எப்போது தீரும் இந்த பிறைக்குழப்பம்….? – ஹமீது ஜாஃபர்

கடலில் அலை ஓய்ந்தாலும் ஓயுமே தவிர இந்த குழப்பம் ஓயாது போலிருக்கு. வருசா வருசம் இதே தலைவலி; இரட்டைத் தலைவலி..! மற்ற மாதங்கள் இது இல்லை இந்த ரமலான் வந்தால் ஆரம்பித்துவிடும். “பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள்” என பெருமானார் அவர்கள் சொன்னார்கள். உண்மை, அவர்கள் காலத்தில் தொழில் நுட்பம், தகவல் தொடர்பு இவைகள் கிடையாது. ஒரு செய்தி அனுப்பவேண்டுமானால் ஒரு நம்பகமான ஆள், ஒரு குதிரை, அல்லது ஒட்டகம் இத்தியாதி இவைகள் வேண்டும். ஆனால் இப்போது அப்படி அல்ல, விரல் நுனி-அடுத்த வினாடி பல்லாயிரம் மைல்கள், பல கோடி பேர்களுக்கு அறிவித்துவிட முடியும். இவைகளைக் கடந்து இப்போதும் நாம் அப்படியே இருக்கிறோம் என்றால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

இவ்வருடம் நோன்பு ஆரம்பிப்பதற்கு ஒருவாரம் முன்பே ஆகஸ்ட் முதல் தேதியில் நோன்பு ஆரம்பித்து முப்பதாம் தேதி முடியும், ஆகஸ்ட் 31 பெருநாள் என வானவியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர் என நம்பகத்தனமான செய்தி, பத்திரிக்கைகளில் வந்தது – துபாயில். அது போலவே ஆகஸ்ட் முதல் தேதி நோன்பு ஆரம்பமானது.

சென்ற 21-8-2011-ம் தேதி பத்திரிக்கைச் செய்தியில் , ‘First day of Eid Al Fitr  for 2011 appears to be 31 August to 2011 according to news reports 21 August 2011, but confirmation might not be until the end of Ramadan. Emirates 24-7 reported that The first day of Eid Al Fitr will be on Wednesday, August 31, in most Muslim countries, Wam said, quoting Mohammed Shawkat Awdah, head of Islamic Crescents Observation.’ என மதில்மேல் பூனையாக வெளியிடப்பட்டிருந்தது.

பிறை பார்த்துதான் நோன்பு, பிறை பார்த்துதான் பெருநாள் என்பதுதான் எல்லோருக்கும் தெரியுமே! இப்படி இல்லேன்னா அப்படி, அப்படி இல்லேன்னா இப்படி என்பதற்கு பிறை கமிட்டி எதற்கு, ஆராய்ச்சியாளர் எதற்கு? இப்படி ஒரு வானிலை அறிவிப்பை சொல்லத்தான் வேண்டுமா?

நவீன உலகம், ஹை-டெக் என்றெல்லாம் பேசுகிறோம், விரல் நுனியில் உலகத்தை வைத்திருக்கிறோம், தகவல் தொடர்பில் high speed broad band-ல் உலகத்தையே உலாவி வருகிறோம், மழை வரும், புயல் வரும் அது இத்தனை மைல் வேகத்தில் வீசும் என முன் அறிவிப்பு செய்கிறோம் ஆனால் பிறை மட்டும் அந்தோ பரிதாபம்..!

ஆனால் சந்திரனின் ஒவ்வொரு நாள் அசைவையும் படம்போட்டு விஞ்ஞானம் விளக்குகிறது.

29-8-2011 சந்திர ஓட்டம் இப்படி இருக்கும், இந்தந்த நாடுகளில் பிறை தெரியும் என சொல்கிறது

30-8-2011 சந்திர ஓட்டம் இப்படி இருக்கும், இன்னென்ன நாடுகளில் பிறை தெரியும்  என விளக்குகிறது.

