நாயகத்தின் பேச்சும் சிரிப்பும்

இமாம் கஸ்ஸாலியின் ‘இஹ்யாவு உலூமித்தீ’னிலிருந்து ஒரு பகுதி ‘நாயகத்தின் நற்பண்புகள்’ என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது. தமிழாக்கம் : எங்கள் ஹஜ்ரத் மௌலவி எஸ், அப்துல் வஹ்ஹாப் (பாகவி) அவர்கள். நான்காம் அத்தியாயத்தின் முடிவில்  இருக்கும் பெருமானாரின் அற்புதமான பிரார்த்தனை போன்று நாமும் கேட்கவேண்டும் என்பதற்காகவே பதிவிடுகிறேன். நாயன் நல்லருள் புரியட்டும். நேரம் கிடைக்கும்போது மற்ற அத்தியாயங்களையும் பதிவிட முயல்கிறேன், இன்ஷா அல்லாஹ். இப்படியும் செய்வான் எழுத்தாளன்! – ஆபிதீன்

***

naayaham-gazali-hazrathபெருமானாரவர்கள் மற்றவர்களை விடச் சுத்தமான அரபி மொழி பேசினார்கள். எல்லோரையும் விட இனிமையாக உரையாடினார்கள். “அரபி மக்களிலேயே நான் சுத்தமாகப் பேசுகிறவன்” என்று அவர்களே கூறியிருக்கிறர்கள். ஏனெனில் சுவனவாசிகள் முஹம்மது பேசிய முறையை ஒட்டியே பேசிக் கொள்கிறார்கள்.

தெளிவான கருத்துடன் அவர்கள் நிறுத்தி நிறுத்திப் பேசுவார்கள். தம் கருத்தை அவர்கள் மெது மெதுவாக வெளியிடுவார்கள். அவர்களின் பேச்சில் தேவையில்லாத எந்த விஷயமும் கலக்காது. அந்தப் பேச்சு கோர்வை குலையாமல், சிக்கல் இல்லாமல் அமைந்திருக்கும். கோர்க்கப்பட்ட பளிங்கு மணிகளைப் போன்று அவர்களின்  கருத்துக்கள் தெளிவாகத் தெரியும்.

“நீங்கள் துரிதமாகப் பேசுகிறீர்கள். முன்னுக்குப் பின் சம்பந்தமில்லாதபடிப் பேசுகிறீர்கள். ஆனால் பெருமானாரவர்கள் அப்படிப் பேசமாட்டார்கள். அமைதியுடன் நிறுத்தி நிறுத்திப் பேசுவார்கள்” – இது அன்னை ஆயிஷாவின் விளக்கம்.

திருத்தூதரவர்கள் எதையும் சுருக்கமாகவே பேசுவார்கள். இதையே வானவர் ஜிப்ரயீல் போதித்துச் சென்றார். சுருக்கமாகப் பேசினாலும் தம் கருத்துக்கள் அனைத்தையும் அவர்கள் ஒன்று சேர வெளியிட்டு விடுவார்கள். அவர்களின் பேச்சில் தேவைக்கதிகமான விரிவுரை இடம்பெறாது. சில விஷயங்களைப் பேசி நிறுத்திக் கொள்வார்கள். நண்பர்கள் கவனிக்கிறார்களா , இல்லையா என்று பார்ப்பார்கள். பின்னர் மீண்டும் தொடர்வார்கள்.

அவர்களுக்குக் கம்பீரமான குரல் அமைந்திருந்தது. அதில் மனத்தை ஈர்க்கும் இனிமையும் கலந்திருந்தது.

அவர்கள் பெரும்பாலும் மௌனமாகவே இருந்தார்கள். தேவையில்லாமல் அவர்கள் பேசுவதேயில்லை. பேசத்தகாத எதையும் அவர்கள் பேசமாட்டார்கள். சினம், திருப்தி, முதலிய நன்மைகளின் உண்மையைப் போதித்தார்கள். விரசமாகப் பேசுபவர்களை வெறுத்தார்கள். விரசமான கருத்துக்களை விளக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டால் சூசகமாகவே சுட்டிக் கட்டுவார்கள்.

