‘முழுசா படிக்கணும்னா சந்தாதாரர் ஆவணுமாம்ல!’ என்ற ஆதங்கத்துடன் தம்பி பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்) மெயில் அனுப்பியிருந்தார். அப்டிலாம் ஆவவேணாம், ஸ்கேன் செய்து இங்கே போட்டாப் போச்சு! குறிப்பை படித்துவிட்டு இமேஜை க்ளிக் செய்து பாருங்கள். ’காதில் விழுந்த கானங்கள்’ விகடன் தாத்தாவின் காதில் விழுந்து விட்டது போல…
***
ஆனந்த விகடன் 30.11.2011 இணைப்பிலிருந்து…
’நாகூர் என்றால் எல்லோருக்கும் தர்ஹாவும் ஹனீபாவும் நினைவுக்கு வருவார்கள். இன்னொருவரும் இருக்கிறார். அவர் நாகூர் சலீம்! ‘மெட்டு கொடுத்தவுடன் திறமான வார்த்தைகளைக் கொட்டிக்கொடுக்கும் கவி அருவி’ என்று கவிஞர் மு.மேத்தாவால் பாராட்டப்பட்டவர். பாப்பாக்குடி, முத்துப்பேட்டை தர்ஹாக்களின் ஆஸ்தான கவிஞர். நாகூர் ஹனீபா, இறையன்பன் குத்தூஸ் ஆகியோரின் அவைக்களப் புலவர் சலீம்! இதுவரை 7,000 பாடல்களை எழுதியவர். நாகூரில் தனது மகன், மகள்களோடு வசிக்கும் சலீமுக்கு, இப்போது வயது 76. ஆனால், 26 வயது உற்சாகத்துடன் பேசுகிறார். ”15 வயதில் நாடகங்களை எழுதி நடத்தத் தொடங்கினேன். அப்போது ‘சந்தர்ப்பம்’ என்னும் நாடகத்தில் இடம்பெறும் ஒரு பாட லைப் பாட நாகூர் ஹனீபாவிடம் கேட்டபோது, ‘கண்ட பேர் பாடல்களை நான் பாடுவது இல்லை’ என்று சொல்லிவிட்டார். அதே ஹனீபா ஒரு வருடக் காலத்துக்குள் என் வீட்டு கதவைத் தட்டி என்னை அழைத்தார். அப்போது. . .’
நன்றி : ஆனந்த விகடன் மற்றும் அடைமழை!
***
போனஸ் : தீனோரே ஞாயமா? மாறலாமா? (சலீம்மாமாவின் பாடல் , ஹனீபா – ராணியின் குரலில்) :
nagoreismail786 said,
26/11/2011 இல் 14:08
kadugu siruthaalum kaaram kuraiyaathu – porunthinaal yetruk kollungal
jafar sadiq said,
26/11/2011 இல் 18:32
Engal maama meedhu alavu kandandha piriyam vaithulleergal. Adikkadi padhivu veliyittukkonde irukkireergal. Mikka nanadri.
NAGORE DEEN, SINGAPORE said,
27/11/2011 இல் 22:17
“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்” என்று ஏழு வார்த்தைகளில் திருவள்ளுவர் சொன்னக் கருத்தை, நான்கு வார்த்தைகளில் “அடுத்தவனை கெடுத்தவனை அடுத்துவினை அழிக்கும்” என்று எழுதியப் பெருமை எங்கள் சலீம் மாமாவுக்கு மட்டுமே உரித்தானது. என்னைப் பொறுத்தவரை, எங்கள் சலீம் மாமாதான் “நாகூரின் தாகூர்”.
jafar sadiq said,
28/11/2011 இல் 11:36
Deen. Comment ellaam azhagaaga ezhudhugireergal.
NAGORE DEEN SINGAPORE said,
28/11/2011 இல் 15:39
Thank you Sella Nana.
அறபாத் said,
28/11/2011 இல் 11:54
தங்கை அனீகா நிலோபருக்கு என் இனிய வாழ்த்துக்கள்.
அன்புடன்
அறபாத்