இஸ்லாம் : கண்ணீரை வரவழைத்த பதில்

போர்வை பாயிஸ் ஜிப்ரி அவர்கள் எழுதிய இஸ்லாமிய நீதிக் கதைகளிலிருந்து ஒரு கதை, அல்ல, வரலாற்று நிகழ்வு. தற்போதைய அரபு நாட்டு மாமன்னர்களை  ஒப்பிட்டுப்பார்க்காமல் வாசகர்கள் படித்து நல்லுணர்ச்சி பெறின் அதுவொன்றே பாயிஸ் ஜிப்ரிக்கு போதும். எனக்கும். Download PDF .  நன்றி. – ஆபிதீன்

***

islam-kathai-jibriஇஸ்லாத்தின் நல்லாட்சியாளருள் தலை சிறந்தவரான கலீபா ஹஸரத் உமர் (ரலி) அவர்கள் தனது குடும்பச் செலவுக்காக சிறு தொகைப்பணத்தை மாதா மாதம் பொது நிதியிலிருந்து பெற்று வந்தார்கள்.

ஒருமுறை கலீபா அவர்களுக்கு அவசரத்தேவைக்காக நூறு திர்ஹம்கள் பணம் தேவைப்படுகிறது. எனவே அரச நிதிக்காப்பாளருக்கு பின்வருமாறு கடிதமெழுதினார்கள்.

அரச நிதிக்காப்பாளருக்கு, எனது சொந்த தேவைக்காக நூறு திர்ஹம் பணம் தேவைப்படுகிறது. எனவே அடுத்த மாதச் சம்பளத்தில் அதைக்கழித்துக் கொள்ளுங்கள். முற் பணமாக தயவு செய்து குறிப்பிட்ட தொகையை அனுப்பி வையுங்கள்.

நிதிக்காப்பாளரிடமிருந்து கலீபா அவர்களுக்குப் பதில் வந்தது.

அன்புள்ள கலீபா அவர்களுக்கு, தங்களின் கடிதம் கிடைத்தது. தாங்கள் அடுத்த மாதம் வரை உயிரோடிருப்பதாக எனக்கு உறுதியளிப்பின் தாங்கள் குறிப்பிட்ட தொகையை உடனடியாக அனுப்பி வைக்கிறேன்.

கலீபா அவர்களின் கண்கள் குளமாயின. மரணம் எந்த நிமிடத்தில் வரும் என யாருக்குத்தான் கூற முடியும், அல்லா(ஹ்)வைத் தவிர. நிதிக்காப்பாளரிடம் தன் தவறுக்காக மன்னிப்பை வேண்டி நின்றார்கள் அந்த மாமன்னர் கலீபா உமர் (ரலி) அவர்கள்.

***

நன்றி : போர்வை பாயிஸ் ஜிப்ரி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s