ஹதீஸ் : அறம் பற்றி ஓர் அழகுப் பா!

எவை எவை அறத்தின்பாற்படும் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள ஒரு ஹதீதைப் பின்வரும் அழகுப்பாவில் வடித்துத் தருகிறார் புலவர் காதிறு முஹ்யித்தீன் மரைக்காயர் (1888-1975). மர்ஹூம் அப்துற்-றஹீம் அவர்களின் ‘முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள்’ நூலிலிருந்து…

***

சோதரன் முகத்தை நோக்கித்
     தூயபுன் முறுவல் பூத்தல்;
தொல்லறம் புரியத் தூண்டல்;
     தொடர்பவம் விலக்கல்; செல்லும்
பாதையை விட்டுத் தப்பிப்
     பருவரல் அடைந்து நிற்போர்
பார்க்கின், நேர்வழியைக் காட்டி
     பரிந்(து) அவர்க் குதவி செய்தல்;
ஓதரும் பார்வை நீங்கி
     உழலுவோர்க் குதவல்; எனபோ(டு)
உறுத்தகல், முள்ளைப் பாதை
     யூடுநின் றகற்றல்; உன்றன்
சீதநீர்க் கடகால் நின்று
     சிறி(து) உடன் பிறந்தாற்(கு) ஊற்றல்;
செப்பிய இவையா வும்நீ
     செய்தகு தருமம் ஆமே.

***

1 பின்னூட்டம்

  1. 19/08/2012 இல் 21:24

    நற்குணத்தை சம்பூரணபடுத்தவே இறைவன் என்னை துதாராக்கினான் என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்).
    இந்த கவிதை அந்த நபிமொழியை ஞாபகமூட்டியது. நன்றி!
    உலகெங்கும் மனித நேயம் ஓங்க இந்த ஈகைத் திருநாளில் அல்லாஹ்-பிரமன்-கர்த்தர் என பல பெயரில் அழைக்கப்படும் ஏகப்பரம்பொருளை இறைஞ்சுவோமாக!

    அனைவருக்கும் ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s