மேரா நாம் அப்துல் ரஹ்மான் – டி.எம்.எஸ்.

‘இன்னாலில்லாஹி…’ என்று துக்கத்தைப் பகிர்ந்துகொண்ட நண்பர் அசனாமரைக்கார், ‘பாட்டும் நானே‘யை போட்டிருக்கலாமே’ என்றார். தெரியவில்லை அவருக்கு, அது முதலிலேயே இங்கே போட்டாகிவிட்டது. ஆதலால்,  ராணி மைந்தன் எழுதிய ‘மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.’ எனும்  நூலிலிருந்து ஒரு சம்பவம்… (பக்: 214-215)..

***

tms1டி.எம்.எஸ். மீது எம்.எஸ்.வி. கொண்டிருந்த மதிப்பு அசாதாரணமானது. தனக்கு சீனியர் என்ற முறையில் மட்டும் அல்லாமல் அந்த அற்புதப் பாடகரின் குரல் கம்பீரம், அவரது பாடும் திறமை ஆகியவற்றில் மனதைப் பறிகொடுத்தவர் விஸ்வநாதன். ‘அவரது குரல், தெளிவான தமிழ் உச்சரிப்பு ஆகியவற்றை நான் வியந்து ரசிப்பவன். அவர் எனக்கு கிடைத்தது ஒரு பெரிய வாய்ப்பு’ என்கிறார்.

இரண்டு பேரும் இணைந்து பணியாற்றியபோது ஏற்பட்ட சுவையான சம்பவங்களுக்குப் பஞ்சமே இல்லை.

இரண்டு பேருமே சீரியஸாகவே சண்டை போட்டுக்கொண்ட தருணங்கள் ஏராளம்.

படம்: சிரித்து வாழ வேண்டும்

அதில் ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்..’ என்ற பாடல். (பாடலாசிரியர் : புலமைப்பித்தன்)

டி.எம்.எஸ். பாடினார். ஆனால் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு திருப்தியில்லை. தான் எதிர்பார்த்த எஃபெக்ட் வராததால் டி.எம்.எஸ். அவர்களை ‘ட்ரில்’ வாங்கிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் பாடகருக்குப் பொறுமை போய்விட்டது.

‘கோயில்ல சுண்டலுக்குப் பாடினாலும் பாடுவேனே தவிர, உனக்குப் பாட மாட்டேன்’ என்று சொல்லிவிட்டு ஒலிப்பதிவை முடிக்காமலேயே கோபித்துக்கொண்டு விர்ரென்று வீட்டுக்குப் போய்விட்டார் டி.எம். சௌந்தரராஜன்.

‘நாம் சொன்னால் சொன்னபடி பாட வேண்டியவர்தான் பின்னணிப் பாடகர். அவர் போனால் போகட்டும் அவரது கோபம் என்னை என்ன செய்யும்? வேறு ஒருவரைப் போட்டு பாடச் சொல்கிறேன்’ என்றெல்லாம் எம்.எஸ்.வி. வீம்பு காட்டவில்லை.

டி.எம்.எஸ்தான் அந்தப் பாட்டைப் பாட வேண்டும். அப்போதுதான் சரியாக வரும்’ என்று அவரது உள்மனதில் உறுதியாகி விட்டது.

மறுநாள் நேராக டி.எம்.சௌந்தரராஜனின் வீட்டுக்குப் போனார் விஸ்வநாதன்

சொன்னல் நம்பக்கூட சிரமமாக இருக்கும். டி.எம்.எஸ் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். ‘நீங்கதான் பாடணும். உங்களால முடியும். நீங்க பாடினாதான் அந்தப் பாட்டு சரியா வரும்.. நிக்கும் ‘ என்றார்.

சற்றும் எதிர்பாராத எம்.எஸ்.வியின் இந்த திடீர் நடவடிக்கையால் நிலைகுலைந்து போனார் டி.எம்.எஸ். உடனே வந்து விஸ்வநாதனின் எதிர்பார்க்கேற்ப பாடிக்கொடுத்தார்.

அந்தப் பாட்டு.. :

 

Thanks to : MultiAbdulgafoor

***
நன்றி : ராணிமைந்தன், ராஜராஜன் பதிப்பகம்
***

தொடர்புடைய பாடல் : Yaari Hai Iman Mera Yaar Meri Zindagi – Manna Dey , Film : Zanjeer (1973),  Music : Kalayanji Anandji

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s