திருத்தூதர் பேசாத நேரத்தில் நண்பர்கள் பேசிக் கொள்வார்கள்; வாதம் புரிவார்கள். இந்த வாத அரங்கத்திற்குத் திருத்தூதரே நீதிபதி. அவர்களுக்கு எதிரில்தான் தர்க்கம் நடைபெறும். தர்க்கம் முடிந்ததும் அண்ணலாரின் உபதேசம் நடைபெறும். “திருக்குர்ஆனின் கருத்துக்களை ஒன்றோடொன்று கலந்து குழப்பாதீர்கள். திருமறை எத்தனையோ நோக்கங்களுக்காகஅருளப்பட்டிருக்கிறது.” என்று அவர்க்ள் கூறுவார்கள்.

பெரும்பாலும் அவர்களின் முகத்தில் புன்னகையே நிலவும். நண்பர்களைப் பார்த்து சிரிப்பார்கள். நண்பர்களின் பேச்சைக் கேட்டு அதிசயப்படுவார்கள். நண்பர்களோடு தாமும் கலந்து உரையாடுவார்கள். கடைவாய்ப்பல் தெரியும்படியும் அவர்கள் சிரித்திருக்கிறார்கள்.

அண்ணலாருக்கு முன்னால் நண்பர்கள் இரைந்து சிரிக்க மாட்டாரக்ள். புன்முறுவல் பூப்பார்கள். இது திருத்தூதருக்குக் கொடுக்கப்படும் மரியாதை. திருத்தூதர் அவர்களே அநேக சமயங்களில் புன்முறுவல்தானே செய்கிறார்கள். நண்பர்கள் அதைப் பின்பற்ற வேண்டாமா?

ஒருநாள் கிராமவாசி ஒருவர் வந்தார். அவர் முகம் சினத்தின் காரணமாக விகாரமடைந்திருந்தது. எனவே நபித்தோழர்கள் அவரை வெறுத்தார்கள். திருத்தூதர் முகமலர்ச்சியோடு பழகும் பண்பு படைத்தவர்களல்லவா? அதே மனிதர் திருத்தூதரிடம் ஏதோ கேட்கத் துடித்தார்.

“நீர் ஒன்றும் கேட்க வேண்டாம்! போய்விடும்! உம்மை நாங்கள் வெறுக்கிறோம்” என்று நண்பர்கள் கூறினார்கள்.

திருநபியவர்கள் இடைமறித்துப் பேசினார்கள். “அவரை விடுங்கள். அவர் கேட்கட்டும். இறைவன் மீது ஆணை. அவர் சிரிக்கும்வரை நான் அவரை விடப் போவதிலை.”

வந்தவர் வினவினார். “தஜ்ஜால் என்பவர் ரொட்டியைக் கொண்டு வருவானாம். நான் கேள்விபட்டேன். மக்கள் உணவின்றி மடிந்து போவர்களாம். அந்த ரொட்டியை நான் தொடமாட்டேன். கட்டுப்பாட்டுடன் செயலற்றுவேன். அல்லது அதனைப் பறித்து வயிறு முட்டச் சாப்பிட்டு விடுவேன். இறைவனை நான் நம்புகிறேன். தஜ்ஜாலை வெறுக்கிறேன்..”

இந்தக் கட்டத்தில்தான் அண்ணலவர்கள் கடைவாய்ப்பல் தெரியும்படிச் சிரித்தார்கள். “முஸ்லிம்களுக்குச் செய்கிற உதவியை இறைவன் உமக்கும் அவசியம் செய்வான். நீர் கவலைப்பட வேண்டியதில்லை” என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

முயற்சியின் அபார சக்தி குறித்து அவர்கள் பிரசங்கம் செய்தார்கள். இறைவனுக்காகவே சினமுற்றார்கள். சினத்தின் காரணமாக விபரீதம் எதையும் செய்துவிட மாட்டார்கள். இப்படித்தான் அவர்கள் வாழ்ந்தார்கள்.

