எது ஹதீஸ்? – ’புதிய’ நினைவூட்டல்

நாளை மறுநாள் – அருட்கொடையாளர் வரிசையில் ஒன்பதாவதாக – வானவியலாளரும், கணிதமேதையுமான அல்-பத்தானி பற்றிய பதிவு வரும் , ஹமீதுஜாஃபரின் எழுத்தில், இன்ஷா அல்லாஹ். அதற்கு முன்,  எதைக்கெடுத்தாலும் – மன்னிக்கவும்-  எதற்கெடுத்தாலும் ஹதீஸ் சொல்பவர்களுக்கு இந்தப் பதிவு. 

’ஹதீஸ்கள் வேண்டுமா?’ என்று நிறைய விவாதங்கள் நடக்கின்றன..  ’நபி(ஸல்) அவர்கள் தெளிவாகவே தனது இறுதிப் பேருரையில் குறிப்பிட்டுள்ளார்கள்:: “நான் இரண்டை விட்டுச்செல்கிறேன், அவற்றைப் பற்றிக்கொள்ளும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறமாட்டீர்கள், ஒன்று இறைமறை குர்ஆன். மற்றது என் வழிமுறை” என்று நினைவுபடுத்துகிறார் சகோதரர் இப்னுஹம்துன். நல்லது, முந்தாநாள் சாப்பிட்ட சாப்பாடே சரியாக நினைவுவராதபோது நபி(ஸல்) அவர்கள் இறந்து 200 வருடங்களுக்குப் பிறகு தொகுக்கப்பட்ட ஹதீஸ்களில் எது சரியானது என்ற குழப்பம் சில பேருக்கும் வரலாம். ‘ஆபிதீன் ஒரு முட்டாள்’ என்ற உண்மையை ஒருவரிடம் சொன்னால் அது அப்படியே மாறிமாறிப் போய் பத்தாவது ஆளிடம் செல்லும்போது ‘ஆபிதீன் ஒரு புத்திசாலி’ என்று பயங்கரமான பொய்யாகப் போகிறது, இல்லையா? இந்தலெட்சணத்தில் , ‘நான் சொல்வதுதான் சரி’ என்று ஒவ்வொருகுழுவும் முரண்டுபிடித்துக்கொண்டு அடித்துக்கொண்டால் எப்படி சரி? சண்டை வேண்டாம் சகோதரர்களே, ஆபிதீன் முட்டாள்தான்! திருப்தியா?

ஆமா…, தனக்கு அருளப்பட்டது மட்டுமே உண்மை என்று நினைத்துக்கொண்டு பிற மதத்தைச் சார்ந்த சகோதரர்களுக்கு புத்தி சொல்லப் புறப்பட்டுவிடுவது நியாயம்தானா? நேற்று ஷார்ஜா வந்து இறங்கிய நண்பன் ஹமீது , திட்டச்சேரி-கொந்தையில் நடந்து தகவலைச் சொன்னான். ’ஆஹா பக்கங்கள்’ நண்பர் காதர் ‘ஏஹே பக்கங்கள்’ என்று ஆரம்பித்து எகிற வேண்டிய செய்தி.  ஐயப்ப பக்தர்களுக்கு ’அட்வைஸ்’ செய்தார்களாம் ’ஜாக்’  சகோதரர்கள் அங்கே. இன்னும் நோட்டீஸ் கிடைக்கவில்லை.  சுட்டி மட்டும் கிடைத்தது.  இதெல்லாம் என்ன மாதிரி மனநிலை? ’நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா ; அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா ; அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா’  என்பான் கண்ணதாசன் (கண்ணதாசன் பற்றிய பதிவு அடுத்து வருகிறதாம்!).

இருக்கிற குழுக்கள் போதாதென்று இன்னொரு விசேசமான பிரிவு. இவர்களுக்கு குர்ஆன் மட்டுமே போதும்!

C.S. ரஃபியுத்தீன் ஆசிரியராக இருந்த ’புதிய நினைவூட்டல்’ மாத இதழிலிருந்து (டிசம்பர் 2000) பதிவிடுகிறேன். குர்ஆன் மட்டுமே பின்பற்றவேண்டிய ஒரே ஹதீஸ் என்று சொல்லும் பிரிவைச் சார்ந்தவர் ஆசிரியர் என்று தெரிகிறது. ஒரு பெண்ணின் ஒரு விரல் வெட்டப்பட்டல் 10 ஒட்டகங்கள்; இரு விரல்கள் வெட்டப்பட்டால் 20 ஒட்டகங்கள்; மூன்று விரல்கள் வெட்டப்பட்டால் 30 ஒட்டகங்கள்; ஆனால் நான்கு விரல்கள் வெட்டப்பட்டால் 20 ஒட்டகங்கள் மட்டும் கொடுத்தால் போதும் போன்ற ’கணித அற்புதத்தை’ (இமாம் மாலிக் எழுதிய முஅத்தாவிலும் (43/11) இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் எழுதிய முஸ்னதிலும் ( 2/182) இந்த அற்புதம் இருக்கிறதாம்) கிண்டலடிக்கிறார் ஆசிரியர். இப்போது இந்த பத்திரிக்கை வருகிறதா என்று தெரியவில்லை. ஆசிரியர் இருக்கிறாரா என்றும். நினைவூட்டுங்கள்.