விளக்கி என்ன செய்ய , நுணுக்கமாகக் கணித்து என்ன செய்ய? அதை நாம் நம்பி என்ன செய்ய? தலையில் தொப்பி வைத்து அதன் மேல் பெரிய பேட்டா(தலைப்பாகை) கட்டி மீசையை மழுங்க சிரைத்து பெரிய தாடி வைத்திருக்கும் முல்லா நசுருதீன்கள் நம்பவேண்டுமே! அவர்கள்தானே ஃபத்வா கொடுக்க அங்கீகாரம் பெற்றவர்கள். அவர்கள் கொடுக்கும் ஃபத்வாக்களை ஒரு நாடு அங்கீகரித்துக்கொள்வதை ஏற்றுக்கொள்ளலாம். ஏனென்றால் சரியோ தப்போ ஒட்டு மொத்த சமுதாயமும் அதன் வழி செல்கிறது. ஆனால் அரசனை நம்பி புருசனை கைவிட்டிருக்கும் நம் நாட்டு கதிதான் பரிதாபத்துக்குரியது. தன் வயிற்றுப் பிழைப்புக்காக ஆளுக்கொரு ஜமாத்தை வைத்திருப்பவர்கள் அடிக்கும் கூத்து பெருங்கூத்தாக இருக்கிறது. சவுதியில் பிறை பார்த்தால் அவர்களும் பிறை பார்த்து விட்டார்களாம்.

ஏன்,  சவுதியில் பாங்கு சொல்லி தொழ வைக்கும்போது நீங்களும் பாங்கு சொல்லித் தொழவைக்க வேண்டியதுதானே? அது மட்டும் இருக்கும் ஊரை அனுசரித்துக்கொள்வார்கள்; பிறைக்கு மட்டும் சவுதி..!

இது எங்கே போய் முடிந்திருக்கிறது என்றால்… ஊர் அல்ல, குடும்பமே இரண்டாகப் பிரிந்திருக்கிறது. ஒரே வீட்டில் இரண்டு பெருநாள்; இன்று பிள்ளைகளுக்குப் பெருநாள் என்றால் நாளை பெற்றோருக்குப் பெருநாள். தம்பி கல்யாணத்துக்கு அண்ணன் போகமாட்டான்; அண்ணன் கல்யாணத்துக்கு தங்கச்சிப் போகமாட்டாள். இவர்களுடைய கொள்கையால் அண்ணன் தம்பி, அக்கா தங்கச்சிக்குள் ஜென்மப் பகை ஏற்பட்டு வருகிறது. இப்படி இருந்தால் ஒற்றுமை என்ற கயிற்றை எப்படி பற்றிப் பிடிப்பது?

தீருமா இந்த குழப்பம்? பிடிப்போமா ஒற்றுமைக் கயிற்றை…..?

***

ஹமீது ஜாஃபர்

நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com

***

Visit : http://moonsighting.com/

4 பின்னூட்டங்கள்

 1. தாஜ் said,

  02/09/2011 இல் 11:48

  பிறை குழப்பத்தில் நுழைந்து
  தாடி தலைப்பாகை ஹஜிரத்துகளையும்
  ஊர் நாட்டாண்மைப் பஞ்சாயத்துகளையும் விளாசி
  தௌகீது-தமுமுக வழியாக
  கறித்துக் கொட்டியப்படிக்கு வெளிவந்து
  என்னமோ சொல்ல முயன்றிருக்கும் நா நா..
  படமெல்லாம் போட்டு
  தொடங்கிய கட்டுரையை
  திடுமென முடித்துவிட்டார்.
  குறைந்த பட்சம்
  அவர்,
  சாடியத் தலைகளையாவது
  இன்னும் கொஞ்சம்
  சாடி இருக்கலாம்.
  -தாஜ்

  • 02/09/2011 இல் 19:08

   என்னுடைய இக்கட்டுரை யாரையும் அல்லது எந்த அமைப்பையும் தனிப்பட்டமுறையில் புண்படுத்த அல்ல.

   தௌகீது, சமுதாய ஒற்றுமை என்று வாய்கிழிய கத்திக்கொண்டு பட்டித்தொட்டியிலிருந்து பட்டணம் வரை, பாவப்பட்டது முதல் பணக்காரக் குடும்பம் வரை பிளவை ஏற்படுத்துகிறார்களே அதற்குத்தான்.

 2. maleek said,

  02/09/2011 இல் 19:49

  முதலில் தீர வேண்டியது பூமியில் உள்ள குழப்பம்-அப்புறம் வானம்.
  (அதோடு ஒற்றுமை என்னும் கயிறெல்லாம் இப்போது தயாரிப்பதில்லையாம்)

 3. 06/07/2013 இல் 12:09

  பேஸ்புக்கில் நேற்று (தாஜின் ஸ்டேட்டஸுக்கு வந்த மறுமொழிகள்) :

