நாகூர் ரூமி என்னைப் பார்க்க வந்திருக்கிறார் – நதீம் சின்னபிள்ளையாக இருந்தபோது. அறையில் நானும் மகனும் இருந்திருக்கிறோம். ரூமியோடு தனியாக, சுதந்திரமாகப் பேச விரும்பினேனாம். எனவே நதீம் அறையைவிட்டு வீட்டுக்குள் போகவேண்டும். அதற்கு நான் என்ன செய்தேன்? ரூமி சொல்கிறார் :
“வாப்பா (குழந்தைகளைக் கொஞ்சும்போது மகன் வாப்பாவாகிவிடுவார். மகள் ம்மாவாகிவிடுவாள். இதெல்லாம் எழுதப்படாத கொஞ்சல் இலக்கணம்). நீ இந்த ரூம்லயே இரிக்கணும் என்னா?” என்று சொன்னார். உடனே பையன், “இல்ல, நா வெளியே போவேன்” என்றான். அவர், “ம்ஹும், நீ இங்கதான் இருக்கணும்” என்று மறுபடியும் சொன்னார். “முடியாது, நா வெளியே போவேன்” என்று சொன்ன மகன் வெளியிலும் போய்விட்டான். ”அப்பாடா, போயிட்டான். போ என்று சொன்னால் இருப்பேன் என்று சொல்வான். எது சொன்னாலும் அதற்கு நேர் எதிராகத்தான் செய்வான்” என்று சொல்லிவிட்டு கதைவைச் சாத்தினார்!
அவர் எழுதியிருப்பது உண்மை. ஹக் அல்லாஹ் நூர் அல்லாஹ்!
இன்றுவரை அப்படித்தான் சொல்கிறேன் நாகூர் அழகனிடம். ஒரு விசயத்தில் மட்டும் பலிக்கவில்லை. ’காலேஜுக்கு போவாதே வாப்பா’ என்றேன். ‘சரி வாப்பா’ என்று போகாமலே இருக்கிறான்! இன்னொரு வேடிக்கை, அற வழியில் போராடும் மாணவர்களை குண்டர்கள் அடிப்பதை சென்ஷிசார் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்ய, அதை ‘லைக்’ செய்திருக்கிறார் சாதிக்சார். சே, எங்கு பார்த்தாலும் ஊடக வன்முறை.. ‘கையில நதீம் கோக் வச்சிக்கிறது எதுக்கு? உங்கள குறி பாத்து அடிக்கத்தான்!’ என்று இந்த அஸ்மா வேறு! என்ன செய்யலாம் ரூமி சார்?
Click here to enlarge Photo
***
தாஜ் said,
31/03/2013 இல் 12:51
அந்தப் பக்கமே போயிடாதிங்க,
போய்தான் தீரனுமே என்றால்…
இருக்கவே இருக்கு போலீஸ் பாதுகாப்பு.
பயப்பட ஓர் அளவு வேண்டா?
சொல்ல மறந்துட்டேன்…
படம் சூப்பர்.
ஆபிதீன் said,
31/03/2013 இல் 12:56
போவேனா?!
//படம் சூப்பர்// நான் எடுக்கலே தாஜ். அதான்!
தாஜ் said,
31/03/2013 இல் 13:57
நீங்க அர்த்தத்தோடு படம் எடுப்பீங்கன்னு
எனக்குத் தெரியாதா?
தமிழ்ப் பட ஹீரோவுக்கு
சிபாரிசு செய்யட்டான்?
மஜீத் said,
31/03/2013 இல் 14:47
சூப்பர் படம்… நல்லாருக்கார் நதீம்
‘பின்’குறிப்பு:
அப்டில்லாம் பயப்படவேணாம்…..
நிச்சயமா கோக்கோட அடிக்கமாட்டார்..
அடிச்சாலும் குடிச்சுட்டு வெறுங்கேனாலதான் அடிப்பார்..
அன்னிக்குமாதிரி டக்குனு திரும்பிக்கிட்டிங்கன்னா
அவ்வளவா வலிக்காது, ஒரு பதிவும் உறுதி…. 🙂
ஆபிதீன் said,
31/03/2013 இல் 15:43
//டக்குனு திரும்பிக்கிட்டிங்கன்னா// இன்னுமா? தெம்பில்லே சீதேவி!
மஜீத் said,
31/03/2013 இல் 16:04
சுக்விந்தரின் ஹுஅல்லாஹு-வ யாரும் மிஸ் பண்ணவேணாம்..னு கேட்டுக்கிறேன்…..
ஒ.நூருல் அமீன் said,
02/04/2013 இல் 21:14
மஷா அல்லாஹ்.
நன்றி மஜீத் பாய்!.
Nagore Rumi said,
31/03/2013 இல் 22:54
அடடா நதீமா இது! அழகா இருக்கார். ம்மா மாதிரின்னு நினைக்கிறேன்! அவர் காலேஜுக்குப் போகலேன்னா அது ரொம்ப நல்லதுதான்! நீர் சொன்னது உண்மைன்னா, அவர் வருங்காலத்துல பிரம்மாதமா வருவார்! ஹக்கல்லாஹ் பாட்டும் பிரம்மாதம். இந்த மாதிரி பாடல்களின் யூஆர் எல்-களை அனுப்பும்
ஆபிதீன் said,
01/04/2013 இல் 10:04
ஓய், நதீம் காலேஜுக்கு போவலேன்னா அவனுக்கு மட்டும்தான் நல்லது; நீம்பரு போவலேன்னா மாணவசமுதாயத்துக்கே நல்லது. செய்யும். //ம்மா மாதிரின்னு நினைக்கிறேன்!// என்ன, வெடையா? ‘குட்டி ஆபிதீன்’ என்று ஊரில் அழைக்கப்படுகிறான் நதீம்! (’கண்ணு அவிஞ்சிபோச்சு போலக்கிது.’ – அஸ்மா). அந்த ‘ஹக் அல்லாஹ்’ மேட்டரை சீக்கிரம் அனுப்புறேன் சார்.
ஒ.நூருல் அமீன் said,
02/04/2013 இல் 21:16
மாஷா அல்லாஹ் நூரான் முகம். வாப்பாவைப் போல.
ஆபிதீன் said,
02/04/2013 இல் 22:06
//நூரான் // புரியலையே.. தாஜ் கவிதை மாதிரி இருக்கே..
ஒ.நூருல் அமீன் said,
03/04/2013 இல் 08:48
நூரான – ஒளியான முகம்.
ஆபிதீன் said,
03/04/2013 இல் 09:45
ஓ, நன்றி. பார்த்தவுடன் அஸ்மா ஏன் பயந்து அலறுகிறாள்?!