நண்டுப்பேன் – மஜீதின் ‘மருத்துவ’க் கட்டுரை

அன்புள்ள தாஜ், பேசாமல் ஆபிதீன் பக்கங்களை ’ஆபிதீன் பலபட்டறை’ என்று மாற்றிவிடலாமா? – ஆபிதீன்

***

நண்டுப்பேன்

மஜீத்

நண்பர் M. அப்துல்காதர் எப்பப் பாத்தாலும் எனக்கு “ஹாரிபிள்” வேணும், அதுவும் இப்பவே வேணும்னு ஆபிதீன்ட்ட ஒரே அடம். ஆனா நான் இதுக்கெல்லாம் மசியலை. அதுக்குக் காரணமும் அவுருதான். பின்னே என்னங்க? ஹமீது ஜாஃபர் நானாவோட மருத்துவக் கட்டுரைக்கு அவர் எழுதுன பாராட்டு என்னய பொரட்டிப் போட்ருச்சு. //மீண்டும் ஒரு மருத்துவ கட்டுரை நானாவிடமிருந்து….., அல்ஹம்துலில்லாஹ், பிரமிப்பாய் இருக்கிறது. நிறைய எழுத அல்லாஹ் நானாவுக்கு நீடித்த ஆயுளை தருவானாக!! ஆமீன்.//

ஜாஃபர் நானா திறமைக்கு அது சாதாரணம்தான். என் திறமைக்கு அதெல்லாம் நெனச்சுக்கூட பாக்கமுடியாது. இருந்தாலும் பாருங்க, இது மாதிரி நம்மளும் ஒரு பாராட்டு வாங்குனா எப்பிடி இருக்கும்னும் ஒரு கற்பனை, நம்மள சாய்ச்சுருச்சு.

ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டைம்பாங்கள்ல? அந்த மாதிரி, பொன்ன வக்கிற இடத்துல ’பு’வை வச்சுப்பாப்போமேன்னு துணிஞ்சிட்டேன்.
நம்ம தகுதிக்கு ஒரு மருத்துவக் கட்டுரை எழுதியே ஆகனும்னு ஒரே அரிப்பு.

அடடே, அரிப்பைப் பத்தியே எழுதுனா என்ன? சரி…. எழுதிடலாம்.

பாருங்க சார்.. இந்த அரிப்பு இருக்குதே…..(அடச்சே! என்ன இது? வாரச்சந்தையில லேகியம் விக்கிறவன் மாதிரி… ஆரம்பமே சரியில்லயே? மாத்திரலாம்)

சில நேரங்கள்ல சிலபேருக்கு இடம் பொருள் ஏவல் இல்லாம அரிப்பெடுக்கும். அவுங்க சொரிய முடியாம தவிக்கிறதப் பாத்தா பாவமா இருக்கும். இதுக்கெல்லாம் காரணம் சிலசமயம் ஒருவிதப் ‘பேன்’கூட காரணமா இருக்கலாம். அதுக்குப் பேரு ‘நண்டுப்பேன்’. ஏன்னா பாக்குறதுக்கு நண்டுமாதிரி இருக்கும்- படத்தைப் பாருங்க…… (ரொம்பச் சின்னதா இருக்கும். மைக்ராஸ்கோப்புலதான் நல்லா தெரியும்)


  
Pthirus pubis

(அது இருக்கிற இடத்தை வச்சு, நீங்களா ஒருபேரை வச்சுக்கக்கூடாது, சொல்லிபுட்டேன்)

‘பேன்’னு சொன்னாலே மயிர் இருக்கிற இடத்துலதான் அட்டாக் பண்ணும். தலைப்பேன் தலைல இருக்கிற மயிர்ல அட்டாக் பண்றமாதிரி, இது அட்டாக் பண்ற இடம்: ஆம்பள பொம்பளகளோட மயிர் இருக்குற ’மத்த’ இடங்கள். முதல்ல அரிப்புதான் வரும். அதோட எச்சம் நமக்கு ஒத்துக்காம வர்ற அலர்ஜிதான் காரணம். அப்புறம் ‘ஈர்’ நிறையா உருவாகி நம்மள படுத்திரும். (ஆமா, ஈரைப் பேனாக்கி, பேனைப்………………………..)

