இப்னு அல் ஹைதம் : father of modern optics – ஹமீது ஜாஃபர் கட்டுரை

அருட்கொடையாளர்கள் வரிசையில் ஹமீது ஜாஃபர்நானாவின் இரண்டாவது கட்டுரை இது. நன்றிகளுடன் பதிவிடுகிறேன். ஒரு முக்கிய விசயம்:   நியூட்டன் எப்படி அவருடைய மூன்று விதிகளைக் கண்டுபிடித்தார் என்பதற்கு சுட்டி (##) இந்தக் கட்டுரையில் இருக்கிறது. தமாசுக்காக சேர்த்திருக்கிறார் நானா. அதை சீரியசாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அப்புறம்… யார் ’மஞ்சக்கொல்லை ஜெயபாரதன்’ ஐயாவை உற்சாகப்படுத்துகிறார்களோ அவர்களுக்கு அடுத்த கட்டுரை அர்ப்பணிக்கப்படும்!

***

ஹமீது ஜாஃபர் :

நோன்பு திறப்பதற்காக ஆபிதீன் ரூமிற்கு சென்றிருந்தபோது அங்கு வந்த நண்பர் சீர்காழி சாதிக் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். “நானா, பைரூனியைப் பற்றி எழுதியதுபோல இன்னும் கட்டுரை எழுதுங்கள்” என்றார். நான் ‘இன்ஷா அல்லாஹ்’ என்று சொன்னேனே தவிர துஆ செய்யுங்கள் என்று சொல்லவில்லை.  அப்படி சொல்லாததற்கு காரணம் இருக்கிறது. அவருடைய குரலில் ஆசையும் எதிர்பார்ப்பும் தொனித்தது. ’ஆசைப் படுங்கள் துஆ செய்யவேண்டியதில்லை, ஆசை படப் பட, அது கொந்தளிக்கும் ஆசையாக உருவெடுத்து துஆவாக மாறிவிடும், தனியாக துஆ கேட்கவேண்டிய அவசியமில்லை’ என எங்கள் ஹஜ்ரத் சொல்லியிருக்கிறார்கள். அவர் சொல்வதற்கு முன்பே நான் எழுதத் தொடங்கிவிட்டேன். ஆனாலும் அவரின் அவா என்னை ஊக்கப்படுத்தியது. எனவே இதை நண்பர் சாதிக் அவர்களுக்கு அன்புடன் சமர்ப்பிக்கிறேன்.

***

அருட் கொடையாளர்கள் – 2

இம்சை அரசன் 23ம் புலிகேசியை எல்லோருக்கும் தெரியும். கற்பனையாக இருந்தாலும் அறிவீனமும், அசட்டுத்தனமும்,  துன்பம் விளைவித்து அதில் இன்பம் காணும் பாத்திரம். இந்த மாதிரி அரசர்கள் நம் நாட்டில் மட்டுமல்ல  உலக வரலாற்றில் இருந்திருக்கிறார்கள். 10-ம் நூற்றாண்டின் எகிப்தில் வாழ்ந்த மன்னர் ஒருவர் இப்படித்தான் இருந்தார் ஆனால் அவரிடமும் சில நல்ல குணங்களும் இருந்ததின் விளைவாக நல்ல விஞ்ஞானிகள் கிடைத்துள்ளனர். எனவே அவரைப் பற்றி இங்கே அறிமுகம் செய்வது அவசியம்.

