தாங்காத கோபம் கவிஞர் தாஜுக்கு…

ஃபேஸ்புக்கில் இன்று வெடித்திருக்கிறார் தாஜ்….  இந்த மொழிச் சித்திரத்திற்கான அவருடைய முன் குறிப்பு : அமெரிக்க வானிலை ஆய்வு மையத்தின் அக்டோபர் – 1993 தகவல் படிக்கு, ‘ஸ்விஃப்ட்-டட்டில்’ என்னும் பிரமாண்ட வால் நட்சத்திரம் 2116 – ல் நம் கிரகத்தின் மீது மோதி – உடைத்து – பெரிய அழிவை நிகழ்த்தும்! இது 1993 அக்டோபர் – பி.பி.சி. செய்தி!

தாஜ், சமயத்தில் சில கவிதைகளைப் படித்தாலும் உடனே அழிவு வரும்! – ஆபிதீன்

***

sirkazi-palli-vasal-taj2fil

சித்தம் போக்கு

தாஜ்

காதல் உடை மோதல் நடை!
மாண்பு உடை வீம்பு நடை
கூட்டை உடை நேசம் உடை
விவேக நடை வீர நடை
உடை உடை நடை நடை!

நவகாளி கண்ட முகூர்த்த நடை
காந்தியை சுட்டுத் தீர்த்த நடை
மசூதி இடிப்பு நடை
மும்பாய் வெடிப்பு நடை
கோத்திரா சம்பவ நடை
மோடிகளின் ஜாடை நடை
குஜராத் கறுப்பு நடை
கசாப்பு கடை நடை நடை
அல்-கொய்தா காழ்ப்பு நடை
குண்டுகள் வழங்கும் அரக்க நடை
கோவை குண்டு நடை ரயில்களில் நாச நடை
நடைப் பாதைகளில் வெடிக்கும் நடை
தெறிக்கும் உயிர்களில் களிக்கும் எதிர் நடை!

நடை உடை நடை
காவி உடை பச்சை உடை
சிகப்பு உடை கருப்பு சிகப்பு உடை
இடை வெள்ளை உடை
சிகப்பு வெள்ளை பச்சை உடை
கொடிக் கட்டிப்
பறக்கும் வர்ணமெல்லாம்….
உடை உடை உடை

நடை உடை நடை உடை
கல்லிலே சிலை
மண்ணுள்ளே பொன்னு
பெண்ணிலே பிள்ளை
பிள்ளைக்குள் பிள்ளை
ஒன்றுக்குள் ஒன்றென்ற நடை
அழிவிலேயே ஆரம்பம் நடை
நடை நடை நடை
உடை உடை உடை!

மூளையே…
ரௌத்திரம் பழகாதே
உன் கறுப்பு நடை உயிர்ப் பிணங்களின்
நாற்ற நடை… கும்பி நடை
கும்பி நடை…. குல நாச நடை!
படியும் கறையினை நித்தம்
சலவைச் செய்!
சலவை… சலவை
காலத்திற்கு ஏற்றது சலவை
மூளைச் சலவை!
சலவை மூளை சுத்த மூளை
சுத்தம் சோறு போடும்… டும்…
டும்… டும்… டும்….

மூளைச் சலவைக்கு
பாரதப் பற்று டிடர்ஜன்கள்
இன மத மொழிச் சலவைக்கு
ஜாதி கட்சிகள்!
சூப்பர் வெண்மைக்கு
தேசிய கட்சிகள்!
பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத மணித்திரு நாடு!

புரையோடிய கபாலமே…
நமது சான்றெல்லாம்
காலம் கணித்தது
கூச்சல் போடாதே
புதைக்குழிக்குப் போ
கண்காணது செத்தொழி…

செத்தொழி செத்து.. ஒழி….
ஆஹா செத்து… ஒழி!
எங்கள் பாரதியை மிதித்த
யானை எங்கே?
எங்கே கிடைக்கும்….
எம் காந்தியை சுட்ட துப்பாக்கி?
கோட்சேவைதான்
எங்கே தேடிப் போவது?
அதனால் என்ன?
அந்த துருப்பிடித்த துப்பாக்கி
கிடைக்காவிட்டால் போகிறது!

