பாரத பாக்ய விதாதா…… – தாஜ்

பதிவுகள் இணையதளத்தில் (2007 / இதழ் 93) வெளியான நண்பர் தாஜின் பழைய கவிதை இது.  புதுசாக அனுப்பியிருக்கிறார். சரி, ஜபருல்லாவின் ’நாடு அதை நாடு’ படித்துவிட்டு கவனமாக அதை நாடுங்கள். விசேஷதினங்கள் வந்துவிட்டால் போதும்; தீவிரவாதிகள் தாக்க வந்துவிடுவார்கள் – கவிதையை எடுத்துக்கொண்டு.  இதற்கு பயந்து , வரலாறு காணாத வகையில் ஏழாயிரம் போலீஸார் ’அலர்ட்டாக’ உலாத்தும் ஏழடுக்கு பாதுகாப்பு வளையத்தைப் போட்டு அதைப் பாதுகாக்க எழுபது எட்டடுக்கு வளையம் போடுவதும் சரிதானா சாரே ?

***

ஆகஸ்டு – 15  (மொழிச் சித்திரம்)

– தாஜ்

இன்றைக்கு மிட்டாய்
கிடைக்கும் நாள்!
பள்ளிக் கூடமும் இல்லை!
கொடி மட்டும்தான் ஏத்துவாங்க.
பத்து மணிக்கு…
போனா போதும்
சின்னச் சின்ன
மிட்டாய்தான் தருவாங்க
அதுவும் கொஞ்சமா.

காமராஜ் கடை வீதி..
தியாகி கொடி மேடையெ
கலர் தாளெல்லாம் ஒட்டி
ராவோடு ராவா
ஜோடனை செய்துட்டாங்க
பார்க்க அழகா இருக்கு
இன்னெக்கி அங்கே
கொடியேத்துவாங்க
நிறைய மிட்டாய் தருவாங்க!

நான்…
காலெயிலெயே வந்துட்டேன்
எம்பி…. இப்பத்தான் வந்தார்
கொடியேற்றினார்
பூ கொட்டியது
தாயின் மணிக்கொடி பாடினோம்
காத்து இல்ல
கொடி பறக்கல!

எம்பி பேசுறார்…
கர கரன்னு
ஏப்பம் விடுற மாதிரி.
காந்தி…..
வெள்ளைக்காரன்… என்கிறார்
சொதந்திரம்…
அம்பது வருசம்… என்கிறார்.
நேற்று பள்ளிக் கூடத்திலெ
என்னெ அடிச்ச
அந்த தடியன் பெயரும்
சொதந்திரம்தான்.
அவர் பேசி முடித்ததும்தான்
மிட்டாய்….
புளிப்பு மிட்டாய்….
இனிக்கும்.

சின்னக் கடைவீதி
மூத்திர சந்து…
பஜனை மடத்திலும்
கொடி ஏற்றுவாங்க.
மண் மேலே
வெள்ளையா ஒண்ணெ
அங்கே இங்கே தூவி
நாத்தத்தை மூடி மறைச்சிருப்பாங்க
வீச்சம் தாங்காது.
ஆனா அங்கே லட்டு!
போன வருஷம் சாப்பிட்டது
இன்னும் இனிக்குது.
சீக்கிரம்….
போனாதான் கிடைக்கும்.

சத்தியா கெரகமெல்லாம் செஞ்சி
பறங்கியனெ…
விரட்டினோம்கிறார் எம்பி
அதென்ன பறங்கியன்?
தாத்தாவைத்தான் கேட்கணும்
அவர் சொன்னாக்கூட புரியாது
பல்லெல்லாம் விழுந்திடுச்சி
அவர்தான் தெனைக்கும்
பாரதமாதா…
அலெகெ… பாடுவார்
பூன கத்துற மாதிரி!
மாசா மாசாம் அவருக்கு
தியாகி பிஞ்சன் வருது.

இன்னும் பேசுறார்…. எம்பி
தேசியம்… மக்கள்…
ஒத்துமைன்ணு….
அடுத்த வருஷத்திலே
மேயில தேர்தல் வருதான்!
எல்லோரும் பேசிகிறாங்க.
மிட்டாயிலெ….
ஈ மொய்ப்பது தெரியுது
கொஞ்சமா
கறுப்பா வேறே இருக்கு
சக்கரை வெல ஏறியிருக்கும்.

போன வருஷம்
கொடி ஏற்றியவர்
நல்லவர்
சீக்கிரம் பேசி முடிச்சிட்டார்.
கை நிறைய
மிட்டாய் தந்தாங்க
கண்ணாடிப் பேப்பரிலெ சுற்றிய
பளபளப்பு மிட்டாய்.
தம்பிகளுக்கும்
தங்கச்சிப் பாப்பாவுக்கும்
கொண்டுபோய் கொடுத்தேன்.
இப்போ….
ஜனகனமன அதிநாயக ஜயஹே….
பாரத பாக்ய விதாதா……

***

நன்றி : தாஜ் | satajdeen@gmail.com

2 பின்னூட்டங்கள்

 1. 14/08/2011 இல் 16:59

  //விசேஷதினங்கள் வந்துவிட்டால் போதும்; தீவிரவாதிகள் தாக்க வந்துவிடுவார்கள் – கவிதையை எடுத்துக்கொண்டு// 🙂 🙂

  டேய் வாடா, சுதந்திரதின கொடியேத்தத்துக்குப் போலாம்….
  அட போடா, நீ வேணா போயிட்டு வா, ரெண்டு முட்டாய்க்காக யாரு அவ்வளவுநேரம் வெயில்ல நிக்கிறது?

  இந்த மாதிரி 2 பையங்க பேசிக்கிறதை எல்லாரும் கேட்ருப்போம்! ரொம்ப வருத்தப்பட வேணாம். இப்ப பசங்களுக்கு, இந்த மாதிரி பேசிக்கிறக்கூட ‘டைம்’ இல்ல…

  Anyway, நாம சொல்லிக்கிருவோம்: “வாழ்த்துக்கள்”

 2. 14/08/2011 இல் 20:19

  ரெண்டு பெப்பர்மெண்டு முட்டாய்க்காக வெள்ளெ சட்டெ போட்டுகிட்டு தேசிய கொடியெ குண்டூயாலெ சட்டெயிலெ குத்திகிட்டு போயிட்டு வரும்போது ஒரு மகிழ்சி இருந்துச்சுத்தான்.

  ஆமா, அதே பள்ளிகூடம், அதே கொடி கம்பு, அதே பேச்சு, அதே முட்டாய். வாழ்க அதே இந்தியா…! நாமும்தான்…!!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s