ரொம்பப் பெரிய ஆறுதல்

ஆபிதீனை விட அவன் சூத்தாமட்டைதான் பிரபலம் என்று இப்போதுதான் தெரிகிறது!  அத்தனை பேர் பார்க்க வந்திருக்கிறார்கள் என் பக்கத்தை. வாழ்க! ஆசிக் அபுவின் புதிய படத்தில் (22 Female Kottayam) ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் சொல்வாளாம் – போகிற ஒரு பையனின் பின்பக்கத்தை ரசித்துப் பார்த்து : ‘என்ன குண்டியந்னே…!’. இன்னும் பார்க்கவில்லை நான், படத்தை. அதுமாதிரியல்லவா இருக்கிறது!

ஆறுதல் சொன்ன எல்லா நண்பர்களுக்கும் நன்றி. பயந்துகொண்டே  முந்தாநாள் – வேறு சாலையில் – வாக்கிங் போனபோது ஃபோன் பேசிய ஆசிப்மீரானின் ஹாஸ்யம்தான் டென்சனைக் குறைத்தது. ‘மாத்தி அடிச்சிட்டாங்கண்ணே’ என்றார், ஆரம்பத்திலேயே.  பேசியவர்களை விட்டு பேசாத என்னை அடித்துவிட்டார்களாம்! இவருக்கே தனிப்பட்ட சோகங்கள் சில இருந்தாலும் நகைச்சுவை படு அட்டகாசமாக வருகிறது ஆசிஃபுக்கு. ஒருவேளை சோகமாக இருப்பவர்களுக்குத்தான் நகைச்சுவை வருமோ? அப்படியில்லையே, நானும் என்னென்னவோ எழுதிப்பார்க்கிறேன். ஒரு பயல் சிரிக்க மாட்டேன்கிறான்களே. கிரேக்க சினிமா ஒன்றில் காசு கொடுத்து சொற்கள் வாங்கும் கவிஞன் மாதிரி ஏதாவது கொடுத்தால்தான் சிரிக்கிறேன் என்கிறார்கள். என்ன செய்வது?

பின்னூட்டமிடுவதில் பிரச்சனை இருப்பதால் ஆசிப்மீரான் தனி மெயிலாக அனுப்பினார் இப்படி :

என்னங்க இது அநியாயமா இருக்கு? வழக்கமா நிகழ்ச்சில பேசிட்டு வீட்டுக்குப் போறவங்க மேலதான் முட்டையால அடிப்பாங்க 🙂 இதுலயும் நீங்க தனித்துவமானவர்ன்னு நிரூபிச்சிட்டீங்க. ஜஃபருல்லா அண்ணனுக்கு என் ஸலாத்தைத் தெரிவிக்கவும். ‘நான் அல்லாஹ்வுக்கு பயப்பட மாட்டேன், ஆனால் ஷைத்தானுக்குப் பயப்படுவேன்’ என்று இங்க பலபேரு சூத்தாமட்டைல முட்டை அடிச்சவராச்சே அவர்? :-)).

பின்னூட்டமிடுவதில் ஜமாலனுக்கும் பிரச்சனையாம் (இதுக்குத்தான் நாகூருக்கு அடிக்கடி வரணும்ங்கிறது!). அவரது ஆறுதல் :

//இன்னும் டிரைவிங் லைசன்ஸ் எடுக்காம எலக்கியவாதியாவே இக்கீறீங்களே’ என்று முபாரக் வெடைத்தது இங்கே ஞாபகம் வருகிறது//. அப்போ நானா நானும் இலக்கிய வாதிதானா?  டிரைவிங் இழவு மட்டும் வரவேயில்ல.. லைசன்ஸ் தரல… கடைசியா அந்த போலிஸ்காரன் காலரைப்பிடித்து தரதரன்னு இழுத்தபோய்.. வெளியில் ரோட்டைக்காட்டி ”எலலா பர்ரா” என்றதோட 2500 சவுதி ரியால் நஷ்டத்துடன் டிரைவிங் ஆசையில் மண்ணை கொட்டியததான் மிச்சம். நமக்கு இருக்கவெ இருக்கு பைசக்கிள் அல்லது கால்நடை ))).  நாம் எப்போதம் கால்நடைதானே? ))  ஆனாலும் உங்களோடு பைக்கில் அமர்ந்து உங்க வீட்டிற்கு போனபோது எனக்கும் “ஒரே அழுத்தில் போயிடுலாமோ” என்றுதானே இருந்தது. என்னொட எழுத்து மாதிரியெ அச்சு அசலா அப்படி எப்படி கோணல்மாணலாக பைக் ஓட்டுகிறீர்கள். இந்த அனுபவம் அருமையாக உள்ளது.  கதைகள் நாவல்கள் என எழுதும் ஆற்றல் கொண்ட நீங்கள் இப்படி. ராணி காலண்டர் கணக்கா குறிசொல்லி பதிவு நடத்துவதும். கூட்டாஞ்சோறு ஆக்குவதும் சரியில்லை. 12 வருடங்களக்கு முன்பு அரபி “சிறு அராமிகள்“ எச்சிலை துப்பியது என்மேல. நல்லவேளை நான் சைவம் என்பதால் முட்டையால் அடிக்கவில்லை. ))

