பயகம்பர்னா தெரியுமா?

அண்ணன் ஈ.எம். ஹனிபாவின் புகழ்பெற்ற ’கண்டுவரலாம் சென்று வரலாம் கனிவுடனே மா மதீனா’ பாடலில் ’பயகம்பர் வாழும் மதீனா போகலாம்’ என்றொரு வரி வருகிறது. வந்தால் என்ன, நல்லதுதானே.. கேட்டுவிட்டு சும்மா போகக்கூடாதா இந்த மஜீத்? ‘பயகம்பர்’னா என்னா நானா?’ என்று கேட்டு என்னை நேற்று படாதபாடு படுத்தினார். நானும் ரொம்பநாளாக கேட்கும் பாடல்தான் இது – அர்த்தம் தெரியாமலேயே (வழக்கம்போல) . ரசூலுல்லாவ சொல்றதுங்கறது மட்டுந்தான் தெரியும்ங்க. கரெக்ட்டான அர்த்தம் தெரியலையே என்றதும் நீங்க முஸ்லீமே அல்ல என்று ஃபத்வா கொடுத்தார். அதாவது, அவர் முஸ்லிமாம்! இந்த ’ஹிக்மத்’தானே வேணாங்கிறது… குழம்பியபடி ஜாஃபர்நானாவைக் கேட்டேன்.  ‘நன்னனன்ன நானா’ என்று ஜபருல்லாநானாவைக் கேட்கச் சொன்னார். ’ஒய்.. இது தமிழ் அல்லங்கனி. அது மட்டும்தான் தெரியும். அரபியா இக்கிம்டு நெனக்கிறேன். எனக்குத்தான்  அலீஃப்,பே, தேக்கு மேலே அதுல எதுவும் தெரியாதுங்கனி’ என்று அவரும் உண்மையாக அலறினார். ரமலானில் எதையும் மறைக்க மாட்டார் நானா. பெரிய வம்பா போச்சே… இப்போ யார்ட்டெ கேக்குறது? ’பைகாம்’ என்றால் உருது மொழியில் ‘செய்தி’ என்று தெரியும். ஹரிஹரனின் ஒரு கஜல் ஆல்பம்கூட ’பைகாம்’ என்று இருக்கிறது. ஒருவேளை.. (இறைச்) செய்தியை கொண்டுவந்தவர் என்ற அர்த்தத்தில் இருக்குமோ? இந்திசாபிடம் – என் பழைய மேனேஜர் / பாகிஸ்தானி – கேட்டால்…  அட, ரொம்ப சரி. எனக்கும் வேலை செய்கிறது.  Messenger. பைகாம்பர் என்பதைத்தான் பயகம்பர் என்று பாடுகிறார் போலும். பயப்பட வாணாம்; நோம்பு நேரத்துல கேக்குறதுக்கு நல்லாத்தான் இக்கிது. ’ம்யூசிக் ஈஸ் ஹராம்’ என்று உளறித் தொலையாமல் கேளுங்கள். நன்றி.

Thanks :  tamilmuslimtube

5 பின்னூட்டங்கள்

 1. 18/08/2011 இல் 05:31

  ’பைகம்பர்’ என்பது பாரசீக வார்த்தை. செய்தியை கொண்டு சேர்பிப்பவர் என்று அர்த்தம். அதாவது ‘தூதுவர்’ – ‘ரஸுல்’ என்று அர்த்தம்.

  இப்படி எங்கேயோ படித்ததாக நினைவு.

  (இப்படி ‘எங்கேயோ’ என்று பொத்தாம் பொதுவாக சொன்னால் நம்ம ஹஜ்ரத்துக்கு பிடிக்காது – அந்த கவலை தான் இப்போது)

  • abedheen said,

   18/08/2011 இல் 10:21

   நன்றி துரை. ’ரஸூல்’ என்பதும் ’நபி’ என்பதும் வேறு வேறு என்று என் மேனேஜர் குழப்பினார்.. அதாவது, ’நபி’ என்பது ரஸூலை விட உயர்ந்த அந்தஸ்து என்பதாக. சற்று விளக்க முடியுமா? ‘எங்கேயோ’ பார்த்து சொன்னாலும் சரிதான்.

