முன்னவனை முன்வைத்து…! – கவிஞர் சலீம்

இந்தப் பாடல் கலைமாமணி கவிஞர் சலீம் அவர்கள் இயற்றி திருச்சி எஸ்.எம்.யூசுப் பாடியது .  திடீரென்று இந்தப் பாடலை இப்போது இங்கே பதிவிடுவதற்கு காரணம் இருக்கிறது. நம் சலீம்மாமாவுக்கு உடல்நலம் சரியில்லை. ஆஸ்பத்திரியில் அவர்களை பார்த்து வந்ததிலிருந்து சங்கடமாயிருக்கிறது மனசு. ’காதில் விழுந்த கானங்கள்’ நூலிலிருந்து கண்ணில் பட்ட ஒன்றை டைப் செய்து பதிவிடுகிறேன்.  துஆ செய்யுங்கள். நன்றி. – ஆபிதீன்

***

ஏகநாயனை முன்னே வைத்து
எந்தக் காரியமும் தொடங்குங்கள்!
ஆகுவதெல்லாம் அவனால் தானே
ஐந்து வேளையும் வணங்குங்கள்!

– ஏகநாயனை

சொர்க்கம் விரும்பி வணக்கம் புரியும்
சுயநலப் போக்கை நிறுத்துங்கள்! – அந்த
நரகத்துக்கஞ்சி வழிபடுகின்ற
நெஞ்ச உணர்வுகளைத் திருத்துங்கள்!
அவனுக்காகவே அவனை வணங்கும்
அச்சப் பாட்டைப் பொருத்துங்கள்!
கவனம் இருக்கட்டும் கடமை உணர்வோடு
காரியம் யாவும் நடத்துங்கள்!

– ஏகநாயனை

பக்தியுள்ளவன் ஏழையென்றாலும்
பெரிதும் அன்போடு பழகுங்கள்! – பணச்
சக்தியுள்ளவன் பக்தியை இழந்தால்
சரிப்பட்டு வராது விலகுங்கள்!
அக்கம் பக்கம் உறவினர்க்கெல்லாம்
ஆவன செய்து உதவுங்கள்!
அக்கரைச் சீமை போய்விடு முன்னம்
அல்லா(ஹ்)வின் நினைவில் உலவுங்கள்

– ஏகநாயனை

***

saleem-mama-book-cb2

3 பின்னூட்டங்கள்

 1. JAFAR SADIQ said,

  13/05/2013 இல் 23:05

  Mikka nandri abideen…

 2. 14/05/2013 இல் 09:50

  saleem naana gunamaaga piraarthanaigal

 3. 14/05/2013 இல் 10:34

  பெருமானாரின் பொருட்டினால், அவர்களுக்கு ராஹத்துடன் கூடிய நீண்ட ஆயுளுக்கு துவா செய்கின்றேன்!.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s