  Abu Haashima Vaver முட்டாள்த்தனமான பதிவு..
  Yesterday at 10:35am · 2

  Taj Deen அபு… நண்பர் எழுதியது. தவறைச் சுட்டி நீங்கள் விளக்கினால் என்னையொத்தவர்களுக்கு பயனாக இருக்கும். பிளீஸ்.
  Yesterday at 10:57am · 1

  Taj Deen இந்தக் கட்டுரையின் வழியே… இங்கே உள்ள நம் மத அடிப்படைவாதிகள் சௌதில் நோன்பு பிடிக்கும் போது இங்கே ஊரில் நோன்பு பிடிப்பதையும், அங்கே பெருநாள் என்றால்… எதையும் யோசிக்காமல் இங்கே ஊரிலும் பெருநாள் செய்ய சொல்வதையும் வரைப்படத்தோடு விளக்கி குறைக்கண்டிருக்கிறார். ‘பிறைப்பார்த்து’ என்னும் இஸ்லாமிய வாக்கை இவர்கள் அலச்சியப் படுத்துவதையே சுட்டிக் காமிக்கிறார். இதானால்… ஒரே வீட்டில் இரண்டு பெருநாள் நடப்பதையும் வேதனையோடு சொல்லி இருக்கிறார். இனி அபுதான் சொல்லணும்.
  Yesterday at 11:33am · 1

  Riham Mohammed இது ஒரு வேறுபாடுகள் மிக்க தலைப்பு . இதில் என்ன இருக்கு சண்டை பிடிக்க . நீ செய்வது சரியானால் உனக்கு கூலி நீ இஸ்லாத்தின் பார்வையில் சரி என நினைத்து உனக்கும் அல்லாஹ்விற்க்கும் உண்மையாக செய்யும் விடயம் பிழை எனில் அதற்க்கும் கூலி உண்டல்லோ? நான் செய்வது மாத்திரமே சரியானது என வாதிடுவது மடத்தனம். பிறை பார்த்து சண்டை பிடிக்கிறோம் புனித ரமழானின் தொடக்கமே சண்டை என்றால் எங்க இந்த சமூகம் உருப்பட போகுது ? மற்றவர் கருத்தையும் மதிக்கும் மனிதம் வேண்டும் அவ்வாறான மனிதர்கள் தோன்ற வேண்டும் அப்போது உங்களின் கேள்விக்கு விடை தேடிட வேண்டாம் காரணம் அம் மனிதங்கள் உங்களிற்க்கு விடையினை காலடிக்கு கொண்டு வருவார்கள் .
  22 hours ago

  Abu Haashima Vaver இதுபோன்ற குழப்பங்களுக்கு ஏற்கனவே நிறைய விளக்கம் சொல்லியாச்சு தாஜ் அண்ணே…

  நபிகளாரின் வாக்கு தெளிவா இருக்கு… ” பிறை பார்ப்பது குறித்து .” அதன் பிறகும் விஞ்ஞானமாம் ..வளர்ச்சியாம். நபி மொழியை விட விஞ்சானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவன் ஈமான் இல்லாதவன்.

  இப்படியே எல்லாவற்றையும் விஞ்சானத்தால் அளந்தால் மெஞ்சானத்தின் கதி ? இருந்தாலும் ஓரிரு விளக்கம் சுருக்கமா …

  @ சூரியன் ஒன்று … அது உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் உதிப்பதில்லை . இந்தியாவில் உதித்து விட்டால் போன் போட்டு இங்கிலாந்துகாரனை எழுப்பி விட முடியாது .

  @ சவூதியில் பாங்கு சொன்ன பிறகு நாம் சுப்ஹு தொழுதால் அது சுப்ஹு அல்ல… லுஹா. பிறையை எங்கே பார்த்தாலும் ஏற்றுக் கொள்ளலாம் என்றால் தொழுகை நேரத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் .

  @ இதே பிரச்சினை உமர் காலத்திலும் இருந்தது. மக்காவில் ஒரு நாள் முன்னரே பார்க்கப்பட்ட பிறையை மதினாவில் இருந்த கலிபா உமர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு அவர் சொன்ன விளக்கம்..” பிறையை பார்த்து நோன்பு பிடிக்கவும் பிறையை பார்த்து பெருநாள் கொண்டாடவும் நபிகள் கற்றுத் தந்திருக்கிறார்கள் . மக்காவில் பார்த்தால் அது மக்காவுக்கு. மதீனாவில் பார்த்தால்தான் மதீனாவுக்கு ”