கொலைவெறியோடு குசும்பன் எடுத்த போட்டோவுடன் (தசாவதாரம் பல்ராம்நாயுடு மாதிரி இருக்கிறேன் நான்!) நண்பர் ஜெயமோகன் வேறு தனியாக இந்தவிசயத்தை அவர் தளத்தில் பதிவிட்டதால் ஏகப்பட்ட மெயில்கள். சில இணையதளங்களில் ‘அமீரகத்தின் எழுத்தாளர் ஆப்தீன் முன்னிலையில்’ என்று போட்டிருப்பதைப்பார்த்து (ஆசிப்மீரானின் குறும்பு இது என்று நினைக்கிறேன்) ரொம்ப கூச்சமாகிவிட்டது. ‘ஆமா சார், நீங்க என்ன எழுதியிருக்கீங்க?’ என்று பலரும் கேட்கிறார்கள். அதைத்தான் நானும் கேட்கிறேன்.

அப்புறம்… அதென்ன ரஃபி, அமீன்பாய் என்று பலரும் ‘நீங்க ஃபோட்டோவுல அளகா இருக்கிங்க’ என்று வெடைக்கிறீர்கள்? மூன்றுமாதம் கழித்து முடிவெட்டி, டை அடித்து, அப்படியே குளிக்கவும் செய்தால் எந்தக் குரங்கும் அழகாக இருக்கும் என்று அஸ்மா சொல்கிறாள். என் மொகரக்கட்டையை அவளிடம்தான் கேட்கவேண்டும். காலையில் என் முகத்தில் விழித்ததுமே அலறுவது அவள்தானே..!

‘டிரைவிங் லைசென்ஸ் ஏன் எடுக்கலைங்கிறேன்?’ என்று மஜீதை ஆட்சிபுரியும் ஆச்சி கேட்டிருக்கிறது. இதையே நண்பர் டைனோபாயும் முகநூலில் கேட்டிருந்தார். என்னங்க லாஜிக் இது, டிரைவிங் லைசன்ஸ் எடுத்திருந்தவன்தானே பெப்ஸி டின் முட்டையால் அடித்தான்! ஏன் எடுக்கவில்லை என்பதற்கு அட்டகாசமான இன்னொரு கதை இருக்கு. எழுதுகிறேன்.

ஆறுதல் மெயில் அனுப்பியவர்களில் சஃபி என்ற சகோதரர் மட்டும் அரபிகள் பற்றி நல்லவிதமாக எழுதியிருந்தார்: ‘மிகவும் வருந்துகிறேன். அரபிகளிலேயே emiretis தான் பண்பானவர்கள் என்று சொல்வார்கள். எனக்கு அவ்வளவு அனுபவம் இல்லாவிடினும், நான் சந்தித்த அளவில், எமிராத்தி மற்றும் ஈராக்கிகள் மற்றவர்களை மதிப்பவர்களாய், அரபி அஜமி வித்தியாசமின்றி நடத்துவதை பெரும்பாலும் அனுபவித்திருக்கின்றேன்’ .

உண்மை.

சோமன், எல்லாவற்றையும் விட பெரிய ஆறுதல் என் அரபி முதலாளி சொன்னதுதான். ‘யா ஆப்தீன்… நீ ரோடு நடுவுல போயிருப்பாய். அதுதான் அடிச்சிருக்கானுங்க..!’ என்றான் அலட்சியமாக.

இவனுக்கு, கூமுட்டைகளே தேவலாம், இல்லையா?

நான் ஏதும் எழுதாதது குறித்து சில நண்பர்கள் வருத்தப்பட்டிருக்கிறார்கள். எழுதினால் மிகவும் வருத்தப்படுவார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி!

