இறைவன் பாடிய ராகமாலிகை – ‘Z’

‘கொசுக்கடியினும் கொடிது அதன் ராகமாலிகை’ என்கிறது கூகுள். இனிதினும் இனிது இஜட். ஜபருல்லாவின் ராகமாலிகை என்று இனியேனும் வஹாபிகள் சொல்வார்களாக!

***

ராகமாலிகை – இஜட். ஜபருல்லா

அறியாமை எனும்
அபஸ்வரக் கச்சேரிக்கு
மங்களம் பாடியது
எங்கள் –
அண்ணல் நபி இசைத்த
அற்புத பூபாளமே…!
அதனால் – அறிவு அங்கு
திருப்பள்ளி எழுச்சி செய்தது…!

இதயங்கள் நிலையழிந்து
முகாரி இசைத்தபோது
அண்ணலின் வருகையே – அதை
அழகிய கல்யாணியாய் மாற்றியது…!

நெஞ்ச வயலில் மண்டிக் கிடந்த
காளான்களைக் களைஎடுத்து – அதில்
தீன் பயிர் வளர வகைசெய்தது – எங்கள்
அண்ணல் நா இசைத்த
அற்புத செஞ்சுருட்டியே…!

மரித்துக் கிடந்த நீதிக்குழந்தைக்கு
மறு உயிர் கொடுத்து – அதை
கலீபத்துத் தொட்டிலில் தாலாட்டியது – எங்கள்
கண்ணிய நபியின் நீலாம்பரியே…!

ஏகத்துவம் எனும் இனிய கானடாவை
காணடா என இம்மை மேடையில்
அரங்கேற்றியது எங்கள் நபிகள்தான்…!

இந்த மாநபியின் போதனைகள்
மக்கள் மனங்களில்
மனோலயமாய் ஒலித்தன

மொத்தத்தில் –
அவர் வருகை – இந்த
அவனிக்கோர் மோகனம்.
அவரோ –
இறைவன் பாடிய ராகமாலிகை.

***

நன்றி : நானா | 0091 9842394119

***

தொடர்புடைய பதிவு :

இசையும் இறைவனும் – நாகூர் ரூமி

4 பின்னூட்டங்கள்

 1. 22/08/2011 இல் 21:24

  ஆஹா சூப்பர் கவிதை

 2. எஸ்.எல்.எம்.ஹனீபா said,

  26/08/2011 இல் 04:59

  இசையும் இறைவனும் படித்தேன்.கடைசியில் மனச்சாட்சியைக்கொண்டு மன்றாட்டம் வேறு.அந்த மனச்சாட்சி எனக்கும் உண்டு.
  நாறிப்போன மனச்சாட்சியால் அறுபத்தைந்து வருடங்களாக நான் படும் பாடு நாயனுக்கே வெளிச்சம்.
  எஸ்.எல்.எம்.ஹனீபா

  • 27/08/2011 இல் 14:24

   அன்புள்ள காக்கா, நாம் படும் பாடெல்லாம் மனசாட்சியால் அல்ல. ‘He that increaseth knowledge increaseth sorrow.’ என்பார் இயக்குனர்
   Tarkovsky (Film : Andrei Rublev). பைபிளில் வரும் வரியாம் இது.

 3. Sahid Abdul Fatah (Titachery 609703) said,

  18/11/2011 இல் 23:19

  36:69. (நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s