இதுக்கு permethrin 1% cream rinse and pyrethrins  இந்தமாதிரி மருந்தெல்லாம் இருக்கு. ஸ்பெஷல் ஷாம்புகூட இருக்கு- Lindane shampoo (1%). ஆனா எதுவா இருந்தாலும் நீங்களா வைத்தியம் பாத்துக்கக் கூடாது. இது இருக்கிறமாதிரி சந்தேகம் வந்துச்சுன்னா (இனிமே வராம இருந்துரும்???) நீங்க ஒடனே ஒரு ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டுக்கிட்டப் போய்த்தான் ‘காமிக்கணும்’

தலைப்பேன் மாதிரியே இதுவும் கூடப் “படுக்கிறவங்களு” க்கெல்லாம் பரவிரும். இதுக்கு ரொம்பப் புடிச்ச இடம் “அது”தான்னாலும், மயிர் இருக்கிற எல்லா இடங்கள்லயும் இது உக்காந்துக்கிரும். ஆம்பளைகளோட “கம்புக்கூடு”, மயிரு இருக்கிற வயிறு இதெல்லாம்கூட இதுக்கு வசதியான எடந்தான். ஈரு வைக்கிறதுக்கு, இந்த மாதிரி:


 
Pubic lice in genital area

 
 
Pubic lice on abdomen

அதெல்லாம்விடப் பெரிய பிரச்சினைன்னு நான் நெனக்கிறது… கண் இமை, மீசை, தாடிலயெல்லாங்கூடப் பரவிருமாம். நான் கொஞ்சம் எமோஷனல் டைப்புல்ல? அதான் நம்ம நண்பர்கள்ல யார் யாருக்கு மீசை-தாடில்லாம் இருக்கு? அவுகள்ள யார்யார் ரொம்ப “வேகமான” ஆளுகன்னு ஒரே யோசனையும் கவலையுமா இருக்கு….

இப்டித்தான் நான்  ஷூ பிரஷ் ன்னு ஒரு சிரிப்புக்கதை (அதுவும் மயிர் சம்பந்தப்பட்டதுதான் 🙂 🙂 ) எழுதப்போக ஒரு வாசகர் ‘மொஹத்தை’ வச்சுக்கிருவேன்னு சொல்லி உணர்ச்சிவசப்பட்டுட்டார். அதெல்லாம் நினச்சு எனக்கு ஒரே கவலை 😦 😦 .
 
ஒரு எச்சரிக்கை: இதைப் படிச்சதுக்கு அப்புறமா யாரும் யாரையும் தேவையில்லாம சந்தேகப்படக்கூடாது ஆமா. யாரவது தாடிக்குள்ள விரலைவிட்டு சொறிஞ்சா உடனே “அதுவா” இருக்குமோ? இவரு அப்புடி இருந்திருப்பாரோ?ன்னு யோசனையெல்லாம் பண்ணக்கூடாது. சொல்லிப்புட்டேன் ஆமா…… எதுக்குச் சொல்றேன்னா, 2% அல்லது 2.5% ஆளுங்களுக்குதான் இது இருக்காம். எல்லாரையும் சந்தேகப்படக்கூடாதுல்ல?

ஆஹா, முக்கியமான விசயத்தை மறந்துட்டேன் பாருங்க…… மருத்துவக்கட்டுரைன்னா, ரெஃபரன்ஸ் லிஸ்ட் குடுக்கணும்ல? அதாங்க ”அடி”க்குறிப்பு…அடியில் கண்ட எல்லாமே நான் சொன்னது இல்லங்க.. விக்கிலீக்ஸ்ல, அடச்சே, விக்கிப்பீடியாவுல இருக்குங்க…

Notes:

  1. ^ Rapini, Ronald P.; Bolognia, Jean L.; Jorizzo, Joseph L. (2007). Dermatology: 2-Volume Set. St. Louis: Mosby. ISBN 1-4160-2999-0.
  2. ^ Weiss RA (10 February 2009). “Apes, lice and prehistory”. J Biol 8 (2): 20. doi:10.1186/jbiol114. PMC 2687769. PMID 19232074. http://www.pubmedcentral.nih.gov/articlerender.fcgi?tool=pmcentrez&artid=2687769.
  3. ^ Manjunatha NP, Jayamanne GR, Desai SP, Moss TR, Lalik J, Woodland A (June 2006). “Pediculosis pubis: presentation to ophthalmologist as pthriasis palpebrarum associated with corneal epithelial keratitis”. Int J STD AIDS 17 (6): 424–6. doi:10.1258/095646206777323445. PMID 16734970. http://ijsa.rsmjournals.com/cgi/pmidlookup?view=long&pmid=16734970.
  4. ^ Klaus S, Shvil Y, Mumcuoglu KY (March 1994). “Generalized infestation of a 3½-year-old girl with the pubic louse”. Pediatr Dermatol 11 (1): 26–8. doi:10.1111/j.1525-1470.1994.tb00068.x. PMID 8170844.
  5. ^ Varela JA, Otero L, Espinosa E, Sánchez C, Junquera ML, Vázquez F (April 2003). “Phthirus pubis in a sexually transmitted diseases unit: a study of 14 years”. Sex Transm Dis 30 (4): 292–6. doi:10.1097/00007435-200304000-00004. PMID 12671547. http://meta.wkhealth.com/pt/pt-core/template-journal/lwwgateway/media/landingpage.htm?issn=0148-5717&volume=30&issue=4&spage=292.
  6. ^ Commission for Environmental Cooperation. North American Regional Action Plan (NARAP) on lindane and other hexachlorocyclohexane (HCH) isomers. November 30, 2006. North American Commission for Environmental Cooperation
  7. ^ a b Lindane shampoo, USP, 1% prescribing information. Updated March 28, 2003.
  8. ^ (FDA). Lindane Post Marketing Safety Review (PDF). Posted 2003.
  9. ^ Workowski KA, Berman SM (August 2006). Ectoparasitic infections. “Sexually transmitted diseases treatment guidelines, 2006”. MMWR Recomm Rep 55 (RR–11): 79–80. PMID 16888612. http://www.cdc.gov/mmwr/preview/mmwrhtml/rr5511a1.htm.