  @ சவூதிக்கும் இந்தியாவுக்கும் இரண்டரை மணி நேரம் வித்தியாசம். சவூதி நேரம் காலை 6 மணி என்றால் நமக்கு காலை எட்டரை மணி. நம்ம ஊரில் காலை 6 மணிக்கு ஒருத்தன் செத்து போய் விட்டால் 6 மணிக்கு சவூதியில் உள்ள அதே 6 மணிக்கு அவனை செத்துப் போய் விட்டதாகச் சொல்ல முடியுமா ?( அவன் இறப்பதற்கு இன்னும் இரண்டரை மணி நேரம் மீதி இருக்கும்போதே ) இது எப்படி அறிவுக்குப் பொருந்தாதோ அதே மாதிரி உலகம் முழுதும் ஒரே நாளில் நோன்பு என்பதும் அறிவுக்குப் பொருந்தாது.

  @ ஓரிடத்தில் பிறை பார்த்த செய்தியை மெசேஜ் , போன் , பேஸ்புக் , இன்னும் என்னவெல்லாம் வசதி இருக்கிறதோ … அந்த அத்தனை வசதியைக் கொண்டும் உலகம் முழுவதும் சொல்லலாம் . ஆனால் … பிறையை அங்கே அனுப்பி வைக்க முடியுமா ? “இனிப்பு ” என்று காகிதத்தில் எழுதி நக்கும் கதைதான்.

  @ இது போதும் இப்போதைக்கு…
  17 hours ago · 2

  Riham Mohammed அப்போ நூஜும் கணக்கு பார்த்து தலை பிறை அறிவிப்பது கூடுமா? இலங்கை சூபிகள் நூஜும் கணக்கின் அடிப்படையில் தான் நோன்பு பிடிக்கவும் விடவும் செய்கிறார்கள்..
  17 hours ago · Edited

  Taj Deen //இதே பிரச்சினை உமர் காலத்திலும் இருந்தது. மக்காவில் ஒரு நாள் முன்னரே பார்க்கப்பட்ட பிறையை மதினாவில் இருந்த கலிபா உமர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு அவர் சொன்ன விளக்கம்..” பிறையை பார்த்து நோன்பு பிடிக்கவும் பிறையை பார்த்து பெருநாள் கொண்டாடவும் நபிகள் கற்றுத் தந்திருக்கிறார்கள் . மக்காவில் பார்த்தால் அது மக்காவுக்கு. மதீனாவில் பார்த்தால்தான் மதீனாவுக்கு “// இதைத்தானே அபு, நண்பர் சொல்லி இருக்கிறார். கல்ஃபில் பார்த்தால்… கல்ஃபில், இந்தியாவில் பார்த்தால் இந்தியாவில் என்று இருப்பதுதான் சரி என்றும், கல்ஃபில் பார்த்துவிட்டார்கள் செய்தி வந்துவிட்டது எனவே இங்கும் நோம்பு உண்டு என்பதோ, பெருநாள் உண்டென்பதோ ஆகாது என்பதைத்தானே நண்பரும் சொல்லி இருக்கிறார். விஞ்ஞான விளக்கம் கூடுதலான தகவல். அவ்வளவுதான். இன்னொரு கூடுதல் தகவல், நண்பரும் என் அன்பிற்குறிய நாநாவுமான ஹமீது ஜாஃபர் என்னைப் போல் அல்ல. ஆன்மீக கடல்.
  17 hours ago · 1

  Shaik Mohamed Anas பிறை பார்த்தல் குழப்பம் தீர “யுனிவேர்சல் இஸ்லாமிக் காலண்டர்” தயாரித்து அதை பின்பற்றினால் இந்த பிரச்சினை எழ வாய்ப்பில்லை. விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த காலத்தில் வாழும் நாம், நபி (ஸல்) அவர்கள் பின்பற்றிய பழைய வழிமுறையை பின்பற்றாமல் நவீன யுகத்தின் விஞ்ஞான கணிப்பின் மூலம் வகுத்துத் தரப்பட்டுள்ள புதிய வழிமுறையைத்தான் பயன்படுத்துகிறோம். லுஹர் தொழுகைக்காக தயாராகும் ஒருவர் சூரியன் உச்சி சாய்ந்து விட்டதா என்று பார்த்து அறிந்து தொழுவதில்லை. ஏற்கனவே கணித்து வைக்கப்பட்டுள்ள நேரத்தை பார்த்தே தொழுகைக்குத் தயாராகிறார்.
  17 hours ago · 1

