கஃபா உள்ளே… – ஜபருல்லாஹ் கவிதை

‘காணக் கண் கோடி வேண்டும் கஹ்பாவை‘   என்று பாடுவதற்கு முன்பு கவிஞர் ஜபருல்லா எழுதிய வரிகளை கவனமாக வாசித்துவிடுங்கள். கருத்துணராமல் கல்லெறிய வேண்டாம். வேறொரு முக்கிய விஷயம். ஜபருல்லாநானாவின் அன்புத் தாயார் நேற்று முன் தினம் (3/1/2012) மௌத்’தாகி விட்டார்கள் (இன்னாலில்லாஹி…). கண்ணீருடன் இருக்கும் அவருக்கு உங்கள் அனுதாபங்களையும் தெரிவிக்கலாம். நன்றி.

***

கஃபா உள்ளே…

கஃபா உள்ளே
மூன்று தூண்கள்
இருக்கின்றன
என்கிறார் ஒருவர்.

அவை –
பெண் கடவுள்கள்
என்கிறார் ஒருவர்.

அங்கே
அல்லாஹ் இல்லை
ஆதம்தான் இருக்கிறார்
என்கிறார் இன்னொருவர்.

அல்லாஹ்வுக்குத்தான்  தெரியும்!

***

நன்றி : இஜட். ஜபருல்லாஹ்  | Cell :  0091 9842394119

4 பின்னூட்டங்கள்

 1. 05/01/2012 இல் 11:09

  Inna Lillaahi Wa Inna Ilaihi Raajiwoon

  All His Poetry -are the best..!

 2. 05/01/2012 இல் 12:16

  இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

  தாயாருக்கு கப்ரிலும் நானாவுக்கு கல்பிலும் நிறைவான அமைதி வழங்க இறைவனை இறைஞ்சுகின்றேன்.

 3. எஸ்.எல்.எம். ஹனீபா said,

  08/01/2012 இல் 07:03

  ஜபருல்லாஹ் நானாவுக்கு, உங்கள் தாயாரின் மண்ணறையை அல்லாஹ் அலங்கரிப்பானாக. அவரின் பாவங்களை மன்னித்து நம்மையும் மன்னிப்பானாக. உங்களுக்கு அமைதியையும் ஆறுதலையும் அல்லாஹ்தான் அருள வேண்டும். கஃபா பற்றிய உங்கள் கவிதையை புரிந்து கொள்ளும் ஆற்றல் எனக்கில்லை என்றே நம்புகிறேன்.

  அன்புடன்
  எஸ்.எல்.எம். ஹனீபா

 4. 10/01/2012 இல் 18:44

  அஸ்ஸலாமு அலைக்கும்
  அன்பின் சகோதர் ஜபருல்லாஹ் அவர்களுக்கு,

  தங்களின் தயாரின் மரணம் எங்களின் கண்களையும் பனிக்கச் செய்து விட்டது. ஒரு தாயின் இழப்பு என்ன என்பதை ஒரு குழந்தையாக நாம் யாவரும் அறிவோம். இறைவன் உங்களின் அந்த உத்தம தாய்க்கு தனது ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சுவர்கத்தை வழங்குவானாக என்று நாமும் பிராத்திக்கின்றோம்.

  வஸ்ஸலாம்
  நிர்வாகம்- அகமியம் இணையத்தளம்
  லண்டன் மற்றும் இலங்கை


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s