ஆம், அபு அலி அல் மன்சூர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் அறியப்படுவது ‘அல் ஹாகிம் பி அம்ரல்லாஹ்’ (Ruler by God’s Command). ஷியா வகுப்பின்  இஸ்மாயிலி பிரிவான ஃபாத்திமியா வகுப்பை சேர்ந்தவர். இவரிடமிருந்த சில குணங்களை ஆதாரமாக வைத்து சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவது ‘The Mad Caliph’. இவருடைய ஆட்சியில் மக்களை மட்டுமல்ல சில விலங்கினங்களையும் பிரத்தியேகமாக கவனித்தார். உதாரணமாக அவரைப் பார்த்து எந்த நாயும் குரைக்கக்கூடாது. தெரியாத்தனமாக குரைத்தால் அதன் ஆயுள் முடிந்தது என்று அர்த்தம். எனவே  குரைக்கும் நாய்கள் அனைத்தையும் கொன்று குவித்தார். சில வகையான காய்கனி வர்கங்களையும் சிப்பி, நண்டு போன்ற(shellfish) இனங்களையும் உண்ணக்கூடாது என கட்டளை இட்டார், (அதாவது அவருக்கு எவை பிடிக்கவில்லையோ அவற்றை வேறு யாரும் உண்ணக்கூடாது போலும்.) ஸுன்னி முஸ்லிம்கள் கிருஸ்துவர்கள், யூதர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார் என encylopedia of britanica கூறுகிறது. Al-Hakim was highly eccentric, for example he ordered the sacking of the city of Al-Fustat என்கிறார் J.J.O’Connor and E.F.Roberston.  அதே நேரம் சில நல்ல குணங்களும் இருந்தன. பஞ்சம் வந்தபோது உணவு தட்டுப்பாடு வராமல் பார்த்துக்கொண்டார். இப்போதுள்ள ஆட்சியாளர்கள் ’கண்டுக்காமல்’ இருப்பார்களே அதுபோல் இல்லாமல் நுகர்பொருள் விலை ஏறாமலும் பார்த்துக்கொண்டார். தவிர பள்ளிவாசல்கள் கட்டினார், அறிஞர்களையும் கவிஞர்களையும் ஆதரித்தார், இஸ்மாயிலி வகுப்பு வளருவதற்கு ஆதரவளித்தார். இதுவே Druze மதம் வளர்வதற்கு காரணமாக அமைந்தது என பிரிட்டானிகா கூறுகிறது. அவர் காலத்தில் வாழ்ந்த சூரிய கடிகாரத்தையும் பெண்டுலத்தையும் கண்டுபிடித்த அலி பின் யூனுஸ் என்ற கணிதமேதைக்கு வானவியல் ஆராய்ச்சிக்காக ‘ஜபல் அல் முகாத்தம்’ என்ற பகுதியில் வான் ஆய்வு நிலையம்(observatory) ஒன்றை அமைத்துக்கொடுத்தார். தனது இல்லத்தில் கெய்ரோவை ஆராய்வதற்காக  வானவியல் கருவிகள் சிலவற்றை வைத்திருந்தார், நூலகமும் அமைத்தார்.   இவரைப் பற்றி தவறான கருத்துக்களை ஒருசில வரலாற்றாசிரியர்கள் பரப்பியுள்ளனர் என ismaili.net  இணைய தளம் கூறுகிறது. Al-Ḥākim mysteriously vanished while taking a walk on the night of Feb. 13, 1021. என்று பிரிட்டானிகா கூறுகிறது.  எப்படியோ, இவர் காலத்தில் வாழ்ந்தவர்தான் இன்றைய நவீன கேமராக்களின் முன்னோடி இப்னு அல் ஹைதம்.

ஒளியியலின் தந்தை (Father of optics) இப்னு அல் ஹைதம்

இயற்பெயர்:  அபு அலி அல் ஹசன் இப்னு அல் ஹைதம்.    أبو علي، الحسن بن الحسن بن الهيثم   
தோற்றம்: 965, பஸரா, ஈராக்
மறைவு: 1040, கெய்ரோ, எகிப்து.

பஸராவில் பிறந்ததால் ‘அல்பஸரி’ என்றும், எகிப்தில் வாழ்ந்ததால் ‘அல் மிஸ்ரி’ என்றும், மேற்கத்தியரால் லத்தின் மொழியில் ‘அல் ஹஜன்’ (Alhazen) என்றும் அழைக்கப்பட்ட இவர் தன் இளமைக் காலத்தில் பஸராவிலும் பின் பாக்தாதிலும் கல்வி பயின்று பஸராவில் அரசு ஊழியராகப் பணியாற்றினார், (பஸரா அதன் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மந்திரியாக இருந்தார் என சில குறிப்புகள் உள்ளன). இளமை காலத்தில், மதங்களில் உண்டாயிருந்த விவாதங்கள், மற்றும் அணுகுமுறைகள் இவை எதுவுமே உண்மையைச் சொல்லவில்லை என்பதை அறிந்த அவர் இஸ்லாத்தில் தீவிர ஈடுபாடு கொள்ளவில்லை.  மாறாக அரிஸ்டாட்டிலின் தத்துவங்களால் உந்தப்பட்டு அறிவியல், கணிதம் பக்கம் தன் ஆர்வத்தைக் காட்டி தன் வாழ்நாள் முழுவதும் அதற்காகவே அர்ப்பணித்துக்கொண்டார்.  தான் பார்த்துவந்த அரசு உத்தியோகம் அதற்கு தடையாக இருந்ததால் தன்னை ஒரு மன நிலை பாதிக்கப்பட்டவனைப் போல் நாடகமாடி அப் பணியிலிருந்து விடுவித்துக் கொண்டதாக தன் வாழ்க்கைக் குறிப்பில் கூறியுள்ளார்.