  Shaik Mohamed Anas தொழுகைக்குரிய நேரத்தை அறிவதற்கு சோலார் சிஸ்டத்தின் (Solar system) புதிய விஞ்ஞான கணிப்பு முறையை ஏற்கும் நாம் நோன்பை துவக்குவதற்கு லூனார் சிஸ்டத்தின் (Lunar system) அதே புதிய விஞ்ஞான கணிப்பு முறையை நிராகரிப்பது முரண்பாடான நிலையாகும்.
  17 hours ago · 1

  Taj Deen கட்டுரையாளர் ஹமீது ஜாஃபர் நாநா இங்கே தன் பக்கத்து கருத்தை சொல்வது சிறப்பு. சொல்வார் என்றே நம்புவோம்.
  15 hours ago · 1

  Abu Haashima Vaver # அவர்கள் காலத்தில் தொழில் நுட்பம், தகவல் தொடர்பு இவைகள் கிடையாது. ஒரு செய்தி அனுப்பவேண்டுமானால் ஒரு நம்பகமான ஆள், ஒரு குதிரை, அல்லது ஒட்டகம் இத்தியாதி இவைகள் வேண்டும். ஆனால் இப்போது அப்படி அல்ல, விரல் நுனி-அடுத்த வினாடி பல்லாயிரம் மைல்கள், பல கோடி பேர்களுக்கு அறிவித்துவிட முடியும். இவைகளைக் கடந்து இப்போதும் நாம் அப்படியே இருக்கிறோம் என்றால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.#

  @ இதுக்குதான் விளக்கம் சொன்னேன் தாஜ் அண்ணே..

  # இப்போதும் நாம் அப்படியே இருக்கிறோம் என்றால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.#

  சிரிக்கவும் வேண்டாம் அழவும் வேண்டாம்… நபிகளார் சொன்னதை கடை பிடித்தால் போதும் .
  14 hours ago · 3

  Abu Haashima Vaver சூரியன் தினமும் காட்சிக்கு வருவது. அதை நாம் ஒரு சில நிமிட வித்தியாசங்களில் கண்டு கொள்ளலாம். சூரியன் கண்ணுக்குத் தெரியாமல் போகாது . வருடம் முழுவதும் அதற்கு ஒர்கிங் டேதான். சந்திரன் அப்படியல்ல…. 29, 30 என்று கண்ணாமூச்சி காட்டும். அதை பார்த்து நோன்பு வைப்பது சுன்னத்து. தொழுகை நேரத்திற்கும் நோன்பு பிறையை பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதுவும் கூட நம்ம இடத்தில பார்த்துத்தான் தொழுகை நேரத்தை கணக்கிடுகிறோம். சவுதியிலோ சிங்கப்பூரிலோ பார்த்து அல்ல. மீண்டும் சொல்கிறேன்…

  @ தொழுகையோ நோன்போ … அங்கே பார்த்தல் அங்கே … இங்கே பார்த்தால் இங்கே.
  14 hours ago · 4

  Taj Deen அபு…, நானும் கவனித்தேன். அவர் சொல்ல வந்தது என்னமோ நான் மேலே சுட்டியப்படிக்குத்தான். ஆனால், கட்டுரையில் கொஞ்சம் தெளிவின்மை இருப்பது வாஸ்தவமே. என் பாட்டி எனக்கு போதித்த பிறைப் பார்த்தல் நெறியும், நீங்கள் குறிப்பிடுவதும் ஒன்றே. அதைத்தான் இஸ்லாத்தின் முன்னோர்களும் கடைப் பிடித்திருக்கிறார்கள். சிரமத்திற்கு நன்றி அபு.
  14 hours ago · 3

  Abu Haashima Vaver இது ஒண்ணும் பெரிய மேட்டர் இல்ல அண்ணே…

  1980 வரை ஒரே பிறை.. ஒரே நோன்பு ..ஒரே பெருநாள் . எந்த குழப்பமும் இல்லை. அதன் பிறகு வந்த வஹாபிய விஞ்சான கணக்குகளால் இரண்டு பெருநாள் ஆயிற்று. அதன் பிறகு அவர்களுக்குள் வந்த பிணக்குகளால் இப்போது…

  @ அபு அப்துல்லா திருச்சி என்பவரது இஸ்லாத்தில் திங்கட்கிழமை நோன்பு.

  @ கமலுதீன் மதனி என்ற jaqh இஸ்லாத்தில் செவ்வாய் கிழமை நோன்பு.

  @ சுன்னத் ஜமாஅத் இஸ்லாத்தில் எப்போதும்போல் புதன் கிழமை நோன்பு .

