஒரு போதை மாலையில் மதுகிலிருந்து புரண்டு 30 அடி பள்ளத்தில் விழுந்ததில்) வயலுக்கு உரம் இடுவதை யாருக்குமே விட்டுத்தருவதில்லை.

  வயலின் வரப்பு சீரமைப்பிலிருந்து , அண்டை வெட்டுதல் வரைக்கும்.

  இம்முறை மழையினால் நட்ட நடவு மிதந்தது, இருந்தும் உரமிட்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

 2. 12/12/2013 இல் 15:23

  //விவசாயிகள் தங்கள் வாழ்வின் கனவுகள் அத்தனையையும் பறிகொடுத்து வானத்தைப் பார்த்து மானத்தையும் பறிகொடுத்த மனிதர்களாகப் போவார்களோ//

  கடவுளெனும் முதலாளி
  கண்டெடுத்த தொழிலாளிக்கு
  எப்பவுமே
  கவலை பெருசுதான்;
  வலி கடுமைதான்;

 3. அனாமதேய said,

  14/12/2013 இல் 20:02

  விவசாயிக்கு லாபம் வரும் என்பது
  எந்த வகையிலும் சாத்தியமில்லை.
  அப்படியே வரும் என்றால்…
  அவன் வயலுக்கு போன
  நாட்களுக்குறிய சம்பளமாகக் கூட
  அது தேறாது.
  விவசாயி நிஜத்தில் பாவம்.
  ஆனால், நாடுக்கான அவன்
  தனது சேவையை நினைத்து
  அவன் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.
  இதனை நானும் விவசாயம் பார்த்திருக்கிறேன் என்கிற
  அனுபவத்தோடு சொல்கிறேன்.

 4. தாஜ் said,

  14/12/2013 இல் 20:42

  மேலே எழுதியிருப்பது நான்தான்.
  – தாஜ்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s