தன்னுடைய ஆர்வத்துக்கு பஸராவில் இருந்தால் தடையாக இருக்கும் என்பதால்  கெய்ரோவுக்குப் பயணமானார் என ஒரு கருத்தும், கலிஃபா அல் ஹாக்கிமின் அழைப்பை ஏற்று கெய்ரோவுக்குப் பயணமானார் என இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. கெய்ரோவுக்கு சென்ற அவருக்கு அரசுப் பணி(மந்திரி பதவி) கொடுக்கப்பட்டு தன் எஞ்சிய காலம் வரை அங்கேயே இருந்து ஆராய்ச்சிகள் நடத்தினார் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

கோடைக்குப் பிறகு  மழை காலத்தில் நைல் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அனேக விளைநிலங்களையும் உயிரினங்களையும் சேதப்படுத்துவதோடல்லாமல் குளிர் காலத்தில் நதியில் வெள்ளம் குறைந்து பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் போகிறது. எனவே அதைக் கட்டுப்படுத்த திட்டம் ஒன்றை தீட்டும் பொறுப்பை இப்னு அல் ஹைதமிடம் கலிஃபா ஒப்படைத்தார். அதிகமாக விரயமாகும் நீரை தேக்கிவைத்து பின் பயன்படுத்தும் முறையைப் பற்றி இப்னு அல் உசைபியா(1270) தன்னுடைய ‘உயின் அல் அன்பா ஃபி தபக்காத் அல் அத்திபா’ என்ற நூலில் குறிப்பிட்டபடி தம் தலைமையிலான பொறியியல் வல்லுனர்களுடன் நதியின் ஓட்டத்தை ஆராய்வதற்காக நதியோரம் பயணமானார். முடிவில் அஸ்வான் என்ற இடத்தில் நீரைத் தடுத்து நிறுத்தி அதன் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தமுடியும் என்ற தீர்மானத்துக்கு வந்தார். இதுவே இன்றைய அஸ்வான் அணைக்கு முன்னோடி என்கிறார்கள் சில இஸ்லாமிய ஆய்வாளர்கள். ஆனால் இவருடைய கணக்கீடு அதற்காக செலவிடப்படும் தொகை மிக அதிகமாகவும் போதிய நிதி நிலை அரசிடம் இல்லாததினாலும் அவருடைய திட்டம் வெற்றி பெற முடியவில்லை. ஆத்திரமடைந்த கலிஃபா ஹாக்கிம், ஹைதமின் பதவியைப் பறித்து வீட்டுக் காவலில் வைத்தார் என்கிறது ஒரு வரலாற்று குறிப்பு. அஸ்வானுக்குச் சென்ற ஹைதம், தன்னுடைய திட்டம் நிறைவேறாது, நிச்சயமாக தான் கலிஃபாவால் கொல்லப்படுவோம் என்று தெரிந்தால் அஸ்வானிலிருந்து வேறு எங்காவது சென்றிருப்பார், கெய்ரோவுக்கு திரும்பி இருக்கவேமாட்டார். இது கலிஃபா ஹாக்கிமின் மீது சில வரலாற்றாசிரியர்கள் வீண் பழி சுமத்துகிறார்கள் என சிலர் கூறுகின்றனர்.  கெய்ரோவிலிருந்து சிரியா சென்று வாழ்ந்தார் என்று பைஹாக்கி என்பவரின் கூற்றும் முரண்பாடான செய்தி என்கிறார்கள் சிலர். To avoid punishment, he pretended to be insane until Al-Hakim’s death. He traveled to Spain during this period என்று ‘இஸ்லாம் வெப்’ கூறுகிறது. உண்மையைப் பிரித்தறிய முடியவில்லை. ஆனால் அவருடைய ஒளியியல் ஆய்வைப் பற்றி எல்லோரும் ஒரே மாதிரியான கருத்தையே கூறுகின்றனர்.