ஒரு ஏ.கே.ஃபார்ட்டி செவன்?
மனித வெடிக் குண்டு?
செத்து ஒழிய வேறு ஏதேணும்?
ம்….
நாட்டு வெடிக் குண்டு கரசேவை!
அன்னியக் குண்டு ஆர்.டி.எக்ஸ்!
கரசேவை?
அது இடிக்கும் இடிக்கும்…
சகஜ நிலைப்பாட்டை சிதைக்கும்!
அன்னிய குண்டு?
சிதைக்கும் சிதைக்கும்…
அடித்தளத்தையும் தகர்க்கும்!

ஊழிக் கூத்தாடாதே
பைத்தியக்கார விடுதியை விசாரி…

விசாரி ஊழிக்கூத்து….
ஊழிக்கூத்து விசாரி…..
விசாரி விசாரி….
விசாரணைக் கமிஷன்….
கமிஷன் கமிஷன்….
கோடி கோடி பில்லியன்களில் கமிஷன்!
கமிஷன் கமிஷன்…
விசாரணைக்கும் கமிஷன்!
விசாரணைக் கமிஷன்
கேராஃப் பைத்தியக்கார விடுதி!
பைத்தியக்கார விடுதி
கேராஃப் தமிழ் நாடு!
தமிழ் நாடு…
கேராஃப் இந்தியா!
இந்தியா கேராஃப் ஆசியா!
ஆசியா கேராஃப் தி வேல்ட்!

இன்ணையத் தேதிக்கு
தி வேல்ட்…
கேராஃப் யுனிவர்ஸ்!
நாளைக்கு…
உலகமே காலி!
சந்தோஷப் படுவோம்
தி வேல்ட் ஈஸ்… காலி!

பாரத செல்வங்களே…
வரும் நூற்றாண்டுகளின் விசேச நடை…
அது உறுதி செய்யப்பட்ட நடை!
அற்புதங்கள்
நிகழ்த்தப்போகும் உடை நடை!
ஆண்மையோடு
வால் நட்சத்திரம் ஒன்று
மாசுப்பட்ட இப்புமியை
முத்தமிடப் போகிறது!
முத்தமிட்டு புனித படுத்தப் போகிறது!
அது காதல் முத்தம் மோதல் முத்தம்
முத்தமுன்னா முத்தம் முத்தான முத்தம்
முற்றுப் புள்ளி முத்தம்.
புத்தி சொன்ன அசரீரியே…
என் செல்ல ‘ஸ்விஃப்ட்-டட்டில்’ தெரியுமா?
முத்தம் தெரியுமா முத்தம்?
கிரக முத்தமுன்ணு சொன்னாவாவதுப் புரியுமா?

பூமிப் புத்திரர்களே…
நம்புங்கள்.
நாளை…
நட்சத்திரக் குண்டு நிச்சயம்!
எல்லோரையும் பேதமற தழுவும்!
தீண்டாமை நிகழ்த்த
ஊயர்வுக்கு தாழ்விருக்காது!
தாழ்வு சீண்டிப் பார்க்க உயர்வு இருக்காது!

ஜாதிகளின் ஜாதி
மதங்களின் மதம்
அரசியலின் அரசியல்
அத்தனையும் மண்ணுக்குள்
ஒன்றாகிப் போகும்!

ஓட்டுப் போட்டே
நாசமாப் போன யென்
பைத்தியக்கார சகாக்களே….
கைசேதப்பட்டு ஒன்றும்
ஆகப்போவதில்லை

பெற்ற பொன்னானச் சுதந்திரம்
அரக்கர்களிடம் கைமாறி
காலங்கள் ஆகிறது!
கவலை வேண்டாம்.
நட்சத்திரக் குண்டோர்
மெகா நிவாரணி!
தேசத்திற்கும் நமக்கும்
நிச்சயம் விடுதலை உண்டு!

நம்புங்கள் சகாகளே…
நம்புங்கள்
இன்னும்… கிட்டும்
ஆயிரமாயிர விடுதலைகள்!
காவேரிப் பிரச்சனையின்
இரைச்சல் அடங்கும்!
செம்மொழிக்கு மோட்சம் கிட்டும்!
லஞ்ச ராஜியமும் மிரட்டும் கொத்தளங்களும்
கிடு கிடுக்கச் சிதையும்!
டி.வி. மெகா சீரியல்கள்
அந்தரத்தில் தொங்கும்!

கருணா நிதியின்
பேரக் குடும்ப நெட் ஒர்கின்
ஆயித்தோராவது சேனலுக்கு
அவசியமில்லாமல் போகும்!
மாணாட மயிலாடவும் இருக்காது
மக்களும் இருக்க மாட்டார்கள்!