**

’நீங்கள் இறையச்சமுடையவர்களா? படியுங்கள்! சிந்தியுங்கள்!’ என்று ஹதீஸ்களின் உண்மை நிலையை விளக்குகிறார் ஆசிரியர். அவர்தான் கட்டுரை எழுதியிருக்க வேண்டும். நபி இறந்த பின் 200 வருடங்கள் கழித்து ஹதீஸ்களின் ஆசிரியரான புகாரியின் வாழ்வில் ஒரு நாளாம்.. ’உங்களுக்கு ஏதேனும் ஹதீஸ்கள் தெரியுமா?’ என்ற (புகாரியின்) கேள்விக்கு ஒருவரிடமிருந்து வந்த ஒப்புயர்வற்ற பதில் இது

’ஆம்! என் தந்தை கூற நான் கேட்டிருக்கிறேன், இறைவன் அவருக்கு அருள் செய்வாராக. அவர் தன்  பெரிய அண்ணனிடம் கேட்டதாகக் கூறினார், இறைவன் அவருக்கு அருள் செய்வாராக. அவர் தன் பாட்டியாருடன் அமர்ந்திருந்தபோது பாட்டியார் கூறினார், இறைவன் அவருக்கு அருள் செய்வாராக. அவர் தன் பெரிய மாமாவுடன் அமர்ந்து உணவருந்திக்கொண்டிருக்கையில் அவர் கூறினார். அவருடைய தாய்வழிப் பாட்டனாருக்கு இமாம் அஹ்மத் பின் முஹம்மத் அல்யமானியைத் தெரியும் என்றும் , இறைவன் அவருக்கு அருள் செய்வாராக,  அவர் தன் மூத்த மாமா , இறைவன் அவருக்கு அருள் செய்வாராக , நபித்தோழர் உமர் இப்னு காலித் அல்யமானியைச் சந்திக்கும்போது , இறைவன் அவருக்கு அருள் செய்யட்டும், அவர் கூறினார். முஹம்மத் நபி மீது சாந்தி நிலவட்டும், என்னிடம் கூறினார்…..’

அவ்வளவுதான் கிண்டல். இதற்கு உத்மான் பின் அலி என்பவரின் கார்ட்டூன் வேறு.

நல்லவேளையாக, ‘ஆனால் அவர்களின் பெரும்பாலோர் யூகங்களேயன்றி பின்பற்றவில்லை. மேலும் யூகங்கள், உண்மைக்கு மாற்றாக இருக்க இயலாது. நிச்சயமாக இறைவன் அவர்கள் செய்பவற்றையெல்லாம் முற்றிலும் அறிந்தவராக இருக்கிறார்’ என்ற குர்ஆன் வசனத்துடன் (10:36) முடித்திருக்கிறார்கள். (அல்லாஹ்) ‘இருக்கிறார்’ என்று சொல்வது ரஷாத் கலீபா வின் குர்-ஆன் மொழிபெயர்ப்பு போலும். (அல்லாஹ்) இருக்கிறான் என்று மரியாதையாக – அளவற்ற பிரியம்தான் காரணம் – சொல்வதே இஸ்லாமியர்களின் இயல்பு. வீட்டில் ஏதேனும் கெடுதல் நிகழ்ந்தால் ‘ஒரு கழிச்சல்ல போற அல்லாஹ்வுக்கு கண் இல்லையா? பாக்க மாட்டேங்குறானே…’ என்று கத்தும் உம்மாக்கள் , ரசூல் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லத்தின் பெயரைக் கேட்டால் அவ்வளவுதான். நெகிழ்ந்து கண்ணீர் விடுவார்கள்.

போதும்.  என் மேல் கோபம் வேண்டாம்.  இதழைக் கொடுத்த ஜபருல்லாநானாதான் ’நினைவூட்டலை’ப் போட்டியுமாங்னி?’ என்று நினைவூட்டினார். நினைவூட்டுகிறேன்; இறைவன் அவருக்கு அருள் செய்வாராக!

6 பின்னூட்டங்கள்

 1. 10/12/2011 இல் 22:01

  //நிச்சயமாக இறைவன் அவர்கள் செய்பவற்றையெல்லாம் முற்றிலும் அறிந்தவராக இருக்கிறார்’ //

  என்னங்க இது இறைவன் என்று மருவாதெ இல்லாமெ, “இறைவர்” அவர்கள்ண்டுதான் சொல்லனும்.

  இவர்களுக்கா அல்லா ஹைடெக் நரகம் ஒன்றை தயார் செய்து வைத்துள்ளான். அதில் நெருப்பு இருக்காது லேசர் பீம்தான் இருக்கும்

 2. தாஜ் said,

  11/12/2011 இல் 01:16

  என்ன சொல்றதுன்னே தெரியுல.
  வருகையை மட்டும்
  பதிவு செய்தவனாக….
  -தாஜ்

 3. 11/12/2011 இல் 11:31

  நீங்களும் ஒரு மார்க்கமாத்தான் திரியுறீங்க தம்பி(வாப்பா) :-))

 4. நாகூர் ரூமி said,

  12/12/2011 இல் 22:26

  உனக்கு உன் மார்க்கம் எனக்கு என் மார்க்கம். என்ன மூர்க்கமாக பார்க்கிறீர்கள்?!

 5. Rashid said,

  16/12/2011 இல் 12:05

  //உனக்கு உன் மார்க்கம் எனக்கு என் மார்க்கம்.//
  இதைவிட முத்தாய்ப்பாக என்ன சொல்லிவிட முடியும் இவர்களுடைய உளறல்கலுக்கும்,அபதங்கலுக்கும்…..
  மேலும் அவரே கூறிவிட்டார் //சகோதரர்களே, ஆபிதீன் முட்டாள்தான்! //என்று!!அல்ஹம்துல்லிலாஹ்!!
  Rashid


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s