கெய்ரோ திரும்பிய அவரை கோமாளி கலிஃபா வீட்டுக் காவலில் வைத்தார். அது கலிஃபாவின் மரணம்(1021) வரை நீடித்தது. தான் இருந்த இருப்பிடத்திலிருந்து தனது ஒளியியல் பற்றிய ஆய்வை மேற்கொண்டார். கலிஃபாவின் மரணத்துக்குப் பிறகு அல் அஹ்ஜார் பள்ளிவாசலில் இருந்தவாறு மாணவர்களுக்கு பாடாம் புகட்டுவதிலும் கணிதவியல் பற்றிய நூல்கள் எழுதுவதிலும் காலத்தைக் கடத்தினார். அவர் எழுதிய புத்தகங்களில் சிறப்பு வாய்ந்தது Optics, Theory of light and a theory of vision, astronomy, mathematics, geomentry and number theory முதலானவை.
 
வீட்டுக் காவலில் இருந்த காலங்களில் பெரும்பாலான நேரங்களை தன் ஆராய்ச்சிக்கு செலவிட்டார். அதன் பலன் ஒளியியலில் முதன் முறையாக இன்றைய நவீன கேமராக்களுக்கு முதன்மை முன்னோடியான camera obscura(லத்தின்: பொருள்-இருட்டறை) வைக் கண்டுபிடித்தார். பார்க்க : யுடியூப் 

எந்த வகையிலும் ஒளி புகமுடியாத அளவுக்கு எல்லா பக்கமும் இருள் கவிழ்ந்த அறை ஒன்றில் ஓர் சுவற்றில் ஊசிமுனை அளவு துளை உண்டாக்கி அதன் வழியாக வெளியில் வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்ட ஐந்து விளக்குகளிலிருந்து வரும் ஓளி அறையினுள் முறையே ஐந்து  ஒளிர்வதைக் கண்டார். பின் வெளியிலுள்ள ஒரு விளக்கை எடுத்ததும் உள்ளேயும் ஒரு விளக்கின் ஒளி மறைந்ததையும் கண்டார். இதன் மூலம் ஒளிகள் நேர்கோட்டில் பாய்கின்றன, எத்தனை ஒளிகள் வந்தாலும் அவை ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை என்பதையும் கண்டறிந்தார். (ஒளிகள் நேர்கோட்டில் பாய்வதில்லை ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு அலை வரிசைகள்(wave lenth) உள்ளன என்பதை பின்னால் கண்டுபிடிக்கப் பட்டது.  )[picture different color of light] கண்ணின் ஒளி பொருள்மீது பட்டு பிரதிபலிப்பதால் அப்பொருளைப் பார்க்கமுடிகிறது என்ற  தத்துவத்தை உடைத்து பொருளின் ஒளி கண்ணில் படுவதால் அப்பொருளைப் பார்க்கமுடிகிறது என்ற சித்தாந்தத்தைக் கண்டுபிடித்தார்.  இது தாலமி மற்றும் யுகலிட்ஸ் இவர்களின் பார்வை விதியிலிருந்துமுற்றிலும் மாறுபடுகிறது

இவர் எழுதிய ‘கித்தாப் அல் மனாளிர்’ -كتاب المناظر  (treatise on optics) என்ற ஒளியியல் பற்றிய ஆய்வில் கண்ணின் அமைப்பு, நிறமாலை, தோற்றப் பிழை,  ஒளி முறிவு, ஒளி பிரதிபலிப்பு முதலானவற்றை விலாவாரியாக விவரித்துள்ளார். தவிர சூரியனும் சந்திரனும் ஏன் தொடுவானம் அருகில் பெரிதாகத் தெரிகிறது என்பதற்கான சரியான விளக்கத்தை அளித்துள்ளார். ஏழு தொகுப்புக்களைக் கொண்ட இப் புத்தகம்,  Book I is devoted to the structure of the eye or anatomy of eye;  Book II discusses visual perception;  Book III examines conditions necessary for good vision and how errors in vision are caused;  Book IV discusses the theory of reflection;   Book V introduces Alhazen’s problem and its solution;   Book VI examines errors in vision due to reflection;  Book VII, examines refraction. 