10. ^ Anderson AL, Chaney E (February 2009). “Pubic lice (Pthirus pubis): history, biology and treatment vs. knowledge and beliefs of US college students”. Int J Environ Res Public Health 6 (2): 592–600. doi:10.3390/ijerph6020592. PMC 2672365. PMID 19440402. http://www.pubmedcentral.nih.gov/articlerender.fcgi?tool=pmcentrez&artid=2672365.

***

நன்றி : மஜீத் | அரிப்புக்கு :   amjeed6167@yahoo.com

6 பின்னூட்டங்கள்

  1. தாஜ் said,

    18/12/2011 இல் 15:47

    அன்புள்ள
    ஆபிதீன்…

    மஜீதின்
    எழுத்தும் நடையும்
    அலாதியானது.
    அவரது வட்டார வழக்கை பின்னிப் பிணைத்தால்
    நடை இன்னும் அமர்க்களப்படும் என்பது
    என் எண்ணம்.

    இப்படி
    நேரம் போக்கும் எழுத்தை எழுதாமல்
    அவரது தந்தையின் நண்பர் குறித்து
    முன்பு எழுதிய
    தகவல் சார்ந்த அவண எழுத்தை
    அவர் மீண்டும் தொடங்கணும்

    இப்படித்தான் எழுதுவேன் என்று
    அடம் பிடித்தால்…
    ஆண்மை லேகியம் பற்றிய
    மருத்துவக் குறிப்புகளுடன்
    ஓர் கட்டுரையை எழுதட்டும்.
    என்னையும் சேர்த்து
    சோர்ந்திருக்கும் நம் வாசகர்களுக்கு
    அது பயனாக இருக்கும்.
    –தாஜ்

  2. 18/12/2011 இல் 18:37

    மஜீது பாய்…

    மிஞ்சிட்டீங்க, அப்பப்பா.. எவ்வளவு தகவல், ‘பொன்’ – ‘பு’ நல்ல ஒப்பீடு, ஆதாரங்கள்.

    அது சரி வெளியெ அரிச்சா சொறிஞ்சிக்கலாம், சில பேருக்கு உள்ளே அரிக்குமே அதுக்கு…?

    மகுடி வச்சு ஊதினாக்கூட அசையாதவங்களுக்கு லேகியம்லாம் செல்லாது, அதுக்கு ஒரே மருந்து, சிம்பு வச்சுக் கட்டணும்.

  3. 18/12/2011 இல் 19:29

    பின்னூட்டத்தப் பார்த்திட்டு ‘சிம்பு’ ன்னா என்னாண்டு போன்லெ கேட்டாங்க, அர்த்தம் தெரியாதவங்களுக்கு சிரமம் வேணாம்.

    சிம்பு: மூங்கில் பிளாச்சு; முறிந்த எலும்பை சேர்த்து வைத்தியர் சிம்புவைத்துக் கட்டினார்.

    அது சரி..
    எங்க பக்கம் பசங்க பீத்த பு.. ; பேன் பாத்த பு.. ண்டு திட்டுவானுவ,, அந்த பேன்தானே இது மஜீது பாய்

    • 19/12/2011 இல் 14:07

      பொதுவாவே, கெட்டவார்த்தை, ஆபாசமா பேசுறது இதெல்லாம் (உங்களுக்கு மாதிரியே) எனக்கும் பிடிக்காது;

      அதனாலெ, இது அந்தப்பேன்தானான்னு எனக்குச் சரியாத் தெரியல நானா;

  4. 19/12/2011 இல் 09:59

    மஜீதின் அரிப்புத்தாங்க முடியல்ல.அவர் அரிப்பு படிச்ச பின்பு அங்க இஞ்ச கைய கொண்டு போரண்டா அங்கயும் இங்கயும் திரும்பி பார்க்கனும் போல இருக்கு.இந்தப்பேன் னுக்கு வந்த கொடுப்பினை என்ன தவம் செய்தனவோ

  5. எஸ்.எல்.எம். ஹனீபா said,

    19/12/2011 இல் 15:53

    மஜீத்,

    நாம எல்லாரும் சேர்ந்து ஆப்தீன் பக்கங்கள நண்டுப்பேனாட்டம் கடிச்சிக் குதறிடுவோம் போலாந்தெரியுது. எல்லாவிதமான நோய்களுக்கும் ஆபிதீன் பக்கம் அருமருந்தாக்கும். தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s