மின்மினி – ‘கவிக்கோ’வின் சிறுகதை

தமிழ் இலக்கியத் துறைக்கான  – புதிய தலைமுறையின் – சாதனைத் தமிழர் விருது பெற்ற கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களின் ‘மின்மினி’ சிறுகதையிலிருந்து கொஞ்சம் வெளிச்சம்…  இமேஜை க்ளிக் செய்து இருட்டை விரட்டுங்கள். நன்றி – ஆபிதீன்

***

“அரபு நாட்டில் வேலை கிடைத்து நான் நன்றாகச் சம்பாதித்துக் கொண்டிருப்பதாகத்தான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் நான் இதற்காக  எதையெல்லாம் இழந்திருக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரியாது. பலருக்கும் இதே நிலைதான் என்பதை நான் அறிவேன். இந்தப் பணத்தின் மினுமினுப்பு குட்டரோகியின் தோல் மினுமினுப்பைப் போன்றது என்பதை அனுபவத்தில் தெரிந்து கொண்டேன்” – அஸ்லம்

'கவிக்கோ'“அஸ்லம்! உன் பிரச்சினை எனக்குப் புரிகிறது. ஒன்று மட்டும் சொல்வேன். பணமில்லாலிருப்பதுதான் வறுமை என்று எல்லோரும் நினைக்கிறார்கள். இல்லை. நாம் அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிற நியாயமான சுகங்களை அனுபவிக்க முடியாமல் போவதுதான் உண்மையில் வறுமை. பணமிருந்தால்தானே இந்தச் சுகங்களை பெற முடியும் என்று பலர் நினைக்கிறார்கள். இல்லை. பணத்தால், பணத்திற்காக, பணம் தேடும் முயற்சியில் இந்தச் சுகங்களில் பலவற்றை நாம் இழந்து விடுகிறோம். வயிற்றுக்குச் சோறு வேண்டும், அதற்காக நாம் சம்பாதிக்க வேண்டும் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் வயிறு இதயத்தைச் சாப்பிட அனுமதித்துவிடக் கூடாது. அப்போது மனிதன் அஸ்தமித்து விடுகிறான். மனிதன் வயிற்றால் வாழவில்லை; இதயத்தால் வாழ்கிறான். பிரச்சினையிலிருந்து வெளியேறும் வழி, அதற்குள் நாம் நுழைந்தோடும் அந்த வழிதான். உனக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.” – கதைசொல்லி ‘கவிக்கோ’

***

இமேஜ் 1  , இமேஜ் 2 , இமேஜ் 3 , இமேஜ் 4 , இமேஜ் 5

***

நன்றி : கவிக்கோ, இஸ்லாமிய இலக்கியக் கழகம்.

3 பின்னூட்டங்கள்

 1. தாஜ் said,

  06/04/2013 இல் 21:46

  என்னத்தை பின்னூட்டம் இடுவது?
  கவிக்கோ….
  சரியாகச் சொல்லிவிட்டார் என்று கூட
  சொல்லிவிட முடியாது.
  அரபுலக தமிழ் நண்பர்கள்
  என்னைப் பிடிபிடின்னு பிடித்துவிடுவார்கள்.
  என்ன பலமிருந்தென்ன?
  கூட்டமாக வந்து தாக்குகிற போது…
  ஒண்டியான, நான்தான் என்ன செய்ய முடியும்?
  தவிர,
  கவிகோ ஒன்றும் புதிதாகச் சொல்லிவிடவில்லை.
  அரபுலகத்தில் வாழும் நண்பர்களது உள்மனம்
  அறிந்து தெளிந்த சங்கதியைத்தான்
  அவர், அவரது மொழியில் சொல்லி இருக்கிறார்!

 2. HAJAMYDEEN said,

  07/04/2013 இல் 02:50

  1980 muthla ibbadiyallam oppary pala thinusuhalil vaithahivittathu veliara valiaththan yarum kattalai. am i right taj /

 3. 07/04/2013 இல் 10:20

  அன்புள்ள தாஜ், அசல் வலி தெரியாத அப்துல்ரஹ்மானும் சொல்லிவிட்டுப் போகட்டுமே, திருந்துவோமா என்ன? நம்ம ஹாஜாவும் அதைத்தான் அரபியில் சொல்கிறார் இப்படி :
  1980 முதலா இப்படியெல்லாம் ஒப்பாரி பல தினுசுகளில் வைத்தாகிவிட்டது. வெளியேற வழியைத்தான் யாரும் காட்டலே! am i right taj ?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s