இவருடைய இப் புத்தகம் லத்தீன் மொழியில் Opticae thesaurus Alhazeni என்ற பெயரில் 1270 ல் மொழிபெயர்க்கப்பட்டது. மேலைநாட்டு ஆய்வாளர்களான ரோஜர் பெக்கன்(1214–1294), வானவியலார் ஜொஹன்னஸ் கெப்ளர்(1571–1630), ஜார்ஜ் பியுர்பெக்(1423-61), சிரிமொனொ(1114-87) போன்றோர் இதையே ஆதாரமாக எடுத்துக்கொண்டுள்ளனர். இன்றும் இது ஒளியியல் துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்து வருகிறது.  ஒளிமுறிவு பற்றிய ஆராய்ச்சி மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின் இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்ட பூதக்கண்ணாடி(magnifying lenses)க்கு வழிகோலியது. நிழலுருவியல்(catoptrics) ஆய்வில் கோளம் மற்றும்  பரவளைய ஆடி (spherical and parabolic mirror) இவைகளில் ஒளி விலகலின் வேறுபாட்டினை கூர்ந்து ஆராய்ந்தார். விளைவு , இடமாறு தோற்றப்பிழையில் ஒளிமுறிவும் (refraction) அதன் கோணமும் ஒருபோதும் நிலைத்திருப்பதில்ல, ஊடகத்தைப் பொருத்து அது மாறுபடும் என்பதை கண்டறிந்தார். நிழலுருவியலில் (catoptric) ஏற்பட்ட சில முக்கியச் சிக்கல்களுக்கு ‘Alhazen’s problem’ என்று இன்றும் குறிப்பிடப்படுகிறது. Which means to determine the point of reflection from a plane or curved surface, given the centre of the eye and the observed point-which is stated and solved by means of conic section

இவருடைய ‘மீஜான் அல் ஹிக்மாஹ்’ என்ற புத்தகத்தில் வளிமண்டலத்தின் அடர்த்தி மற்றும் உயரம் இவைகளுக்கிடையே உள்ள தொடர்பை விவரித்ததோடு வளிமண்டலத்தில் ஏற்படும் ஒளிமுறிவையும் சூரியன் தொடுவானத்திலிருந்து(horizan) 19° கீழே இருக்கும்போது வைகறை (twilight) தோன்றுகிறது என்பதையும், பொருள்களின் திணிவுகளுக்கிடையிலான ஈர்ப்பும் புவிஈர்ப்பின் வேகத்தின் முக்கியத்துவம் பற்றிய கோட்பாட்டையும் விளக்கியுள்ளார். (He discussed the theories of attraction between masses, and it seems that he was aware of the magnitude of acceleration  due to gravity.)  தாலமியின் ‘Almagest‘ ல் வானவியல் பற்றிய கணிதத்திற்கு விரிவான விளக்கத்தை தன்னுடைய புகழ்வாய்ந்த ‘ஹயாத்துல் ஆலம்’ என்ற வானவியல் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். என்றாலும் ஆரம்பத்தில் தாலமியின் கருத்துக்களோடு ஒத்துப்போனாலும் பிறகு அவருடைய கருத்துக்களை மறுத்து ‘அல் சுகூக் அலா பத்லம்யூஸ்'(Doubt about Ptolemy) என்ற புத்தகத்தில் விவரித்துள்ளார்.

இப்னு அல் ஹைதம், கணிதவியலுக்கும் இயற்பியலுக்கும் ஆற்றியுள்ள பங்கு மகத்தானது. He developed analytical geometry by establishing linkage between algebra and geometry. இயற்பியலில் இயக்கவிதியைப் பற்றி கூறும்போது எந்தப் பொருளும் தன் இயக்க நிலையில் வேகத்திலோ அல்லது செல்லும் திசையிலோ என்றும் நிலையாக(perpetually) சென்றுகொண்டிருக்கும்,  அதன் மீது எதாவது ஒரு புறவிசை செயல் பட்டால் மாத்திரமே அதன் வேகம்/திசையில் மாற்றமோ அல்லது ஓய்வு நிலையோ பெறமுடியும் என்கிறார். இதையேதான் சர் ஐசக் நியூட்டனும் முதல் விதியாகக் கூறுகிறார்.

