காலமானார் நம் கவிஞர் சலீம்…

salim-mama2முன்னவனை முன்வைத்து…!‘ என்று பதிவிட்டு முழுதாக மூன்று வாரங்கள் முடியவில்லை. நம் பேரன்புக்குரிய கவிஞர் சலீம் மாமா அவர்கள் இன்று நம்மை விட்டுப் பிரிந்தார்கள். தம்பி தீனிடமிருந்து காலையிலேயே அதிர்ச்சி தரும் மெயில்  . இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியுன்… மாலை 4.30க்கு நாகூரில் நல்லடக்கம் நடைபெறுகிறது. அவர்களின் மறுமை வெற்றிக்கு அனைவரும் துஆ செய்வோம்.

வஸ்ஸலாம்

தொடர்புடைய பதிவுகள் :

காதில் விழுந்த கானங்கள்

நெகிழவைத்த நாகூர் சலீம் !

இறைவனும் இருட்டும் – அப்துல் கையூம்

நாகூர் தந்த கொடை – (கவிஞர் சலீம் பற்றி ) நாகூர் ரூமி

***

நீரில் ஒரு குமிழி

கவிஞர் சலீம் இயற்றி ஈ.எம்.ஹனீபா பாடியது

இன்று வந்து நாளை போகும்
நிலையிலே நிலையிலே
என்ன செய்து வாழுகின்றாய்
உலகிலே உலகிலே…

– இன்று வந்து

வந்த நோக்கம் இன்னதென்று தெரியுமா
வல்ல இறைவன் சொன்ன மார்க்கம் புரியுமா
வந்த இடத்தில் சொந்தம் கொண்ட மயக்கமா
வாங்கி வந்த கடனைத் தீர்க்கத் தயக்கமா
வரம்பு மீறிப் போவதென்றால் முடியுமா..? முடியுமா..?

– இன்று வந்து

கருணைநபிகள் புரிந்த தியாகம் மறையுமோ
கர்பலாவைக் கண்டகண்கள் மகிழுமோ
அருமை உமரின் துயரம் விரைவில் ஆறுமோ
அலீயின் வீரம் நெஞ்சினின்றும் மாறுமோ
இவைகள் யாவும் யாருக்காக? சொல்லுவாய் சோதரா!..

– இன்று வந்து

ஏதுக்காக இறைவன் உலகை ஆக்கினான்
யாருக்காக நபியை இங்கே அனுப்பினான்
தீதுசெய்து மனிதக்கூட்டம் நோகவோ?
தாவிப் பாயும் நரகத் தீயில் வேகவோ?
வேதக் குர்ஆன் பாதை மீது செல்லுவாய் சோதரா!

– இன்று வந்து

11 பின்னூட்டங்கள்

 1. 01/06/2013 இல் 10:18

  தமிழக அரசின் “கலைமாமணி” விருது பெற்ற, பிரபல இஸ்லாமியப் பாடலாசிரியர் கவிஞர் நாகூர் சலீம் கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து, 01-06-2013 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்று மாலை 4.30 மணியளவில் அவரது உடல் நாகூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

  வண்ணக் களஞ்சியப் புலவர்களின் பரம்பரையில் பிறந்த கவிஞர் நாகூர் சலீமுக்கு வயது 77. இவர் எழுதிய 7,500க்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பாடல்கள், நாகூர் ஈ.எம்.ஹனீபா உட்பட அனைத்து இஸ்லாமியப் பாடகர்களும் பாடி பிரசித்திப் பெற்றவை.

  இவர் எழுதிய “காதில் விழுந்த கானங்கள்” என்ற நூலை “பலாச்சுளை பாடல்கள்” என்று வர்ணித்து அணிந்துரை வழங்கியிருக்கிறார் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி. “கவிஞர் சலீமின் பாடல்கள், பக்கவாத்திய ஓசைகளையும் விஞ்சி போதங்களின் நாதங்களாக நின்று நிலவுவது தனிச்சிறப்பு” என்று சிராஜுல் மில்லத் மர்ஹூம் A. K. அப்துஸ் சமது சாஹிப் அவர்களின் பாராட்டுப் பெற்றவர்.

