திக்கற்றவர்க்கு இணையமே துணை!

ஃபேஸ்புக்கில் ஓசை செல்லா எழுதியிருந்ததைப் படித்து ப்ளஸ்-ல் பகிர்ந்த சென்ஷிக்கு முதல் நன்றி. அதற்கப்புறம்தான் ஓசை செல்லாவுக்கு! எனக்கு ரொம்ப பிடித்த பாடல்களில் ஒன்றைப் பற்றிய (இசை : ஜான்ஸன் மாஸ்டர்) பதிவு இது.
***
இந்தக்கதை / நிசம் ஒரு மூலையிலுள்ள கேரள கிராமத்தில் இரு வாரங்களுக்கு முன்பு ஸ்டார்ட் ஆகிறது… . முதலில் ப்ளாஷ் பேக்.. ஒரு வருடத்திற்கு முன்பு … அது ஒரு ஏழ்மையான ஒரு கிராமத்துவீடு. கயில் குழந்தையோடு ஒரு இளம்பெண்.. அற்புதமான குரல் வளம்.. ஆனால் வறுமை காரணமாக இசையெல்லாம் சென்று படிக்க முடியவில்லை. ரேடியோ டி.வி யில் பார்த்தும் கேட்டும் பாடிப்பழகுவாள். கணவரின் நண்பர் ஒருவர் அந்தப்பெண் பாடுவதை தனது செல்பேசி காமிராவில் படம்பிடித்து இணையத்தில் யூ டியூபில் ஏற்றுகிறார். அந்தப்பாடல் நம் சின்னக்குயில் சித்ரா 1990ல் பாடிய ‘ராஜஹம்சமே சமயம்’ எனும் புகழ்பெற்ற பாடல். ஒரு வருடம் யூ டியூபில் யாரும் கவனிக்காமல் அந்த காணொளிஅப்படியே இருந்தது. அதை ஏதேச்சையாக பார்த்த சில இணையம் பாவிப்பவர்கள் அதை முகநூல் ட்விட்டர் என்று ஷேர் செய்திருக்கிறார்கள். ஒரே வாரத்தில் மூன்று லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். சோசியல் மீடியாவில் பிரபலம் ஆவதை அறிந்த கைரளி டீவி அந்த பெண்ணை பேட்டியெடுக்க காமிரோவோடு குழுவை அனுப்பியது அந்த குக்கிராமத்து வீட்டுக்கு . . . பேட்டியின் போது அந்தபெண்மணிக்கு நேரலையில் வந்தவர்.. வேறு யாருமல்ல.. அந்த பாட்டை பாடி மாநில அரசின் சிறந்த பாடகி விருது பெற்ற சின்னக்குயில் சித்ராவேதான். உணர்ச்சி மிகுதியால் அந்தப்பெண் அழுதே விட்டார். தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியவில்லை அவருக்கு. அதற்கப்புறம் சென்ற வாரதிலேயே மலையாளப்பட உலகினரான பிஜிபால் ரதிஷ்வேகா போன்றவர்கள் வாய்ப்புக்கொடுக்க முன்வந்திருக்கிறார்கள். இன்று அவர்தான் கேரள இண்டர்னெட் சென்சேசன். சேட்டன்களும் சேச்சிகளும் இன்று சந்திரலேகாவை கொண்டாடுகிறார்கள் என்றால் மிகையில்லை.அவரது வாழ்வை மாற்றிய அந்த பாடல் காட்சி இதுதான்.. Rajahamsame Chamayam . இணையம் மூலம் ஒரு பெண்ணின் வாழ்க்கை மாற்றமடைகிறதென்றால் நமக்கும் மகிழ்ச்சிதானே ! தமிழ் இணையவுலகம் சார்பாக நாமும் அவரை வாழ்த்துவோம். இது நமக்கும் ஒரு நல்ல பாடம். சும்மா மொக்கையா லைக் பாலிடிக்ஸ் அது இதுன்னு இயங்குவதோடு அல்லாமல் இந்த மாதிரியான திறமைகளை நம்மால் இயன்ற அளவு ஷேர் செய்து வெளிச்சத்துக்கு கொண்டுவந்தாலே போதும்.. அவர்கள் வாழ்வில் ஒரு விடிவு வரலாம் தானே ! திக்கற்றவர்க்கு இணையமே துணை.
***
***
Thanks to : FOLKSTUDIOindia
***
Original Song here : http://www.youtube.com/watch?v=Iax9e_5pzlc

4 பின்னூட்டங்கள்

 1. 21/10/2013 இல் 17:35

  இதுபோல பல நல்ல விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன….

  என்ன…
  நம்மைச் சுற்றி நடப்பவையும்,
  நம் கண்ணில் படுபவையும் மட்டும்
  பெரும்பாலும் மொக்கைகள்

  • 21/10/2013 இல் 21:09

   என்னைச் சுற்றிலுமுள்ள நண்பர்களை இப்படியெல்லாம் கிண்டல் செய்யக்கூடாது!

 2. 21/10/2013 இல் 19:44

  இப்படி எத்தனையோ பேர் குடத்திலிட்ட விளக்காக இருக்கிறார்கள். என்ன செய்வது கண்ணில் படுவது கொஞ்சம் படாதது எத்தனை எத்தனையோ…?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s