வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவுரை அல்லது எச்சரிக்கை

ஆழமான நெற்றிக் காயத்துடன் தளர்ந்து போய்ப் படுத்திருந்த அலியார் (‘அறிவு எனும் நகரத்துக்கு நுழைவாசல்’ என்று ரசூல் (ஸல்) அவர்களால் பாராட்டப்பட்ட அலி இப்னு அபீதாலிப்) தமது வாரிசுகளுக்குக் கொடுத்த அறிவுரை :

“.. கொலை நோக்கத்துடன் நான் வன்மையாகத் தாக்கப்பட்டிருக்கிறேன். இதிலிருந்து நான் பிழைத்துக் கொள்வேனா – இல்லை, இறந்து விடுவேனா? நான் பிழைத்துக் கொண்டாலும் இறந்துவிட்டாலும் (நச்சேற்றிய வாளினால் என்னைத் தாக்கிய) ‘இப்னு முல்ஜம்’ குற்றவாளிதான். இதனால் அவனைத் தண்டிக்கும் உரிமை எனக்கு வருகிறது.

“இன்றைய நாளையேனும் என்னால் தாண்டிச் செல்ல முடியுமா என்று தெரியாத நிலைமையிலிருக்கிற நான் அவனைத் தண்டிக்க முடியாது. எனவே என் உரிமையை நீங்கள் கையில் எடுத்துக் கொள்ளலாம்.

“நன்கு சிந்தனை செய்து பார்த்து முடிவெடுங்கள். அவனை தண்டித்துத்தான் ஆகவேண்டுமா என்று அமைதியோடு நினைத்துப் பாருங்கள். அவனை மன்னித்து விடுகிற மனப்பக்குவம் உங்களுக்கு கிடையாது என்றால் அவனுக்குத் தண்டனை கொடுங்கள். ஆனால் –

“அவன் என்னை எப்படிக் காயப்படுத்தினானோ அப்படித்தான் நீங்கள் அவனைக் காயப்படுத்த வேண்டும். சிறிதளவும் வரம்பை தாண்டிவிடக் கூடாது. சினத்தின் தூண்டுதலால் அவனைக் கட்டிவைத்து சித்திரவதை செய்து விடாதீர்கள். ‘பிறரைக் கடித்துக் குதறுகிற வெறிபிடித்த நாயைக்கூடச் சித்திரவதை செய்யக்கூடாது’ என்று பெருமானார் கூறியிருக்கிறார்கள்.

’ஒரு செய்தியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்: இப்னு முல்ஜமுக்குத் தண்டனை கொடுப்பது – நடந்த ஒன்றை நடக்காத ஒன்றாக மாற்றிவிடாது!

“மிகுந்த சிரமத்துடன் நீண்டநேரம் நான் பேசிவிட்டேன். இப்போது நான் ஒரு தீர்மானத்துக்கு வந்திருக்கிறேன். கவனத்துடன் கேட்டுக் கொள்ளுங்கள். அவனைத் தண்டிக்கும் உரிமை எனக்கு உண்டு என்பது உண்மைதான். ஆனால் –

“அது உரிமைதானே தவிர, கடமை அல்ல! எனவே அவனை மன்னித்து விடுதலை அளிக்கிறேன். நான் இறந்து விட்டால், ‘எங்கள் தலைவர் கொலை செய்யப்பட்டு விட்டார்!’ என்று குரல் எழுப்புவதன் மூலம் புதியதொரு ரத்தக் களரியை உண்டாக்காதீர்கள். நீங்களும் அவனை மன்னித்து விடுங்கள். பிறருக்குத் தெரியாமல் நீங்கள் செய்த குற்றங்களை இறைவன் மன்னித்தருள்வான்!”

***

இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் ‘மின்ஹாஜுல் ஆபிதீன்’ (பக்தர்களின் பாதை) – இரண்டாம் பகுதியிலிருந்து. விரிவுரை : மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்கள்.

***
நன்றி : அஃப்சரா பதிப்பகம்

***

மேலும் பார்க்க (pdf) : 

 யார் இவர்கள் ? – 1  : அலி இப்னு அபீதாலிப்

6 பின்னூட்டங்கள்

 1. 03/09/2011 இல் 12:17

  தன்னை கொலை செய்தவரை மன்னித்த அலி(ரலி) அவர்களின் தன்மை பேராண்மை மிக்கது. அது மட்டுமல்ல அவர்களின் ஆன்மிக உயர்வையும் அது காட்டுகிறது.

