’காலத்தை வென்ற கவிதைகள்’ வரிசையில் புரட்சிக் கமாலின் இன்னொரு கவிதையை பதிவிடுகிறேன். அனுப்பிய ஹனீபாக்காவுக்கு நன்றிகள். தம்பி ஸபீர் ஹாபிஸின் சிறுகதையை அடுத்து பதிவிட வேண்டும். போற போக்க பாத்தா சிலோன்லெ செட்டிலாயிடுவேன் போலக்கிது!
***
நாளை வருவான் ஒரு மனிதன்!
ஞாலத் திசைகள் கோல மிட
நாளை வருவான் ஒரு மனிதன்!
உள்ளத் தெளிவின் நிலவினி லே…
ஒளிரும் நினைவாம் சுடரினி லே…
வெள்ளப் புனலின் கலப்பினி லே…
விடியற் பரிதி உருவினி லே…
நாளை வருவான் ஒரு மனிதன்!
காலச் சுழலின் சுழிகளி லே,
கலந்து சுழலும் மேதையரின் –
கோலக் கனவின் கருக்குழியில்
கோடி காலம் தவ மிருந்தோன்…
நாளை வருவான் ஒரு மனிதன்!
மா நிலத்துக் கழனி யினை
மாற்றி யுழக்கி வரப்பிட்டு
ஏணி பெற்ற வாழ்க்கை யினை
எருவிட் டாக்கும் நல்லுழவன்…
நாளை வருவான் ஒரு மனிதன்!
சாதி ஒன்றாய் நிற மொன்றாய்
சமயம் ஒன்றாய் மொழி ஒன்றாய்
நீதி ஒன்றாய் நிலை ஒன்றாய்
நிறை கண்டாளும் விஞ்ஞானி…
நாளை வருவான் ஒரு மனிதன்!
வானக் கூரைப் பந்தரின்கீழ்
வைய கத்துப் பெரு மனையில்
மானிடத் தின் பிள்ளை களை
மருவி மகவாய் விருந்தோம்ப…
நாளை வருவான் ஒரு மனிதன்!
மஜீத் said,
19/11/2011 இல் 15:03
//போற போக்க பாத்தா சிலோன்லெ செட்டிலாயிடுவேன் போலக்கிது! //
இக்கிம், இக்கிம்…..அஸ்மா காதுல யாராவது இதைப் போட்டு வச்சாத் தேவல.
(எதுக்குச் சொல்றேன்னா, துபாய் சூழ்நிலையும் ரொம்பத் தோதா இருக்கா…..இங்க நிறைய உருப்படிகள் ஏற்கனவே சிலோனுக்குள்ள செட்டில் ஆயிருச்சுகளாக்கும்)
ஸபீர் ஹாபிஸ் said,
19/11/2011 இல் 17:15
வருக ஆபிதீன் நானா, வந்தாரை வாழ வைக்கும் சிலோன் மண்ணுக்கு. உங்கள் வரவு இந்த மண்ணில் புதிய எழுச்சி பாய்ச்சட்டும்.
எஸ்.எல்.எம். ஹனீபா said,
20/11/2011 இல் 19:35
இன்னொருக்கா நாகூருக்குப் போக உடமாட்டீங்க போலயிருக்கு. இந்தக் கதையெல்லாம் கேள்விப்பட்டு அஸ்மா, அந்தப் பென்னம்பெரிய வீட்டுக் கதவ இழுத்துச் சாத்தாம விட்டாப் போதும்.
ஜாபர் நானாவும் வாரியாரும் ரொம்பக் கலாதி. வஹாபிகளுக்குப் பிடிக்குதோ இல்லியோ நானறியேன், எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
60களில் வாரியார் கல்கியில் பக்கம் பக்கமாக எழுதினார். எல்லாவற்றையும் பைண்ட் செய்து வைத்திருக்கிறேன். அடுத்த தடவை நாகூருக்கு வரும் போது, கப்பலில் கொண்டு வருகிறேன்.