9 பின்னூட்டங்கள்

 1. 19/04/2012 இல் 18:38

  //‘ஆமா சார், நீங்க என்ன எழுதியிருக்கீங்க?’ என்று பலரும் கேட்கிறார்கள். அதைத்தான் நானும் கேட்கிறேன்.// இப்படி நீம்பரே கேட்டுக் கொண்டிருந்தால் எப்படி??

  //ஏன் எடுக்கவில்லை என்பதற்கு அட்டகாசமான இன்னொரு கதை இருக்கு. எழுதுகிறேன்// அதை செய்யும். அப்பவாவது ஒப்புக் கொள்கிறார்களா பார்ப்போம்.

  டை அடிக்கிறியுமா?

  எப்படியோ எல்லோர் கூடவும் நின்று போட்டோ எடுதுக் கிட்டியும். நல்லா தான் இருக்கியும் போட்டோவுல! அதை விடும். அது ஏன் போட்டோவில் கை கைகட்டிக்கொண்டு. மரியாதி! 🙂

 2. Abdul Qaiyum said,

  19/04/2012 இல் 19:08

  ஜார்ஜ் புஷ், ப.சிதம்பரம், சரத் பவார் இவர்களின் ரேஞ்சுக்கு சென்று விட்டீர்கள் ஆபிதீன்.

  ட்விட்டரில் 11 மில்லியன் ரசிகர்கள் கொண்ட பாடகி லேடி காக (Lady Gaga) மீது சிட்னியில் முட்டை எடுத்து வீசினார்களாம். உங்களுக்கு முகநூலில் வெறும் 84 ரசிகர்கள்தான் இருக்கிறார்கள். ட்விட்டரில் வேறு அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்களா ஆபிதீன்?

 3. soman said,

  19/04/2012 இல் 19:19

  என்னடா ஒரு முனகலைக்கூட காணோமேன்னு வெசனப்பட்டுப்போனேன். வடிவேலு கிட்ட ஒருத்தர் கேப்பார், “என்ன தல இந்த நொண்டு நொண்டுர,
  கால்லேயே போட்டுட்டானுவளோ, உம்ம்னு ஒரு வார்த்த சொல்லு., ஊர்ல இருந்து லாரி லாரியா ஆளைக் கூட்டிட்டு வரேன்” னு! அதுமாதிரி உம்ம எழுத்துக்கு வலிக்கும்னு எத்தனை பேரு பதறிட்டோம்னு பாத்தீரா?

  அழுவாச்சி வர மாதிரி பதிவு போடறது உமக்கு ஒரு தொழிலா போச்சு! “குழந்தை”லிருந்தே. இப்ப பாரும் , சீதேவி வாப்பா வரும்போது (போனவருஷம் மாதிரியே) ஒரு கண் கலங்கறதுக்குள்ள சூத்தாமட்டை!.

  பதிவு பதிவுன்னு அலைஞ்சு அது இப்பிடியா வரணும்?
  “நான் அம்பட்டயனா பொறந்த பாவமம்மா” ன்னு உதிரிப்பூக்களில் மகேந்திரன் ஒரு உலுக்கு உலுக்கி இருப்பார். இத்தனை பேரு குசலம் கேக்கறாங்கன்னா
  ரெண்டு மிதி வாங்கினது ஒண்ணும் வலிக்காதுங்காணும் !

 4. 19/04/2012 இல் 21:59

  //நான் ஏதும் எழுதாதது குறித்து சில நண்பர்கள் வருத்தப்பட்டிருக்கிறார்கள். எழுதினால் மிகவும் வருத்தப்படுவார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறேன்//

  வருத்தப்படாத வாலிப-வயோதிக அன்பர்கள் சங்கத் தேர்தல் இந்தவாரம் நடைபெறுகிறது. பங்குபெற விரும்பும் உறுப்பினர்கள் இங்கேயே பதிவு செய்யவும்

  – தலைவர் (பொறுப்பு)

 5. 19/04/2012 இல் 23:36

  நகைச்சுவையும் நேடிவிட்டியும் தான் உங்கள் ஸ்பெஷாலிடி நிறைய எழுதுங்கள். வருத்தப்பட காத்திருக்கிறோம் ஆவலுடன்.

