பாரதிமணி ஐயாவுக்கு ஒரு பூச்செண்டு

எங்களின் ’எழுத்தும் எண்ணமும்’ குழுமத்தில் தெரிவித்தேன் இப்படி :

என் மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஹனீபாக்கா அவர்களிடமிருந்து இன்று வந்த மெயிலில் குறிப்பிட்டிருந்தார் : ’க.நாசுவின் மருமகன் பாரதிமணியின் கட்டுரைகளோடு (உனக்கு) பரிச்சயமா? மனிசன் தன்னுடைய டில்லி வாழ்வின் கோலங்களை ரொம்ப சுவாரஸ்யமாக சொல்லியிருக்கின்றார். உயிர்மையில் வெளிவந்த கட்டுரைகள் இப்பொழுது நூல் வடிவில் வந்திரு்க்கின்றது’

அந்த குசும்பு புடிச்ச மனுசனோடு பழக்கமில்லை என்று சொல்லலாம் என்று இருக்கிறேன்.

***

’பாட்டையா’ என்று நண்பர் சுகாவால் பிரியமாக அழைக்கப்படும் பாரதிமணி சாரிடமிருந்து உடன் மெயில் வந்தது :

அன்புள்ள ஆபிதீன்:

எனக்கும் அந்தாளெ சுத்தமா பிடிக்காது, பாத்துக்கோ! கெளட்டு மனுசனுக்கு தலயிலருந்து காலு வரெ நாஞ்சில் குசும்பு! சும்மாவே கெடக்கமாட்டங்கான். அந்தாளு எளுதினதிலெ இது புதிசு. படிச்சிட்டியா? தாஜுக்கு அனுப்பிக்கொடுத்தேன்.
சுட்டி இங்கே :  எனக்கு மாமனாராகவும் இருந்த க.நா.சு. — பாரதி மணி

***

மேலுயுள்ள சுட்டியை அழுத்திப் படியுங்கள். கட்டுரைக்கு அவரே கொடுத்த கமெண்ட் எப்படி? மஹா குசும்பு புடிச்சவர், இல்லையா? அது போகட்டும், ’என்னடா இது…  தாத்தாக்களுடன் நம்ம சகவாசம் ஜாஸ்தியாயிடிச்சே..’ என்று முணுமுணுத்துக்கொண்டே முகத்தை கண்ணாடியில் பார்த்தேன். சரிதான்….!

***

மேலும்…

அமிதாப் பச்சனிடம் க.நா.சு. கேட்ட கேள்வி! – பாரதி மணி

பார்வை: பல நேரங்களில் பல மனிதர்கள்/ பாரதி மணி : தாஜ்

பல நேரங்களில் பல மனிதர்கள் – ஸிந்துஜாவின் விமர்சனம்

***

நன்றி : பாரதிமணி ஐயா | bharatimani90@gmail.com

6 பின்னூட்டங்கள்

 1. Bharati Mani said,

  07/09/2011 இல் 16:39

  வயசான காலத்திலெ நம்மளெ சும்மா இருக்க சம்மதிக்கமாட்டாம்போலெ இருக்கிதே!

  யாருலே அவன் நம்மெ தாத்தாண்றவன்? இளுத்திற்று வா! தாத்தாவாம்லே தாத்தா!

  நன்றி….ஆபிதீன்

  பாட்டையா

  • சுகா said,

   07/09/2011 இல் 19:02

   ஆபிதீன்,

   சோலியத்துப் போயி திண்ணைல சாஞ்சு கெடக்குற பாட்டையாக்கள்கிட்டெ பேச்சு குடுத்தா இப்பிடித்தான். இதுவும் சொல்லுவாங்க. இதுக்கு மேலயும் சொல்லுவாங்க.

   சுகா

 2. தாஜ் said,

  07/09/2011 இல் 19:30

  அதானே….
  தாத்தாவாம்லே தாத்தா!
  ஐயா… விடுங்க…
  சொன்னா சொல்லிட்டுப் போகட்டும்.
  அவுங்கள சொல்லியும் தப்பில்லை
  காலமுல்ல
  நம்ம காலைவாறுது!
  *
  ஐயா…
  உங்க புதிய கட்டுரைப் படிச்சி
  பத்து நாளாச்சி.
  மெயில் கூட போட்டேனே!

  *
  ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ குறித்த
  என் விமர்சன கட்டுரை
  திண்ணையின் பக்கங்களில்
  இன்றைக்கும் இருக்கிறது.
  ஆபிதீன் ஏனோ அதனை
  வாசகர்களின் பார்வைக்கு
  வைக்க மறந்துப் போனார்.
  போகட்டும்.
  இதோ:
  http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=61005232&edition_id=20100523&format=html

  ஆபிதீன்…
  பாரதி மணி ஸாரே
  நம்ம பக்கம் பார்க்க(ஆபிதீன் பக்கங்கள்)
  அழைத்து வந்தமைக்கு நன்றி.
  *
  ஐயாவும் இடையிடையே
  இந்தப் பக்கத்திற்கு
  விஜயம் செய்யணும்.
  அப்புறம்…
  ‘டெல்லி கிளாசிக்’ எதனையாவது எழுதணும்.
  குறிப்பாய்…
  தமிழக எம்.பி.களின்
  டெல்லிக் கலாட்டாவை
  நீங்கள் இங்கே எழுத
  நாங்கள் படிக்கணும்.
  நன்றி
  -தாஜ்

 3. 08/09/2011 இல் 09:24

  வருகைதந்த பாட்டையாவுக்கும் , பாட்டையாவை விடாது தொந்தரவு செய்யும் நண்பர் சுகாவுக்கும் நன்றிகள். குழுமத்தில் நீங்கள் இருவரும் சேர்ந்து செய்த குசும்புகளை தனியொரு பதிவாகப் போடுவேன், இன்ஷா அல்லாஹ்.

  தாஜ், அவசரத்தில் உங்கள் திண்ணை பதிவை இணைக்க மறந்து விட்டேன். மன்னியுங்கள். இப்போது சேர்த்து விட்டேன். மீண்டும் மன்னியுங்கள்!

  • தாஜ் said,

   08/09/2011 இல் 10:42

   மன்னிப்பா….
   ஹும்… முடியாது.
   பாரதி மணி ஸாரிடம்
   விவகாரமான
   டில்லி சம்பவ கட்டுரை ஒன்றை பெற்று
   நம் பக்கத்தில் பதிய விடுங்கள்.
   அதுதான் மன்னிப்பு.
   -தாஜ்

   • 09/09/2011 இல் 20:25

    ஆம், பாவமன்னிப்பு!

    (இப்பத்தான் கெடச்சது-
    இண்டெர்நெட்டும்
    கூடவே இடுப்புப்பிடிப்பும்)


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s