## நியூட்டன் எப்படி இவ்விதியைக் கண்டுபிடித்தார் என்பதைப் பார்க்க இங்கே  சொடுக்கவும் 😉

கணிதம், வானவியல், இயற்பியல் பற்றிய 200 புத்தகங்களில் 55 புத்தகங்களே காணக் கிடைக்கின்றன. மற்றவை அழிந்திருக்கலாம். ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன் இவரது புத்தகங்கள் லத்தீன், ஹீப்ரு மற்றும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதால் அவை இன்றைய நவீன அறிவியலுக்கு பெரும் துணையாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

When white light is spread apart by a prism or a diffraction grating, the colours of the visible spectrum appear. The colours vary according to their wavelengths. Violet has the highest frequencies and shortest wavelengths, and red has the lowest frequencies and the longest wavelengths.
Coutesy: Encyclopædia Britannica, Inc.

**

Above: Proofs and diagrams from the Arabic translation of the Conics of Apollonius, transcribed and drawn by Ibn al-Haytham himself (MS Aya Sofya, no. 2762, Istanbul). Ibn al-Haytham (at left) and Galileo appear on the frontispiece of Selenographia, a 1647 description of the moon by Johannes Hevelius. The frontispiece presents the two scientists as explorers of nature by means of rational thought (ratione—note the geometrical diagram in Ibn al-Haytham’s hand) and by observation (sensu—illustrated prominently by the long telescope in Galileo’s hand).           Courtesy: Havard Magazine

***

sources:

Encyclopaedia of Britannica 2010 edition

Abū ʿAlī al-Ḥasan ibn al-Ḥasan ibn al-Haytham – Wikipedia 

http://www.youtube.com/watch?v=a5icY1dMin4

http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Al-Haytham.html

http://kiliyanur.blogspot.com/2010/11/blog-post_5995.html

http://www.newworldencyclopedia.org/entry/Refraction   

http://www.newworldencyclopedia.org/entry/Reflection_%28physics%29 

http://www.newworldencyclopedia.org/entry/Ibn_al-Haytham 

http://alshindagah.com/novdec2004/ibn.html

http://en.wikipedia.org/wiki/Ismaili    

http://en.wikipedia.org/wiki/Fatimid_Empire      

http://www.newworldencyclopedia.org/entry/Fatimids_Caliphate

http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Yunus.html  

http://sleeplessrou.wordpress.com/2007/09/23/books-of-the-golden-age-kitab-al-manazir-%E2%80%93-ibn-al-haytham/    

http://www-history.mcs.st-and.ac.uk/Glossary/number_theory.html 

 http://ismaili.net/histoire/history05/history559.html

http://www.islamweb.net/emainpage/index.php?page=articles&id=111864

http://harvardmagazine.com/2003/09/ibn-al-haytham-html

http://www.eegarai.net/t66259-topic  

***

***

குறிப்பு: நான் எழுதிய இக்கட்டுரையில், மொழிபெயர்ப்பில் அல்லது கருத்தில் தவறுகள் இருக்கலாம். கண்ணுறுபவர்கள் தயவு செய்து சுட்டிக் காண்பிக்கவும். – ஹமீது ஜாஃபர்

***

ஹமீது ஜாஃபர்

நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com

11 பின்னூட்டங்கள்

 1. தாஜ் said,

  17/08/2011 இல் 19:29

  Nice.
  மீண்டும் சதம் அடித்திருக்கிறார்
  ஜஹஃபர் நாநா.
  பெருமையாக இருக்கிறது.
  வாழ்த்துக்கள்.
  -தாஜ்

 2. syed abuthahir said,

  18/08/2011 இல் 10:45

  நானா, பைரூனியைப் பற்றி எழுதியதுபோல Muhammad ibn Mūsā al-Khwārizmī பற்றி எழுதுங்கள்

 3. 18/08/2011 இல் 12:02

  ஆச்சரியமான தகவல்கள். அனுபவித்து எழுதியிருக்கிறார் நானா. தொடருங்கள்.