 6. soman3y said,

  22/04/2012 இல் 01:59

  இன்னொண்ணு, முன்னாடியே சொல்லி இருக்கணும்.
  “www.paltalk.com” போய் ஒரு இலவச பதிவிறக்கம் பண்ணிட்டு
  ஐ டி ரெடி பண்ணிக்கிட்டு உள்ள வந்து, “View all Rooms”
  “Asia and Pacific”, “India”, “Indian Classical Music Karnatic Gurukulam”
  உள்ளே நுழைஞ்சு வந்து இரும். நிதமும் என் டைம்
  காலை ஆறு மணிக்கெல்லாம் நான் இருப்பேன்.
  பாடம் எடுத்துக்கொண்டு. சரியா?

  • abedheen said,

   22/04/2012 இல் 09:56

   அன்பு சோமன், உங்கள் டைம் காலை 6மணி என்றால் இங்கே நாலரை. அல்லாஹ்வுடன் நான் பேசிக்கொண்டிருக்கும் சமயம்! ஊர் வரும்போது நேரில் பாடம் எடுத்துக்கொள்கிறேன். சரியா?

   ஆசிப்மீரானும் ஹனீபாக்கவும் சொன்ன ஆறுதலை இப்போது பார்த்துவிடுங்கள்.

   ஆசிப் : //இவனுக்கு, கூமுட்டைகளே தேவலாம், இல்லையா? // இந்த இடத்தில் விழுந்து உருண்டு சிரித்து விட்டேன். இவர்களெல்லாம் இல்லாவிட்டால் உங்களுக்கு வேறு யார் ஆறுதலாக இருக்க முடியும்? //நான் ஏதும் எழுதாதது குறித்து சில நண்பர்கள் வருத்தப்பட்டிருக்கிறார்கள். எழுதினால் மிகவும் வருத்தப்படுவார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறேன். //
   :-))))) . உங்களுக்கு நகைச்சுவை வருவதில்லை என்று புலம்புவதைப்பார்த்தால் பேசாமல் நானே ஒரு நடைவந்து சூத்தாமட்டையில் திரும்பவும் முட்டையடிக்கலாம் போலிருக்கிறது 🙂 .

   அடித்தாரா?

   இது ஹனீபாக்கா :’ துபாயில் நடந்த நிகழ்வுகளால் மன உளைச்சலா? எத்தனை உளைச்சலை இத்துணை
   வயதுக்குள் பெற்று விட்டோம். விட்டுத் தள்ளுங்கள். அஸ்மாவுக்கு ஏன் சொன்னாய்? பெண்களைத் தெரியாதா? எடுத்ததற்கெல்லாம் கலங்குவார்கள். உனது
   மகளும் நொந்திருப்பாள். அரபு தீபகற்பத்தில் எங்கள் நாதர் (ஸல்) அவர்கள் பிறந்ததற்கான சான்றுகள் கடந்த 1400 வருடங்களாக நாங்கள் பார்த்து வருகிறோம். அதிலொன்றுதான் இந்த நிகழ்வும். அரபிகளிடமிருந்தும்
   காட்டுமிராண்டித்தனம் இன்னும் அவர்களை விட்டு நீங்கவில்லை. என்ன செய்வோம்? நாம் கொடுத்து வைத்தவர்கள். அவர்களுக்காகவும்
   பிரார்த்திப்போம். அவர்கள் அமெரிக்கர்களுக்காகப் பிரார்த்திக்கட்டும்.’

   ஆறுதலின் மறுபெயர் அஸ்மா.

   ‘என்ன புள்ளே.. வாப்பாக்காக ரெண்டு மிஸ்கினுக்கு சோறுகொடுக்கச் சொன்னேனே. கொடுத்தியா?’ என்று நேற்று கேட்டதற்கு ‘மூணு மிஸ்கினுக்கு கொடுத்துட்டேன் மச்சான்’ என்றாள். ‘மூணாவது யாருக்காக?’ என்றால் என் மேல் முட்டை அடித்த சம்பவத்துக்காகவாம்!

   ‘ஏண்டி , நேர்த்திக்கடனா?’

   ‘சே, மனசு ஹராரத்தா (சங்கடமா) இந்திச்சி. அதான் கொடுத்தேன்’

 7. 22/04/2012 இல் 11:07

  //பேசாமல் நானே ஒரு நடைவந்து சூத்தாமட்டையில் திரும்பவும் முட்டையடிக்கலாம் போலிருக்கிறது 🙂
  //
  ஆசிப் மீரான், இதுக்கு எதுக்கு நேரடியா வரணும்? (மறுபடியும்)ஆள்வச்சே பண்ணிடலாம். சென்ஷி-ஆர் யூ லிஸனிங்? என்னாலான உதவி உண்டு இந்த தடவை(யும்)


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s