விந்தையான விந்தையாய்
கருணா நிதியின்
பேரனுக்கும் பேரனுக்கும் பேரனாம்
அந்தக் கொள்ளுப் பேரனாம்…
அந்த எள்ளுப் பேரன்
எடுத்த நடித்த வினியோகம் செய்த
தமிழ்ச் சினிமாவை
காணுவதில் இருந்து
உலகமே தப்பித்து விடும்!

சீதைகளுக்கு எல்லாம்
அக்னிப் பரிட்சைகள் இராது!
பட்டாபிசேகத்திற்காக
காலம் தோறும் ராமபிரான்கள்
சிம்மாசனங்களில் துண்டைப் போட்டு
காத்துக் கொண்டிருக்க……
நம் ராமாயணம்
முடிந்து விடும்!

satajdeen@gmail.com

***

நன்றி : நட்சத்திர சிறுகதையாக  என் ‘கடை’யை தேர்ந்தெடுத்த தாஜுக்கு!  தாஜ்,  அது முதல்பரிசெல்லாம் பெறவில்லை.  தி.ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் தேர்வு பெற்றது. அவ்வளவுதான்.

9 பின்னூட்டங்கள்

 1. 05/03/2013 இல் 18:20

  இதுவும் கடந்து போம்…
  உலகும் இப்போதெல்லாம் அழியாது..
  மனிதம் அவ்வளவு சீக்கிரம் உய்த்துவிடாது….
  இன்னும் நிறைய பார்க்கவேண்டியிருக்கிறது..வருந்தவும்..

 2. தாஜ் said,

  05/03/2013 இல் 19:27

  //தாஜ், சமயத்தில் சில கவிதைகளைப் படித்தாலும் உடனே அழிவு வரும்! – ஆபிதீன்//
  அந்தக் காலப் புலவர்கள்
  ஒன்றை அழிக்க
  அறம்பாடினார்கள் என்று படித்திருக்கிறேன்.

  ஆபிதீன்
  எனது மொழிச் சித்திரத்தை
  அந்த அளவில் வைத்துப்பார்த்திருப்பதை
  நான் மறுக்க முடியாது.
  அவரது மதிப்பீட்டை மதிக்கிறேன்.

  ஆனால்…
  வெகு மாதங்களாக நான் காணாத
  எங்கள் பள்ளியை
  பிரசுரித்திருப்பதைதான்
  புரிந்துக் கொள்ள முடியவில்லை.
  என்றாலும்…
  பார்க்கக் கிடைத்ததில்
  ஒருவகையில் சந்தோஷமே.

 3. 05/03/2013 இல் 20:06

  //தாஜ், சமயத்தில் சில கவிதைகளைப் படித்தாலும் உடனே அழிவு வரும்! –//

  இதற்குக்கீழே கவிதை என்பதனால் தொடர்ந்து வாசிக்க பயம் வருகிறது.

 4. 06/03/2013 இல் 21:04

  அழிவு வருதோ இல்லையோ மயக்கம் வருது. நேத்து வந்த மயக்கம் இப்பத்தான்(6-3-13 துபை நேரம் 9-00 pm) தெளிஞ்சுது.

  • தாஜ் said,

   06/03/2013 இல் 22:07

   அன்புடன்
   நாநாவுக்கு….
   உடல் நலம் சரியில்லையா என்ன?
   ஆபிதீன் கூட சொல்லவில்லையே!
   டாக்டரிடம் காட்டினீர்கள்தானே?
   லீவு எடுத்துக் கொண்டு
   ஓய்வில் இருக்கப் பாருங்கள்.
   வாய்க்குமென்றால்…
   என் கவிதையினை வாசித்து
   அபிப்ராயம் எழுதுங்கள்.
   நன்றி.
   -தாஜ்

 5. kulachal yoosuf said,

  07/03/2013 இல் 16:10

  நேத்து வந்த மயக்கம் உடல்நிலை சரியில்லாததன் விளைவென்று நினைக்கும் அளவுக்கு தாஜ் அப்பிராணியா என்ன? எனக்கென்னவோ நம்பிக்கை இல்லை. ஓய்வில் இருக்கப்பாருங்கள். கவிதைகளை வாசித்து அபிப்ராயம் எழுதுங்கள். வாக்கியங்களின் இடமாற்றத்தினுள் இருக்கும் சூசகம் பலே!

 6. haja mydeen said,

  12/03/2013 இல் 05:17

  OK
  H


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s