செல்லமகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளும் ஆசிகளும்.. எனக்குப் பிடித்த பழைய மினோல்டா கேமராவில் (SR-T101) நான் எடுத்த ஃபோட்டோ இது. (Click here to enlarge Photo). பார்த்துவிட்டு, ’அப்படியே நீம்பர்தாங்கனி..’ என்றார்கள் வாப்பா. சவுதியிலிருந்து ‘OneWay’-ல் ஊர் போயிருந்த சமயத்தில் கிடைத்த அவமானங்களை மறக்க மகளின் இந்த முகம்தான் உதவிற்று. சரி, கஷ்டங்களை மறப்போம். என்னைப்போலில்லாமல் நகைச்சுவையாகப் பேசுகிறார்கள் பிள்ளைகள் இருவருமே. சொந்தக்காரர்கள் தோழிகள் எல்லாருக்கும் இம்முறை குவாலிடிஸ்ட்ரீட் சாக்லெட் டின் கொடுக்கப்போவதாக நேற்று சொன்ன மகளிடம் , ‘ரொம்ப செலவாகுமே கண்ணு…’ என்றேன். ‘வெறும் டின்தான் வாப்பா. உள்ளே சாக்லெட்லாம் கிடையாது’ என்றது M.Sc.,(Maths). ’துஆ’ செய்யுங்கள் அண்ணன்மார் தம்பிமார்களே! – ஆபிதீன்
ஒ.நூருல் அமீன் said,
28/11/2012 இல் 11:13
மகளாரும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஈருலக பேரும் பெற்று இனிய நல்வாழ்வு வாழ இறைவனை இறைஞ்சுகின்றேன். ஆமீன்!
jafar sadiq said,
28/11/2012 இல் 11:33
My sincere wishes to your lovely daughter.
எம்.ரிஷான் ஷெரீப் said,
28/11/2012 இல் 18:16
மாஷா அல்லாஹ்..ஆப்தீன் நானா, வாழ்த்து விபரங்களை எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் புகைப்படத்தோடு சேர்த்துக் கொள்கிறேன்.
ஹமீது ஜாஃபர் said,
28/11/2012 இல் 18:34
ஆபிதீன்,
‘வாழ்த்தோ துவோமே
வல்லோன் துணை
வாழ்த்தோ துவோமே…!
என பிரார்த்தனையுடன் வாழ்த்துகிறேன்.
அது சரி..! கொண்டுபோன குவாலிட்டி டின்னெல்லாம் இப்பத்தான் வெளியாவுதாக்கும். வாப்பாடப் புள்ளையா கொக்கண்டானா……….
சாதிக் said,
28/11/2012 இல் 19:26
அண்ணாரின் அன்பு மகள் சகல செளபாக்கியங்களுடன் வாழ வாழ்த்துகிறேன்
akbardeen said,
28/11/2012 இல் 20:17
அண்ணன் ஆபிதீன்!
நல் வாழ்த்துக்கள்!! நலம் வாழ துஆக்கள்!!!!
அக்பர் தீன் – பொதக்குடி
ஆபிதீன் said,
28/11/2012 இல் 22:11
வாழ்த்திய இதயங்களுக்கு நன்றி. நூருல்அமீன்பாய், ஜாஃபர் சாதிக், ரிஷான் ஷெரீப், ஜாஃபர்நானா, சீர்காழி சாதிக், பொதக்குடி அக்பர்தீன் ஆகியோருக்கு நாளை ‘குவாலிடிஸ்ட்ரீட்’ சாக்லெட்டுகள் அனுப்பப்படும்!
மஜீத் said,
29/11/2012 இல் 13:53
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!
லேட்டா சொன்ன எனக்கும் தாஜுக்கும் ஒரு நாள் லேட்டா அனுப்பவும் (சாக்லெட்)
தாஜ் said,
29/11/2012 இல் 00:54
சந்தோஷமாக இருக்கிறது.
மகளுக்கு என் வாழ்த்துக்கள்.
வாப்பா அருகில் இருந்து
சந்தோஷத்தை பகிர்ந்திருக்கலாம்.
-தாஜ்
அனாமதேய said,
30/06/2014 இல் 10:38
தேவையா