ஒரு காரியத்தில் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அதன் முழுப் பொறுப்பையும் இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு அவர்கள் செவ்வையாகச் செயலாற்றுவார்கள். “வல்லவனே! நேர்மையை எனக்கு நேர்மையாகக் காட்டுவாயாக! அதை கைக் கொண்டு நடக்கும் ஆற்றலைத் தந்தருள்வாயாக! அற வழியைப் பின்பற்றியொழுகும் மனப்பக்குவத்தை எனக்குக் கொடுத்தருள்வாயாக! முரண்வழியை எனக்கு முரண்வழியாகவே காண்பிப்பாயாக! முரண் வழியை ஒதுக்கித் தள்ளும் துணிவைத் தந்தருள்வாயாக! அபிப்பிராய பேதமுள்ள பிரச்சினைகளில் எனக்குத் தெளிவைக் கொடுத்தருள்வாயாக! உன் அன்பிற்குரியவர்களுக்கு நீ நேர்வழியைக் காட்டுகிறாய்” என்று பிரார்த்திப்பார்கள்.

**

நன்றி : யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்

4 பின்னூட்டங்கள்

 1. தாஜ் said,

  29/05/2013 இல் 08:16

  அண்ணலார் அவர்கள்
  வரலாற்றில்…
  மனிதர்களுக்கான
  தெளிவையும்
  தெளிவுக்கானப் புரட்சியையும் நிகழ்த்தியவர்!
  அவரது வாழ்வின் நாட்களில் எல்லாம்
  மானிட எழுச்சிக்காக பாடுப்பட்டவர்கள்.
  அவர்களது தெளிவு குறித்து
  முல்லாக்கள் சொன்ன சொல்லாயிரம் அறிவேன்!
  இந்த துவா… குறித்து
  அவர்கள் சொல்லி
  நான் அறிந்தேனா என்று நினைவில்லை.

  // “வல்லவனே!
  நேர்மையை எனக்கு நேர்மையாகக் காட்டுவாயாக!
  அதை கைக் கொண்டு நடக்கும்
  ஆற்றலைத் தந்தருள்வாயாக!
  அற வழியைப் பின்பற்றியொழுகும்
  மனப்பக்குவத்தை எனக்குக் கொடுத்தருள்வாயாக! முரண்வழியை எனக்கு
  முரண்வழியாகவே காண்பிப்பாயாக!
  முரண் வழியை ஒதுக்கித் தள்ளும்
  துணிவைத் தந்தருள்வாயாக!
  அபிப்பிராய பேதமுள்ள பிரச்சினைகளில்
  எனக்குத் தெளிவைக் கொடுத்தருள்வாயாக!
  உன் அன்பிற்குரியவர்களுக்கு
  நீ நேர்வழியைக் காட்டுகிறாய்”
  என்று பிரார்த்திப்பார்கள்.//

  எத்தனை சிறப்பான சிந்தனை
  எத்தனைக்கு
  சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது!!!!

  *

  • 29/05/2013 இல் 12:36

   அன்புள்ள தாஜ், ஹஜ்ரத்துக்கும் ரொம்ப பிடித்த துஆ இது. அடிக்கடி எங்களை ஓதிவருமாறு சொல்வார்கள். அரபியில் (சுருக்கமாக) : ”அல்லாஹூம்ம அரினல் ஹக் ஹக்கன் வ அரினல் bபாதிலன் bபாதிலா ‘ . இதை எனது ‘மூடல்’ சிறுகதையில் உபயோகித்திருக்கிறேன்.

 2. 29/05/2013 இல் 14:55

  என் குருநாதர் முதல் பல ஆன்மீக பெரியார்கள் இந்த துவாவை அடிக்கடி ஓத கேட்டிருக்கின்றேன். நினைவூட்டலுக்கு நன்றி!. அழகிய பதிவு.

 3. W.Mohamed Younus. trichy said,

  04/06/2013 இல் 16:01

  Thank you for Gazzali sabu s article


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s