டெஸ்ட். பதிப்பித்தால் ஏற்குமா வேர்ட்பிரஸ் என்று தெரியவில்லை. ஏற்கனவே அது செய்த தகராறில் ப்ளாக்ஸ்பாட்டுக்கு ஓடிப்போனேன். ஆனால், இங்கேயே தொடருங்க நானா என்று நச்சரிப்புகள் தாங்க முடியவில்லை. பச்சை வண்ணம் பச்சக்னு மனசுல ஒட்டிக்கிடிச்சி போல. சரி, சௌதி – அல்கோபரில் நான் வேலை செய்தபோது (1985-1989) வரைந்த ஓவியத்தை பதிவிடுகிறேன். A3 சைஸில் , வண்ணத்தில் வரைந்தேன் அவரை. இப்போது கிடைத்தது b/w ஜெராக்ஸ்தான். ம்… அந்த அரபியின் பெயர் மறந்து விட்டது. லேடிஸ் பஜார் அருகேயுள்ள சாலே மன்சூர் ஃபார்மஸிக்கு பக்கத்தில் ஒரு ஸ்டேஷனரி கடை வைத்திருந்தார் . நல்ல மனுசன். அபூர்வமான அரபி. பின்னே ஓவியத்தைப் பார்த்ததுமே சிரித்துக்கொண்டே நூறு ரியாலை கையில் திணித்தாரே… ஆர்டர் வாங்கிய ஹமீதுக்கு 50 ரியால், போஸ்டர் கலருக்கு 40 ரியால் போக மீதி 10 ரியாலை உம்மாவுக்கு ஃபோன் பேசுவதற்காக டெலிபோன் பூத் Coins வாங்க வைத்துக்கொண்டேன். நினைவுக்கு வருகிறது.
என்ன, இங்கேயே தொடரலாமா யா ஷேக்? – ஆபிதீன்
***
மஜீத் said,
12/03/2012 இல் 14:49
கனிவான பார்வையோடு, வசீகரச் சிரிப்போடு, சாந்தமான அரபி… ப்ளாக்&ஒய்ட்லயே நிறைய, பேசுகிறார்.
காதர்பாய் நெனச்சா கலர் காப்பியும் கிடைக்க வாய்ப்பிருக்கு…..
பி.கு:
100 திர்ஹம்தான்னு ஆர்டர் நிறைய வரப்போகுது நானா.
(அதனால என்ன? பஜார்ல ஸ்டேஷனரி கடை வச்சிருக்கீங்களான்னு கேட்டா போகுது- AB)
abedheen said,
12/03/2012 இல் 15:27
மஜீத், இன்னும் 4தான் பாக்கி என்று மீண்டும் பயமுறுத்துகிறது வேர்ட்பிரஸ். எதுவரை போ…குமோ அதுவரை போடலாம்! அப்புறம்.. 1986ன் நூறு ரியால் கணக்கு இப்ப சரிவருமா? அப்பாகடை தோசைக்கே இப்ப பத்தாது!
எம் அப்துல் காதர் said,
12/03/2012 இல் 17:47
இதை எங்கிருந்து தூசி தட்டி எடுத்தியும்.
// நல்ல மனுசன் // என்று யாரயுமே நீம்பர் சொல்ல மாட்டியுமே! எல்லோருமே ‘பேயன்’ தானே உமது அகராதியில். அது தான் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.
// காதர்பாய் நெனச்சா கலர் காப்பியும் கிடைக்க வாய்ப்பிருக்கு…..//
‘பிரஷ் + பெயிண்ட்’ எல்லாமே ஆபிதீனுக்கு அத்துப்படி
நானா!!
தாஜ் said,
13/03/2012 இல் 19:06
துபாய்
இளவரசரை வரையுங்கள்.
சிம்மாசம் கிட்டும்.
திருமண தினத்திற்கு….
வாழ்த்தோ வாழ்த்து!.
நல்ல இருங்க ஆபிதீன்.
-தாஜ்