  “இவருக்கு திரைப்பட உலகில் தக்க வாய்ப்பு கிட்டுமானால், இன்னொரு கண்ணதாசனை நாம் கண்டு களிக்கலாம்; உணர்ச்சி மிக்க பாடல்களில் நம் உள்ளம் குளிக்கலாம்” என்று கவிஞர் மு. மேத்தாவின் அங்கீகாரம் பெற்றவர். கவிஞர் சலீம் எழுதிய “காய்ந்து சிவந்தது சூரியகாந்தி” என்ற பாடலைப் பாராட்டி, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜீ.ஆர் ரூபாய் பத்தாயிரம் பரிசு வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இஸ்லாமியப் பாடல்கள் மட்டுமின்றி, திரைப்படப் பாடல்கள், கதை, வசனம், நாடகங்கள், கவிதைகள் படைத்த கவிஞர் சலீம், நாகூரில் ஒரு கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். முதல் இஸ்லாமியப் பெண்மணி எழுத்தாளர் சித்தி ஜுனைதா பேகம், திரைப்பட வசனகர்த்தா தூயவன் ஆகியோரின் சகோதரர் இவர். எழுத்தாளர் முனைவர் நாகூர் ரூமி, ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யின் தலைவர் ஆடிட்டர் முஹிய்யத்தீன் அப்துல் காதர் ஆகியோரின் தாய் மாமா இவர். அன்னாரின் ஆத்மசாந்திக்கும், மறுமை நல்வாழ்விற்கும், இறைவனிடம் கையேந்துவோமாக! ஆமீன்.

 2. 01/06/2013 இல் 21:01

  பணிக்குப் போகுமுன் என் கைப்பேசியில் முகநூலைப் பார்த்தவுடன் சகோதரர் சிங்கப்பூர் இஸ்மாயில் தந்த அதிர்ச்சி செய்தி சலீம் நானாவின் மரணம். நான் ஊரில் இருந்தபோது, அன்சாரி மருத்துவமனையில் ICU ல் வைத்திருக்கிறார்கள் என்று ஆபிதீன் சொல்ல உடனே சென்று பார்த்தபோது அங்கில்லை.

  இன்று நம்மிடமில்லை. அங்கே ஹஜ்ரத் அவர்கள் வீட்டில் பவ்யமாக அமர்ந்து கரகரத்த கம்பீரமான கட்டைக் குரலில் பேசும்போது ஒரு இனிமை இருந்தது, ஆழ்ந்த கருத்துடைய நகைச்சுவை வெளிப்படும். சில வேளைகளில் அந்நகைச்சுவையிலிருந்து ஹஜ்ரத் அவர்களின் பேச்சில் சூடு பிடிக்கும். உயரிய கருத்துக்கள் எங்களுக்கு கிடைத்தன.

  கவிஞர்கள் என்றாலே இப்படித்தான் போலும்? கவிஞர் தா.காசிம் இருந்தால் ஹஜ்ரத் அவர்களின் பேச்சில் அனல் தெரிக்கும்.

  ஹஜ்ரத் அவர்களின் மறைவுக்குப் பிறகு சலீம் நானா மட்டுமல்ல பலருடைய சந்திப்புக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஆனால் சென்ற வருடம் கலிஃபாசாபு மறைந்தபோது, அங்கே சலீம் நானாவை சந்தித்து கைபிடித்து அளவலாவிய நிகழ்வு கண்ணெதிரே கூத்தாடுகிறது.

  சுழலும் காலச்சக்கரத்தில் வருவோர்க்கும் போவோர்க்கும் சந்தைமடம்தான் இவ்வுலகம்…?

 3. தாஜ் said,

  02/06/2013 இல் 03:04

  இஸ்லாமியப் பாடகர்களுக்கு
  இஸ்லாத்தின் அடிப்படைக் கருத்துக்கள் கொண்ட
  வளமான / இசைமயமான /
  மனதில் வந்து சப்பணமிடும்
  லகுவான வார்த்தைகளை கொண்ட
  கவிஞர் சலீம் அவர்கள்
  நம்மைவிட்டு பிரிந்ததில்
  சொல்லொன்னா துயர் உண்டு.

  இந்த வரிசையில்…
  கவிஞர் காசீம் அவர்களின் பாடல் புனைவுக்கு
  அடுத்தப்படியாக நான் மிகவும் ரசித்தப்
  பாடல்களைத் தந்தவர்.
  நாகூர் ஹனீஃபா அவர்களது குரலிசையில்
  கவிஞர் சலீம் அவர்களது சத்தான வரிகள்
  நம்மை ரசிப்பின் உச்சத்திற்கே கொண்டு போகும்.

  அவரைப் பிரிந்ததில்
  என் நண்பர்கள் பலருக்கு மகா துயரம்.
  அவர்களின் அந்தத் துயரத்தில்
  நானும் பங்கெடுக்கிறேன்.

  இஸ்லாத்தை வளமாக அறிந்த
  இஸ்லாமிய எழுத்தாளர்கள் யாரேனும்
  அவரது பாடல் புனைவுகளை
  தீர ஆய்வு செய்வது தகும்.

