வேதாந்தியின் கதை

ஹனிபாக்காவிடமிருந்து இன்று  மெயில் வந்தது,  வேதாந்தி எழுதிய சிறுகதையுடன். சுட்டி : http://abedheen.blogspot.com/2013/03/blog-post_25.html

***

“தமிழ்ச் சிறுகதை – முஸ்லிம்களின் பங்களிப்பு” என்று ஒரு ஆய்வு நூலை எழுதப் போனால், தமிழக முஸ்லிம் படைப்பாளிகளை விடவும் ஈழத்து முஸ்லிம் படைப்பாளிகளின் பங்களிப்பு இந்தத் துறையில் அபாரமென்பேன். தமிழகத்தில் ஆளுமை மிக்க கதைகளை எழுதியவர்களில் ஷேக்கோ முக்கியமானவர் என்று கருதுகிறேன். அவரைத் தொடர்ந்து கவிக்கோ அப்துல் ரகுமானுடைய வாப்பா மஹதி அவர்களின் பங்களிப்பும் கவனத்திற் கொள்ளத்தக்கது. தூயவன் என்ற புனைப்பெயரில் எழுதிய எம்.எஸ். அக்பர் நாகூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அந்தக் காலத்தில் ஜியாவுடீன் என்பவரும் ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளில் எழுதினார். அதிகமான தமிழகச் சிறுகதைகள் இஸ்லாமிய நெறிமுறைகளை அச்சொட்டாக வாழ்க்கையில் பின்பற்றும் சாலிஹான மனிதர்களைப் பற்றிய கதைகளாக இருந்தன. கடந்த இரண்டு தசாப்த காலங்களாக புதிதாக எழுத வந்த நாகூர் ஆபிதீன், கவர்னர் பெத்தம்மா மூலம் எம்மை ஈர்த்த மீரான் மைதீன், மற்றும் ஜாகிர் ராஜா, பிர்தௌஸ் ராஜகுமாரன், களந்தை பீர்முகம்மது போன்ற இளைய தலைமுறையினரின் படைப்புகள்தான் தமிழக முஸ்லிம்களின் வாழ்வின் உள்ளடுக்குகளை எங்களுக்கு உணர்த்தியது.

ஈழத்திலோ 1950களிலிருந்து யதார்த்தமான கதைகளை எம்மவர்கள் படைத்தளித்தார்கள். அதில் பித்தன் முக்கியமானவர். அவரைத் தொடர்ந்து அ.ச. அப்துஸ்ஸமது, மருதூர்க்கொத்தன், முதலியோரும் அறுபதுகளின் இறுதியில் எழுத்திற்கு வந்த பாணந்துறை மொயின் சமீன், திக்குவல்லை கமால், கலைவாதி கலீல், எம்.எச்.எம். ஷம்ஸ், எஸ்.எல்.எம். ஹனீபா, எம்.எல்.எம். மன்சூர், வை. அஹமது, ஜுனைதா ஷெரீப், மருதூர்க்கனி, எம்.எச். சேகு இஸ்ஸதீன் (வேதாந்தி) இவர்களைத் தொடர்ந்து தொண்ணூறுகளில் ஒரு பட்டாளமே சிறுகதை எழுத கிளம்பினார்கள். அவர்களில் ஓட்டமாவடி அறபாத், மருதமுனை றியாஸ் அஹமத் (அம்ரிதா), அக்கரைப்பற்று ஹஸீன், நஜிமுதீன், எம்.எம். நௌஸாத் (தீரன்), ஸபீர் ஹாபிஸ், தற்பொழுது இலக்கிய மாமணி கவிஞர் அஷ்ரப் ஷிஹாப்தீன் அவர்களும் சிறுகதை உலகிற்கு வந்துள்ளார்கள். இவர்களில் ஒருவரான எம்.எஸ். சேகு இஸ்ஸதீன் சொற்ப எண்ணிக்கையான கதைகளை எழுதினாலும் அவை சொல்லப்பட்ட முறைமையால் முற்றிலும் வேறுபட்டுத் திகழ்ந்தது. வேதாந்தி என்ற பெயரில் அவர் ஆறு கதைகளை எழுதியுள்ளார். அவற்றில் எனக்குப் பிடித்த இந்தக் கதையை ஆபிதீன் பக்க வாசகர்களுக்காகப் பதிவேற்றம் செய்கிறோம்.