 4. 18/08/2011 இல் 12:57

  ஆபிதீன் பக்கங்களின்
  அறிவியல்துறை இணை-இயக்குனர்
  நானாவுக்கு
  வாழ்த்துக்கள்…..

  இன்னும்… இன்னும்
  நிறைய விஷயங்கள்
  இருக்கின்றன –
  நானாவின் பார்வைபட
  காத்துக்கொண்டு……

 5. faaique said,

  18/08/2011 இல் 16:40

  ///அபு அலி அல் ஹசன் இப்னு அல் ஹைதம்////

  இவருடைய வரையப்பட்ட போட்டோக்கள், பஸ்ரா`வில் நிறைய இடங்களில் பார்திருக்கிறேன்…

 6. 18/08/2011 இல் 16:49

  இன்ஷா அல்லாஹ் அனைவரும் ஆபிதீன் தளத்தில் வலம் வருவார்கள்.

 7. mohamedsadiq said,

  18/08/2011 இல் 23:40

  இளமை காலத்தில், மதங்களில் உண்டாயிருந்த விவாதங்கள், மற்றும் அணுகுமுறைகள் இவை எதுவுமே உண்மையைச் சொல்லவில்லை என்பதை அறிந்த அவர் இஸ்லாத்தில் தீவிர ஈடுபாடு கொள்ளவில்லை. மாறாக அரிஸ்டாட்டிலின் தத்துவங்களால் உந்தப்பட்டு அறிவியல், கணிதம் பக்கம் தன் ஆர்வத்தைக் காட்டி தன் வாழ்நாள் முழுவதும் அதற்காகவே அர்ப்பணித்துக்கொண்டார்நாநா என் அவா,துவா தாங்கள் இதுபோல் இன்னும்………

 8. maleek said,

  19/08/2011 இல் 11:14

  யா சலாம் !

 9. 19/08/2011 இல் 23:43

  அஸ் ஸலாமு அலைக்கும் வ றஹ்மத்துல்லாஹ்,

  பொதுவாக கட்டுரைகளை நான் தவிர்ப்பது வழக்கம். ஆர்வத்தை ஊட்டும்விதமாக எழுதப்பட்டிருந்தால் ஒழிய எல்லா கட்டுரைகளையும் நான் படிப்பதில்லை. இந்த கட்டுரை பல வருடங்களுக்கு முன்னர் ஒரு பௌதீக புத்தகத்தை படிக்கும்போது இருந்த ஆர்வத்துடன் மீண்டும் படிக்க வைத்தது. இத்தனை ஆராய்ச்சி நம் முன்னோர்கள் செய்துள்ளார்கள் என்பதே வியக்க வைக்கிறது. அருமையான மொழிபெயர்ப்பும் கூட. மிக்க நன்றி. சகோ.அப்துல் காதர் பாய்தான் இந்த கட்டுரையின் லின்க்கை தந்தது, அவருக்கும் மிக்க நன்றி. இன்னும் அதிகமாக எழுதவும். வஸ் ஸலாம் சகோ.

  • 25/06/2013 இல் 00:31

   நல்ல பதிவு. அறிவியல் நுட்பங்கள் விளக்கமாகவும், தெளிவாகவும் எழுதப்பட்டுள்ளன.

   இவரைக் குறித்து நான் எழுதிய பதிவு இது. எனினும், இத்துணை விபரங்களை உள்ளடக்கியதல்ல. நுனிப்புல் வகை 🙂

   http://hussainamma.blogspot.ae/2012/05/blog-post_09.html

 10. 29/06/2013 இல் 20:54

  நன்றி சகோதரி. நண்பர் ஆபிதீன் கொடுத்த லின்கின் மூலம் தாங்களும் இபுனு ஹைதமைப் பற்றி எழுதியுள்ளதை அறிந்தேன், பின் உங்கள் கட்டுரையையும் படித்தேன். தாங்களும் மிக நன்றாகவே எழுதியுள்ளீர்கள்.
  இன்னும் எழுதுங்கள்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s