(싸이 – 아버지) – செல்ல மகன் நதீமுக்கு…

இதுக்குலாம் மொழி தேவையா?  நாளை (20.02.2013) பிறந்தநாள் கொண்டாடும் நதீமுக்கு வாழ்த்துகள்…

***

***

Thanks to : sc0oter

10 பின்னூட்டங்கள்

  1. 19/02/2013 இல் 18:45

    வாழ்த்துக்கள் வாப்பாவுக்கு

  2. 20/02/2013 இல் 08:51

    Happy birthday Nadeem bhai 🙂

  3. 20/02/2013 இல் 14:59

    ஈமானுடன் சீமானாக வாழ துவாவுடன் கூடிய வாழ்த்துகள் நதீமுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும். ஆமீன்!

  4. abedheen said,

    20/02/2013 இல் 15:38

    வாழ்த்திய ஜாஃபர்நானா, சென்ஷிதம்பி, அமீன்பாய் மற்றும் ‘கோடானுகோடி’ உள்ளங்களுக்கு – நதீம் சார்பாக – நன்றி.

    அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்வதற்காக நேற்றிரவு ஃபோன் செய்தேன். ‘தேங்ஸ் வாப்பா.. என் ஃப்ரெண்ட் ஃபயாஸ் கிட்டே பேசுங்க’ என்று ஃபோனைக் கொடுத்துவிட்டான் நதீம். ‘சார் , நல்லா இருக்கீங்களா?’ என்று ஆரம்பித்தான் அந்தப் பையன்.

    ‘இந்த சார் கீர்லாம் வாணாம் தம்பி, சாதாரணமாவே கூப்டுங்க’

    ‘சரி ஆபிதீன், எப்ப ஊருக்கு வர்றீங்க..?’

    சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே ‘ரெண்டுமாசத்துல போலாம்னு பிளான் இரிக்கிது’ என்று மென்று முழுங்கினேன். அத்தோடு முடித்திருக்கலாம்.. ‘நதீம் என்ன சொல்றான் தம்பி?’ என்றேன்.

    ‘எப்பவும் உங்களப்பத்தியேதான் பேசுவான் ஆபிதீன்’

    ‘அப்டியா! என்னான்னு?’

    ‘இண்டெர்நெட்ல ‘என்னமோ பக்கங்கள்’னு ஒரு சைட் வச்சிருக்கீங்களாமே… பெரிய ‘போர்’டா.. அத மட்டும் தயவு செஞ்சி பாத்துடாதே, சகிக்காதும்பான்.’

  5. 20/02/2013 இல் 18:43

    :-)))))))))))))))

  6. 20/02/2013 இல் 19:40

    பிள்ளை நதீமுக்கு வாழ்த்துக்கள்!
    (சென்ஷி, நதீம் பாயா? புரியுது..புரியுது)

    ஆபிதின் நானா, சென்ஷி சொன்னத நான் ஒட்டுக்கேட்டுட்டேன்: தெரியாத்தனமா என்னை அண்ணன்னு கூப்டுட்டாராம்….எம்புள்ளங்களப் பத்தி முன்னாலயே தெரிஞ்சிருந்தா அங்கிள் தானாம்.
    அப்ப நீங்க….? 🙂

  7. தாஜ் said,

    22/02/2013 இல் 01:01

    அன்பு மகன் நதீமுக்கு
    மனம் நிறைந்த
    பிறந்ததின வாழ்த்துக்கள்.
    எல்லா செல்வமும் செழிக்க
    வாழ்வாங்கு வாழ்வாய்.

    • தாஜ் said,

      22/02/2013 இல் 19:50

      எனது வாழ்த்துக்கு
      யாரும் மறுமொழி இடவில்லை.
      நானே அதனையும் இட்டு கொள்கிறேன்.

      //நதீம் எல்லா செல்வமும் செழிக்க
      வாழ்வாங்கு வாழ்வாய்.//

      தாஜின் வாழ்த்தில் கண்டுள்ள படிக்கு….
      நதீம் வாழ்வாங்கு வாழவேண்டும்.
      ஆமீன்
      -தாஜ்

      • abedheen said,

        22/02/2013 இல் 22:34

        மஜீதுடன் அல்-அய்ன் போய் சுற்றிவிட்டு இப்போதுதான் வந்தேன். வாழ்வாங்கு வாழ வாழ்த்தியதற்கு நன்றி தாஜ். மறுமொழி போட்டுட்டேன். மீண்டும் நன்றி!


பின்னூட்டமொன்றை இடுக