 4. 02/06/2013 இல் 07:14

  நண்பர் அசனா அனுப்பிய சுட்டி :
  கவிஞர் நாகூர் சலீமுடன் ஒரு நேர்முகம் – மூன் டிவி

 5. 02/06/2013 இல் 10:16

  அவர்களின் மகிழ்வும்,நிம்மதியுமான மறுமை வாழ்வுக்காக துவா செய்தவனாய்,

  பிரிவின் வருத்தம் தந்த பெருமூச்சுடன்,

  அமீன்

 6. தீன் said,

  02/06/2013 இல் 20:07

  from The Hindu (2nd Jun’2013)
  —————————————
  Nagore’ Saleem passes away

  ‘Nagore’ Saleem, a famous poet and Kalaimamani awardee, passed away in Nagore town on Saturday. He was 77. Hailing from the dynasty of Vanna Kalanjiyam poets, Saleem penned as many as 7,500 Islamic devotional songs.

  A majority of the songs rendered by ‘Nagore’ E. M. Haneefa were composed by late Saleem. He had also penned songs and dialogues for movies and dramas. Dravida Munnetra Kazhagam chief M. Karunanidhi and late MGR had hailed his contribution to Tamil language and literature.

 7. 02/06/2013 இல் 20:21

  ஃபேஸ்புக்கில் ஹெச்.ஜி.ரசூல் :

  நாகூர் சலீமின் அழியாத காவிய வரிகள்

  நாகூரின் தாகூர் என அதிக பட்ச சொற்களால் பாராட்டப் பட்ட கவிஞர் நாகூர் சலீம் இறையியல் தளத்தோடு நின்றுவிடாமல் பாடல்களை முஸ்லிம்களின் வாழ்வியல் தளத்திற்கு கைபிடித்து அழைத்துவந்தவர். தாயக மண்ணை இழந்து மனைவி,பிள்ளைகளைப் பிரிந்து புலம் பெயர்ந்த அகதி வாழ்வாக வளைகுடா அரபு நாடுகளில் நம் சகோதரர்கள் தஞ்சம் புகுந்த நிலையில் வாழ்கிறார்கள். கணவர்களை பிரிந்து வாடும்அந்த சகோதரிகளின் பிரிவுத்துயரை தனது பாடல் வரிகளில் கண்ணீராய் நனைத்து வைத்தவர் கவிஞர் நாகூர் சலீம். இப்பாடல் வரிகளை காயல் ஏ.ஆர். ஷேக் முகமதுவுடன் இணைந்து பாடியவர் திருமதி ஜெயபாரதி.

  கப்பலுக்கு போன மச்சான்
  கண்நிறைஞ்ச ஆசை மச்சான்
  எப்பத்தான் வருவீங்க எதிர் பார்க்கிறேன் – நான்
  இரவும் பகலும் தொழுது தொழுது கேட்கிறேன்

  கண்ணுக்குள்ளே வாழ்பவளே
  கல்புக்குள்ளே ஆள்பவளே
  இன்ஷா அல்லா விரைவில் வருவேன் – நான்
  இஷ்டம் போல நினைச்சதெல்லாம் தருவேன்..

  ***

  விரிவான ‘திண்ணை’ கட்டுரை:
  http://puthu.thinnai.com/?p=21092

 8. 06/06/2013 இல் 13:20

  ஃபேஸ்புக்கில் அண்ணன் ஹிலால்முஸ்தஃபா:

  என் இனிய நண்பர் நாகூர் சலீம் இறைநாட்டப்படி இன்று இல்லை எனும் செய்தி என்னை வந்து சேர்ந்த போது எனக்குள் ஒரு ஆழ்ந்த அதிர்வைக் கண்டேன்.

  நாங்களெல்லாம் நாகூர் ஞானமாமேதை S.அப்துல் வஹாப் பாகவி அவர்களின் பர்ணசாலைத் தயாரிப்பாக இருந்த காலகட்ட நினைவுகள் மனதுக்குள் கும்மாளமிடுகின்றன.

  மறைந்த கவிஞர் காசிம், ஜபருல்லாஹ், நான், கவிஞர் மேத்தா, மறைந்த ஆப்பனூர் காசிம் அண்ணன், மறைந்த நாகூர் சுல்தான் தாதா போன்றவர்கள் பேசிப் பழகி மகிழ்ந்து திரிந்த அந்தக் காலங்கள் வரங்களால் நிரம்பிய இனிய நாட்களாகும் .