  @ பிஜேயின் இஸ்லாத்தில் வியாழக்கிழமை நோன்பு.

  இப்போது தெளிவாகப் புரியும் என நினைக்கிறேன்.. அது –

  நபிகளின் வாக்கு மதிக்கப்பட்டது வரை ஒரே நாளில் நோன்பு வந்தது.

  நபிகளை உதாசீனம் செய்து அரைகுறைகளான தங்களை முன்னிலை படுத்தியவர்களின் காலத்தில் நோன்பு மூன்று நாட்களாக வருகிறது.

  @ சுன்னத் ஜமாஅத் வழிதவறவில்லை..என்பது குறிப்பிடத் தக்கது .
  14 hours ago · 2

  Mohamed Aslam சுன்னத் ஜமாஅத் 1400 ஆண்டுகளாக கடை பிடித்து வரும் கொள்கை, முதல் பிறையை மிக தெளிவாக நமது வீட்டிற்க்கே கொண்டு வரும். மிக தெளிவான ஒரு விஷயத்தையே இவர்கள் போட்டு குழப்புவது அறிவீனமே. இந்த நிலை பாட்டை இவர்கள் மாற்றி கொள்ளும் போது, பாவம் இப்போது இவர்களுக்காக கொடி பிடித்து கொண்டிருப்பவர்கள் உயிரோடு இருப்பார்களா என்பது தான் நமது கவலை. ஈனம் என்பது அறிவோடு மட்டும் நிற்காமல் போகிறதே என்பது மற்றொரு கவலை.
  13 hours ago · 3

  Taj Deen //@ அபு அப்துல்லா திருச்சி என்பவரது இஸ்லாத்தில் திங்கட்கிழமை நோன்பு.

  @ கமலுதீன் மதனி என்ற jaqh இஸ்லாத்தில் செவ்வாய் கிழமை நோன்பு.

  @ சுன்னத் ஜமாஅத் இஸ்லாத்தில் எப்போதும்போல் புதன் கிழமை நோன்பு .

  @ பிஜேயின் இஸ்லாத்தில் வியாழக்கிழமை நோன்பு.

  இப்போது தெளிவாகப் புரியும் என நினைக்கிறேன்.. அது –

  நபிகளின் வாக்கு மதிக்கப்பட்டது வரை ஒரே நாளில் நோன்பு வந்தது.

  நபிகளை உதாசீனம் செய்து அரைகுறைகளான தங்களை முன்னிலை படுத்தியவர்களின் காலத்தில் நோன்பு மூன்று நாட்களாக வருகிறது.// மேட்டரே இவ்வளவுதான் அபு. ரத்தினச் சுருக்கமா சொல்லிட்டீங்க. நன்றி.
  13 hours ago · 5

  Mohamed Aslam Kanakkum pinakkum Inakkathirkku vettu vaithu vittaargal taj anne. Ellorukkum vaazhthukkal.
  13 hours ago · 2

  Taj Deen முகம்மது அஸ்லாம்…
  மனிதர்களுக்கு
  தங்களை முன் நிறுத்திக் கொள்ளும்
  புகழின் ஆசை அளவில்லாதது!
  அதை ஒட்டியே …See More
  12 hours ago · 3

  Mohamed Aslam Romba sari anne. Thandikkapattu kondu irukkiraan.
  12 hours ago · 2

  Nisha Mansur ஆரோக்கியமான விவாதம், பிறைக்குழப்பம் துவங்கியது வஹ்ஹாபிசம் ஊடுருவிய பிறகுதான், பொதுச்சமூகத்திலிருந்து மாற்றிச் செயல்படவேண்டும் என்கிற அரிப்பின் நீட்சியே இம்மாதிரியான செயல்பாடுகளேயன்றி இஸ்லாமிய நேசம் அல்ல…!!
  3 hours ago · 2

  Taj Deen மன்சூர்…. ஏன் இவர்கள் எளிய விசயத்திற்கெல்லாம் இந்த வஹாபிகள் மீண்டும் மீண்டும் முரண்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்? எனக்குத் தெரிந்து காபத்துல்லாவில் தராபியா தொழுகை இன்றைக்கும் 20 ரக்காத் நடக்கிறது. மறுக்க முடியுமா அவர்களால். கேட்டாடால்… துருக்கியர் சௌதியை ஆண்டப் போது அப்படி நிகழத் தொடங்கிவிட்டதாக கூறுவார்கள். ஏன்..அதை தொடரவிடாது தடுக்க வேண்டியதுதானே?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s