நிழலைக் கொண்டாடும் நேரம் – தாஜ்

ஆசி வழங்குங்கள் ஐயா, இன்று என் பிறந்தநாள் என்றதுமே உடனே கவிதை எழுதி அனுப்பிய நண்பர் தாஜூக்கு நன்றி.அப்ப.. சீர்காழி சார் கவிஞர்தான். வாழ்க. இன்று என் கல்யாணநாளும்கூட.  எந்த அளவுக்கு நான் நல்ல கணவன் என்றால்…. என் கதைகளைப் படிக்கும் கொடுமையான தண்டனையை அஸ்மாவுக்கு  இதுவரை கொடுத்ததே இல்லை!

தாஜின் வாழ்த்தைப் படிப்பதற்கு முன் மூன்று வயது ஆபிதீனின் முகத்தைக் கொஞ்சம் பாருங்கள். என்னா ஒரு ஏமாளிக் களை! –  ஆபிதீன்

***

***

நிழலைக் கொண்டாடும் நேரம்

தாஜ்

துளிர்த்து கிளைத்து
தழைத்த நிழல் தரும் மரம்
காய் கனியும் தரும்
காற்று அலைக்கழிக்க
இலைகளை உதிர்க்கும்
மறவாமல்…
கிளைகளின் பின்னாலேனும்
அண்டுபவனுக்கு
நிழல் விரிக்கும்
வெய்யலில் காயும்
அடை மழையில் நனையும்
வறட்சியை சகிக்கும்
துளைக்கும்
புழுக்களின் நாச வலியை
மெண்டு முழுங்கும்
சொல்லப்படாத
அதன் மௌனத்தின்
செய்திகள் ஆயிரம்!

நான் மரங்களை நேசிப்பவன்
அதன் சங்கதிகளெல்லாம்
எனக்கு வியப்பு!
அதன் நிழல் கொண்டாட்டம்
இயற்கை கம்பீரத்தின் ஆயுள்
காலத்திற்கும் தொடர வேண்டும்
என்னை மாதிரி
என் பின்னே
தொடரும் ஆயிரமாயிரமும்
நிழல் கொள்ள வேண்டும்.

வாழ்த்துக்கள்
ஆபிதீன்.

***

நன்றி : தாஜ் (10:43 AM  13/3/2012 ) | E-Mail : satajdeen@gmail.com

11 பின்னூட்டங்கள்

 1. மஜீத் said,

  13/03/2012 இல் 16:39

  ம்ம்ம்….
  போன வருஷம் வலை…
  இந்த வருஷம் இல்ல?

  பரவால்ல
  தாஜ் ஸ்பெஷல் வந்துருச்சு
  சூ……………ப்பர்!!

  இதோ என் (தகுதிக்கு ஒரு) கவிதை:

  டம் டம் டபுள் டமாகா
  இன்னிக்கு சாயுங்காலம்
  கொத்துப்பராட்டா…?

 2. 13/03/2012 இல் 19:08

  ஏமாளிக்கலையா? ம்ஹும். பாக்கட்டுக்குள் கைவிட்டுக் கொண்டிருப்பதிலேயே படு உஷார் என்று தெரியவில்லையா? ஆனால் சின்ன வயதில் எல்லோருமே அழகாக இருக்கிறோம், இல்ல?

  • தாஜ் said,

   13/03/2012 இல் 21:45

   ரூமி…
   எங்கே?
   காணவே காணும்?
   சுகம்தானா?..
   ஓ….
   நானா?
   தாஜ்.

   -தாஜ்

  • abedheen said,

   14/03/2012 இல் 10:56

   ஓய், என் பாக்கெட்லெதானேங்கனி கைய வுடுறேன். உம்ம மாதிரி அடுத்… சரி, வாணாம். அந்த பியூட்டி சமாச்சாரத்துக்கு வர்றேன். நீர் நிஜமாவே இப்பவும் அழகுதான்.

 3. 13/03/2012 இல் 19:49

  நீங்க நல்லவரா? கெட்டவரா? சின்ன புள்ளைல! :-))

  நல்லா இருங்க சீதேவி… அஸ்மாவுடன்!

  • abedheen said,

   14/03/2012 இல் 10:59

   காதர்பாய். நன்றி. நேத்து 3 பேருக்கு ஃபோன்கார்ட் ரீசார்ஜ் செஞ்சி கொடுத்தேன். வாழ்த்து சொன்னார்கள். என்னா ஒரு சந்தோஷம்!

 4. senshe said,

  15/03/2012 இல் 11:26

  வாழ்த்துகள் அண்ணா :))

  • abedheen said,

   15/03/2012 இல் 13:37

   நன்றி சென்ஷி. பார்ட்டி ஒண்ணு பாக்கி இருக்கே…

 5. 17/03/2012 இல் 16:23

  உம்மா……டி….!

 6. haja mydeen said,

  23/03/2012 இல் 12:20

  best wishes and thanks for your hard work. hajaaaaaa,

  • abedheen said,

   24/03/2012 இல் 10:25

   நன்றி ஹாஜா. தமிழில் வாழ்த்துங்களேன், எனக்கும் புரிஞ்சமாதிரி இரிக்கிம்!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s