  • abedheen said,

   03/09/2011 இல் 12:59

   வருகைக்கு நன்றி. அமீன்பாய். அலி(ரலி)யின் சுருக்கமான வரலாற்றை இப்போது மேலே இணைத்திருக்கிறேன் – pdf கோப்பாக. ஹஜ்ரத் எழுதியது. எதற்கும் சுட்டி இங்கேயும் :

   Click to access ali-ibn-abi-talib.pdf

 2. தாஜ் said,

  03/09/2011 இல் 14:50

  மன்னிக்கனும்….
  தாலிபான்களும்
  முஜாஹிதீன்களும்
  அவர்களது சகோதர் இயக்கங்களும்
  நித்தம்
  அதிர் வேட்டுக்களால்
  எண்ணிக்கையற்ற
  உயிகளை காவு வாங்கி
  வெற்றி உலா வருகிற
  இக்காலக்கட்டத்தில்
  அலி இப்னு அபீதாலிபைப் பற்றி
  சிலாகிக்கின்றீர்கள்.

  சரி… போகட்டும்,
  எல்லா இஸ்லாமிய நாடுகளுமே
  இஸ்லாமிய சட்டத்தை
  தள்ளி வைத்துதான்
  அரசு நடத்துகிறது.
  அங்கே…
  அலி அவர்களின் கூற்றுக்கள் எல்லாம்
  சபையேறுகிறதா என்ன?

  அந்த
  தாலிபான்களுக்கும்
  முஜாஹிதீன்களுக்கும்தான்…
  இந்த அலி அவர்களின் அறிவுரை
  சொல்லப்படுகிறது என்பதே
  உங்கள் கட்சி என்றால்….
  ஒன்றை நீங்கள் யோசிக்க விட்டுவிட்டீர்கள்.
  அவர்களுக்குதான்…
  காதே கிடையாதே!
  -தாஜ்

 3. 03/09/2011 இல் 18:23

  தாஜ் என்ற பெயரில் உள்ளவர்கள் எல்லாம்
  நீங்களாக ஆகிவிடமுடியுமா….?
  அவர்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு,
  இவர்கள் யாரும் ரலியல்லாஹு அன்ஹு அல்லவே..!
  அவர்கள் அறிவுப் பட்டணத்தின் தலைவாசல்,
  இவர்கள் அறிவீனப் பட்டணத்தின் சொந்தக்காரர்கள்..!
  அவர்கள் எல்லாம் நிறைவானவர்கள்,
  இவர்கள் எல்லாமே empty…!
  விட்டுவிடுங்கள் தாஜ்….!!

 4. 03/09/2011 இல் 18:47

  ஹஜ்ரத் அலி (றலி) அவர்கள் தனது மரணத்தின் தருவாயில் அவர்களது வாரிசுகளுக்கு கூறிய அறிவுரைகளை நமது ஹஜ்ரத் அவர்கள் “மகனுக்கு..” என்ற பெயரில் எழுதியது புத்தகமாக வந்தது…

  என்னிடம் இருந்த ஒரு பிரதியை ஒரு நண்பருக்கு (பல ஆண்டுகளுக்கு முன்பு) கொடுத்தேன். அவர் யாருக்கு கொடுத்தாரோ? திரும்பி வரவே இல்லை..

  ஹஜ்ரத் எழுதி இறுதியாக வெளியாகிய சமுதாய நன்மைகளில் – யார் இவர்கள்? – எனும் தனி தலைப்போடு நபித்தோழர்களை பற்றி எழுதினார்கள்.

  இனி வரும் எனது புத்தகங்களில் இது போன்று தொடரும் என்று எழுதியிருந்தார்கள்.

  இறைவனின் நாட்டம் வேறு விதமாக அமைந்து விட்டது.

  நானா, நீங்கள் எழுதி பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்…

 5. kader sulthan said,

  08/10/2011 இல் 22:44

  wonderfu history.. real lesson for human being///

  when i think about such personality, b4 then i am nothing


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s