’சின்ன எஜமான்’ பாட்டு : கவிஞர் சலீம்

’தாதா’ என்று நாகூர் ஜனங்கள் பலரால் மரியாதையாக அழைக்கப்படும் சின்னஎஜமானின் ஹத்தம் இன்று. சென்றவருடம் நாகூர் அலங்காரவாசல் பந்தலில் என்னைக்கட்டித் தொங்கவிட்டாள் அஸ்மா. ரொம்பநேரம் சிரித்துக்கொண்டே பார்த்துக்கொண்டும் இருந்தாள். இவளன்றோ இல்லாள்!அல்லாஹ்வின் அருளால் இந்த வருடம் இல்லை; தப்பித்துவிட்டேன். ஆனால் மகள் – இல்லை, அனீகாவை தொங்கவிடவில்லை – மகளுக்காக நேர்ந்துகொண்டு வளையல்களைத் தொங்கவிட்டிருக்கிறாளாம். நல்லது. இந்த நேரத்தில்  சின்னஎஜமான் பற்றி எங்கள் சலீம்மாமா அவர்கள் இயற்றிய பாடலைப் பதிவிடுகிறேன். மனம் கசங்கும்போதெல்லாம் நானும் ஜஃபருல்லாநானாவும் இதைக் கேட்பது வழக்கம். நானாவின் தொந்தரவு தாங்காமல் நானும் என்னால் அவரும் கேட்பதும் வழக்கம்தான். பாடியவர் ஏதோ அரப்ஷாதைக்கால் பாடகர். சிங்கை கமால் நாகை நவாப்ஜான் என்று நண்பர் அசனா சொன்னதாக நினைவு. ஒரிஜினலாக அன்று பாடிய இசைச் சக்கரவர்த்தி ஜி.ராமனாதன் அவர்களின் உருக்கத்தை இங்கே எதிர்பார்ப்பது அனாவசியம். ’வச்சிக்கிட்டா வஞ்சகம் பன்றாஹா?’ என்று ஹஜ்ரத் கேட்பது போலத்தான். இஸ்லாத்தில் இசை கூடுமா கூடாதா என்று வழக்கம்போல விவாதம் செய்யாமல் ‘In my view, music does not do any harm to adhering to the basic tenets of Islam. If it does, then you faith is weak. My faith is strong enough not to forget God and to remember God even while listening to music’ என்று ’ஆம்பூர் ஆல்ஃபா’ சொல்வதை அப்டியே கேட்டுக்கொள்ளுங்கள். நன்றி. – ஆபிதீன்

 ***

Download

நன்றி : அசனாமரைக்காயர்

4 பின்னூட்டங்கள்

 1. 18/10/2012 இல் 17:45

  அருமையான பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி

 2. 19/10/2012 இல் 05:34

  ” ஆம்பூர் ஆல்பா ” வாசகங்கள் எனக்குப் பிடிக்கிறது. பாட்டு கேட்டேன். பிடித்து இருந்தது.

 3. abedheen said,

  20/10/2012 இல் 11:07

  இஸ்மாயில், இந்தப் பாட்டை ஜபருல்லாநானா பாடிக் கேட்கவேண்டும் (முகத்தைப் பார்க்காமல்). அழுது விடுவீர்கள். காதர்பாய், வாங்க. நலமா? நீங்கள் இருவருமே நான் மேலே கொடுத்த சுட்டியிலிருந்து , கே.வி. மகாதேவன் இசை அமைத்த ,’அல்லி பெற்ற பிள்ளை’ என்ற படத்தில் ஜி.ராமனாதன் பாடிய , ‘எஜமான் பெற்ற செல்வமே என் சின்ன எஜமானே’ பாடலை (எழுதிய கவிஞரின் பெயர் தெரியவில்லை) கேட்டதாகத் தெரியவில்லை. பரவாயில்லை, மற்ற நண்பர்களுக்காக – பி.ஜி.எஸ். மணியனுக்கு நன்றியுடன் – சுட்டி இதோ : http://www.mediafire.com/?nqztkxdhldt

 4. abedheen said,

  20/10/2012 இல் 11:11

  ராஜநாயஹம் பதிவு : http://rprajanayahem.blogspot.com/2008/09/blog-post_6845.html


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s