‘சொன்னால் நம்ப மாட்டீர்கள், நான் ஒரு முஸ்லிம்!’ – சின்ன அண்ணாமலை

chinna-annamalai1bபம்பாயில் வகுப்புக் கலவரம் நடைபெற்ற சமயம். ஒருநாள் இரவு சினிமா பார்த்துவிட்டு நான் தங்கியிருந்த வீட்டுக்குத் திரும்ப அனேகம் டாக்சிக்காரர்களை கூப்பிட்டேன்.

மாதுங்கா போகவேண்டுமென்றவுடன், ‘அங்கே போக வேண்டுமானால் ரொம்ப நேரமாகும். வழியில் கலகப் பிரதேசம் இருக்கிறது. ‘கர்ஃப்யு’ ஆர்டர் வேற இருக்கிறது. மணியோ ஒன்பது ஆகிவிட்டது. ஆகையால் வர இயலாது. அப்படி வந்தாலும் யார் என்னைத் திருப்பிக் கொண்டுவந்து விடுவார்கள்? துணையில்லாமல் நான் தனியாக எப்படித் திரும்ப முடியும்? என்று ஒவ்வொரு டாக்சி டிரைவரும் சொல்லிவிட்டார்.

நேரமாக ஆக எனக்கோ நெஞ்சு ‘பக்பக்’ என்று அடித்துக்கொண்டது. ‘சரி இன்று தீர்ந்தோம்’ என்று முடிவு செய்து ஞாபகத்திற்கு வந்த சுவாமிகளை எல்லாம் வேண்டிக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது ஒரு டாக்சி வந்தது. அந்த டிரைவரிடம் போய் அரைகுறை இந்துஸ்தானியில் ,’மாதுங்கா போக வேண்டும்’ என்று சொன்னேன். அவனும் பழைய கதையைத் திருப்பிச் சொன்னான்.

பிறகு நான் அவனிடம் கெஞ்சுதலாக,’நானும் ஒரு இந்து. நீயும் ஒரு இந்து. உதவி செய்ய வேண்டாமா?’ என்றேன்.

உடனே டாக்ஸி டிரைவர், ‘ஆமாம், இந்துவுக்கு உதவி செய்யத்தான் வேண்டும். சரி ஏறு காரில்’ என்று ஏற்றிக்கொண்டு போய் மாதுங்காவில் நான் தங்கியிருந்த வீட்டின் முன் பத்திரமாக இறக்கி விட்டுவிட்டு,

’சாப், நான் இந்துவல்ல, ஒரு முஸ்லிம். உண்மையான முஸ்லிம் யாருக்கும் தீங்கு செய்யக் கூடாதென்பது குரான் வாக்கு’ என்று கூறிவிட்டுக் கம்பீரமாகச் சென்றான்.

நான் கல்லாய் சமைந்து நின்றேன்.

***

சொன்னால் நம்பமாட்டீர்கள், சின்ன அண்ணாமலை அவர்களின் நூலை இலவசமாக இங்கிருந்து டவுன்லோட் செய்யலாம்!

சொன்னால் நம்பமாட்டீர்கள், மேலே பதிவிட்ட பகுதி  ’தேவகோட்டை’ பிளாக்கில் கிடைக்கிறது. ஆனால், – கூகிள் அக்கவுண்ட்டில் லாகின் செய்தாலும்-  ’invited readers only’ என்ற தகவல் வருகிறது. நான் ஒரு முஸ்லிம் என்பதால் போலும். எடு கீபோர்டை..!

8 பின்னூட்டங்கள்

 1. 31/12/2012 இல் 15:41

  இந்தா இன்னொன்னு:

  அட நம்புங்க சார்……

  RP ராஜநாயகம் வலைப்பக்கத்தில்:

  //சின்ன அண்ணாமலை சிவாஜி ரசிகர் மன்றங்களை வழி நடத்தியவர். ’சொன்னால் நம்ப மாட்டீர்கள்’ என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

  அதில் ஒரு சுவாரசிய நிகழ்வை எழுதியிருக்கிறார்.
  இவர் காரில் வந்து கொண்டிருந்திருக்கிறார். ஒரு தியேட்டரில் ஷோ முடிந்து கூட்டம் வெளியே வந்திருக்கிறது. படம் ’வீரபாண்டிய கட்டபொம்மன்.’ இவர் காரிலிருந்து இறங்கி பார்த்திருக்கிறார். எல்லோரும் கவலை தோய்ந்த முகத்துடன் நடந்து வந்து கொண்டிருந்திருக்கிறார்கள். இவர் ரொம்ப சோகமாய் வந்து கொண்டிருந்த ஒருவரை நிறுத்தி ’படம் எப்படி இருக்கு?’ என்று கேட்டிருக்கிறார். அந்த ரசிகர் உடனே ரொம்ப வேதனையுடன் சொல்லியிருக்கிறார் “ என்னங்க படம் இது. சிவாஜி சரியில்லீங்க. இதுவே எங்க எம்.ஜி.ஆரா இருந்தா சண்டை போட்டு அவ்வளவு வெள்ளைக்காரனுங்களையும் அடிச்சி விரட்டியிருப்பாரு! பானர்மேன தூக்குல தொங்கவிட்டுருப்பாரு! இப்படி சிவாஜி மாதிரி தூக்குல தொங்கியிருக்கவே மாட்டாரு.”//

  http://rprajanayahem.blogspot.com/2012/12/blog-post.html

  • abedheen said,

   31/12/2012 இல் 15:53

   ஆஹா, இதுக்காத்தான்யா ராஜநாயஹம் வேணும்கிறது,,

 2. அனாமதேய said,

  02/01/2013 இல் 11:31

  Interesting.

 3. 03/01/2013 இல் 13:21

  நீங்க எல்லாரும் அவர் நகைச்சுவையை மட்டும் ரசிக்கிறீங்க… ஆனா அவர் பெயரைச்சொன்னால் எனக்கு தாங்கொனாத துயரம் மட்டுமே வரும்….அவரது மரணம் அப்படி.. மணிவிழாவில் தலைக்கு ஊற்றுகிறேன் பேர்வழின்னு தண்ணீரை ஊற்றோ ஊற்றுன்னு ஊற்ற மூச்சுத்திணறி – மாரடைப்புன்னு பிற்பாடு சொன்னாங்க – இறந்துவிட்டார். அவர், வேண்டாம் முடியலன்னு சொன்னதை ஊற்றியவர்கள் பொருட்படுத்தவில்லைன்னுகூட படிச்சதா (சின்னப்புள்ளையா இருந்தபோது) ஞாபகம்…

  என் நினைவு சரிதானா?
  இல்லை அநியாயத்துக்கு பேத்துறனா?

 4. bulkdial said,

  08/01/2013 இல் 10:15

  its a genuine post and having very good description….
  India’s No 1 Local Search Engine

  QuestDial

 5. 27/01/2013 இல் 08:44

  Wow! This could be one particular of the most useful blogs We have ever arrive across on this subject. Basically Great. I’m also a specialist in this topic so I can understand your hard work.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s