SehuIssadeen-SLM2

வேதாந்தியுடன் எஸ்.எல்.எம். ஹனீபா

4 பின்னூட்டங்கள்

 1. தாஜ் said,

  24/03/2013 இல் 18:30

  ஹனிபாக்கா குறிப்பிட்டிருக்கும் இலக்கிய உலக வெற்றியாளர்கள் அனைவருக்கும் என் மனமாற்ந்த வாழ்த்துக்கள் ஆகட்டும்.
  -தாஜ்

  • abedheen said,

   25/03/2013 இல் 10:41

   தாஜ், நம்ம தோப்பிலையும் ரூமியையும் குறிப்பிட மறந்துவிட்டாராம் ஹனீபாக்கா!

   • தாஜ் said,

    25/03/2013 இல் 22:14

    ஹனீபாக்காவின் தேர்வு
    அவரது
    சுதந்திரக் கருத்தின் வழியே நிகழ்வது!

    சுதந்திரமான கருத்துக்களை சொல்ல,
    அவர்கள் நாட்டில்
    இப்போதுதான் கொஞ்சம்
    வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
    சந்தோஷமாக சொல்லட்டுமே.
    அதனில் போய்
    நாம் குறைக்காண முடியாது.
    கூடவும் கூடாது.

    ரூமியும் தோப்பிலும்
    போதும் போதும் என்கிற அளவில்
    பாராட்டு மழையில்
    ஏற்கனவே நனைந்தவர்கள்..
    இன்னும் இன்னும் என்றால்…
    பாவம்…
    அவர்களுக்கும் ஜலதோஷம் பிடித்துவிடும்.

    இப்படி கருத்து சொல்கிற போது…
    எதிர் மறையான சில சங்கதிகள்
    சபையேறவும் வாய்ப்புண்டு.
    விமர்சகரின் தெளிவை
    நமக்கு அது காட்டிவிடும்.

    *
    ஹனிபாக்க…
    அடிக்கடி
    ஜெயமோகனை
    படைப்பாளிகளின் சிகரமாகப் போற்றி
    அகம் மகிழ்கிறார்.
    நான் ஏதேனும் சொல்கிறேனா என்ன?
    அது அவரதுப் பார்வை.
    இப்போது பார்வைத் தெளிவிற்கு
    அறுவைச் சிகிச்சை செய்துக் கொண்டு வந்திருக்கிறார்.
    இப்பவும்
    ஜெயமோகனை அப்படி எழுதுகிறாரா…என்று கவனிக்கணும்.

 2. எஸ்.எல்.எம். ஹனீபா said,

  31/03/2013 இல் 07:36

  அன்புள்ள தாஜ், நாகூர் ரூமி, தோப்பில் முகம்மது மீரான் போன்ற நமது ஆளுமை மிக்க படைப்பாளிகள் என் போன்றவர்களின் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் கடந்த உன்னத மனிதர்கள். எடுத்த எடுப்பிலேயே சொல்லச் சொல்ல கணினியில் பதிவேற்றினோம். அந்த நிமிடத்தில் வந்த பெயர்கள்தான். கவர்னர் பெத்தா, ஓதியெறியப்படாத முட்டைகள் படைத்த மீரான் மைதீனை ஞாபகத்திற்குக் கொண்டு வர நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. இன்னொரு சங்கதி. நான் இன்னமும் ஜெயமோகனை பாராட்டிக் கொண்டுதான் இருக்கிறேன். வேறு வழியில்லை.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s