 2. 18/08/2011 இல் 16:01

  ஹாஹா..

  நான் எழுதுவது எல்லாமே எங்கேயோ பார்த்து நண்பர்களிடம் கேட்டு சொல்வது தானே..

  (ஹனிபா பாட்டின் மூலமான ரஃபி சாபின் பாடலை சொல்லியது உள்பட)

  ———-
  எனக்கு தெரிந்த வகையில் ‘நபி’யை விட ‘ரஸுலுக்கு’ தான் உயர்ந்த அந்தஸ்து.

  எப்படி?

  இருங்க நானா… ’எங்கேயோ’ பார்த்து சொல்கிறேன்.

  —————————

  நபி என்றால் ஹீப்ரு மொழியில் “நீர்ச்சுனை போன்று குமிழியிட்டு வெளிவருபவர்” என்று பொருளாம்.

  அரபியில் ‘நுபு’ என்றால் உயர்த்தப்பட்டவராம்.

  ஆனால் நபி என்ற சொல்லின் மூலம் ‘நபஉ’ என்ற சொல்லில் இருந்து வந்ததாம். இதன் பொருள் ‘மிகவும் பயந்தரத்தக்க நன்மாராயம்’ என்பதாகும்.

  இத்தகைய நன்மாராயத்தை ‘வஹி’ மூலம் பெற்றுத் தருபவருக்கு ‘நபி’ என்று பெயர்.

  நபிமார்களில் 313 அல்லது 315 முர்ஸலான நபிமார்கள் அதாவது, ரஸூல்மார்கள் என்று அழைக்கப்பட்டனர்.

  —————————-
  ஒரு ரஸூல் தோன்றியவுடன் முந்தைய ரஸுல் கொண்டு வந்த ஷரியத் முடிவுபெறும். நபிமார்கள் அப்படியல்ல.. முந்தைய ரஸுலின் ஷரியத்தையே பின்பற்றி அவ்வழியையே பிறரையும் பின்பற்றிட அழைக்க வேண்டும்.
  ——————————-
  நபிமார்களின் உச்சம், இறுதி, முத்திரை, என்பது நபி, ரஸுலை விட உயர்ந்த அந்தஸ்த்து ஆகும். அவ்விடத்தை உயிரினும் மேலான முஹம்மத் (ஸல்) அவர்களே அணி செய்கிறார்கள்.
  ——————————-
  குழப்பம் செய்ய விருப்பமில்லை… ஆனாலும் சிந்தனைக்கு…

  ஆதம் (அலை) அவர்கள் நபியா? ரஸூலா? அல்லது இரண்டுமே அல்லவா?

  இஜட் நானாவிடம் கேட்கவும்.

  —————————–

 3. 18/08/2011 இல் 16:02

  சொல்ல மறந்துட்டேனே…

  பார்ஸியில்

  ‘ரஸூலுக்கும், நபிக்கும் – இரண்டு சொற்களுக்குமே – ‘பைகம்பர்’ என்ற சொல்லையே பயன்படுத்துகிறார்கள்.

  • 20/08/2011 இல் 12:39

   நன்றி இஸ்மாயில்.

   ஆக்சுவல்லி………………….,
   ‘பயகொம்பர்’ னுதான் அண்ணன் ஹனீஃபா படிக்கிறதா (பாடுறத நாங்களும் இப்டித்தான் சொல்வோம்) ரொம்ப நெனச்சுக்கிட்ருந்தேன்.

   அப்பறம்தான் கவனிச்சேன், அவர் ரெண்டுமாதிரியும் படிக்கிறார்.

   ஒருவழியா சந்தேகம் தீர்ந்தவரைக்கும் சந்தோஷம்!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s