வேடிக்கை மனிதர்கள்! – தாஜ்

ஃபேஸ்புக்கில்  இன்று கண்ட தாஜின் மூன்று ஸ்டேட்டஸ்கள் இவை (இதற்குள் முப்பது தத்துவங்களை கொட்டியிருப்பார்!). மூன்றுக்கும் ஒரு தொடர்பு இருப்பது போலத்தான் தெரிகிறது…

***

taj-1a

1.

எல்லோரது கலாச்சாரமும்
அவரவர்களுக்கு
உகப்பாக இருக்கிறது.
எங்களது கலாச்சாரமே…
சிறந்ததென
கூக்குரல் எழுப்பி சிலிர்ப்பவர்கள்
காலம் அடையாளம் காட்டும்
வேடிக்கை மனிதர்கள்.

**
2.

இந்த உலகம்
எல்லோரையும் அரவணைக்கிறது.
குஷ்டரோகிகள்
தொழுநோயாளிகள் தொடங்கி
கைச் சுத்தம் பேசும் அரசியல்வாதிகள்
நல்லவர்கள் நாங்களென
சொல்லிக் கொள்பவர்கள் உள்ளீடாக
எவரும் அதற்கு பேதமில்லை!

**

3.

வேதங்களின் பக்கங்களை
புரட்டிப் புரட்டி
காலம் தோறும்
புதிய விளக்கங்களும்
புத்துயிர் விரிவுரைகளும்
எழுதிக் கொண்டே இருக்கிறார்கள்.
பக்கங்களின் ஓரங்கள்
ரேகைகளின் படிவால்
அழுக்கேறுவதையும்
பொருட்படுத்தாது.
***

நன்றி : தாஜ்

1 பின்னூட்டம்

  1. 22/01/2013 இல் 19:11

    மூணாவது (மாத்திரம்) பிடிச்சிருக்குது 🙂


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s