  கவிஞர் நாகூர் சலீம் எங்கள் அனைவரை விடவும் குள்ளமான 4 1/2 அடிக்காரர். ஆனால் அவருக்குள் இறைவன் நிரப்பி இருந்த கவிதா ஞானம் நாங்கள் அனைவருமே அண்ணாந்து பார்க்கும் பிரம்மாண்டமானது.

  எல்லாவற்றவையும் ஆக்கித் தந்த இறைவன் ஒரு நாள் அனைத்தையும் அவனளவில் எடுத்துக் கொள்கிறான். இந்த விதியை மீறிய எந்தச் சக்ரவர்த்தியும் இங்கே இல்லை. கவிதா சக்ரவர்த்தி கவிஞர் சலீமுக்கும் இதுதான் நிகழ்ந்திருக்கிறது.

  கவிஞர் சலீமுக்கு, எல்லாருக்கும் வர வேண்டிய ஆசையும் வந்தது. திரையுலகில் பரிணமிக்க வேண்டிய ஒரு வகை நியாயமான ஆசைதான் அது. கவிஞர் சலீமின் சகோதரர் அக்பர் அதாவது திரையுலகில் தூயவன் , கதாசிரியராக திரையில் நடமாடியவர்.

  திரைப்பாடல் எழுத சென்னைக்குச் சென்று கவிஞர் சலீம் முயற்சித்தார். ஒரு தயாரிப்பாளரைச் சந்தித்தார். அவர் சொன்ன இசை அமைப்பாளர் இசைக் குறிப்புகளைத் தந்து நாளைக் காலை வரும்போது 4,5 பல்லவிகளை எழுதி வாருங்கள் என்று சொன்னார். கவிஞர் சலீம் மறுநாள் அதிகாலையில் 101 பல்லவிகளை எழுதிச் சென்றிருந்தார். அத்தனையும் பார்த்த இசை அமைப்பாளர் ஆச்சர்யத்தில் அதிர்ந்து போனார். ஆனாலும் சில பல காரணங்களினால் திரைப்பட பாடலாசிரியராக ஒரு போதும் வர முடியவில்லை.

  எரிச்சலடைந்த கவிஞர் சலீம் தன்னுடைய நாகூருக்குத் திரும்பினார். நாகூர் தர்காவிற்குச் சென்று எஜமான் ஷாகுல் ஹமீது நாயகம் திருமுன்னர் , “தோற்று வந்த நான் நாகூர் தர்கா குளத்தில் என் பேனாவை வீசி விடுவேன்” எனக் கூறி வீசி விட்டார்.

  இந்த நிகழ்வுக்கு முன்னரும் இஸ்லாமியக் கீதங்கள் கவிஞர் எழுதி வந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் இஸ்லாமிய கீதங்களையே முழுவதுமாக அதிகம் எழுதி வந்தார். நாகூர் தர்கா குளத்தில் வீசி எறிந்த பேனா இறை ஞானங்களால் நிரப்பப்பட்டு கவிஞர் கைக்கு திரும்ப வந்து விட்டதோ என்று நாங்களெல்லாம் ஆச்சர்யப் படுவோம்.

  “இறைவா ! கவிஞரின் பிழைகளைப் பொறுத்து அருள்வாயாக . உன்னுடைய மன்னிப்புகளையும் நற்பதவிகளையும் கவிஞரின் கவிதைகளைப் போலவே பல கோடி அளவு பெருகச் செய்து கவிஞருக்கு வழங்கி அருள்வாயாக”

  கவிஞரின் குடும்பத்தினரின் வருத்தங்களோடு நானும் பங்கு கொள்கிறேன். இறைவனுக்காகப் பொறுத்துக் கொள்வோம். குறிப்பாக தம்பி நாகூர் ரூமியுடனும் இந்த வேதனையைப் பகிர்ந்துக் கொள்கிறேன். (கவிஞர் நாகூர் சலீமின் சகோதரி மகனார், தம்பி நாகூர் ரூமி .)

 9. ghouse said,

  22/07/2013 இல் 22:21

  Arumai anaithu thagavalgalum. By salim.periyapa thambi magan ghouse.

 10. 24/07/2013 இல் 09:31

  மேலும் சில காணொளிகள் (நன்றி : தம்பி தீன்) :

  watch?v=vYCynrKapOg

  watch?v=YSAwTB-j6W8&feature=em-upload_owner — Prof KMK on NAGORE SALEEM

  watch?v=O94r3PNEJLk — Mu Metha on NAGORE SALEEM

  watch?v=NwxRadBFVO4&feature=em-upload_owner — Kaviko on NAGORE SALEEM


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s