இறைவா, இவர்களுக்கு கட்டளை இடு

மவுத்தான சீதேவி வாப்பாவுடன் கடுமையாக நான் வாக்குவாதம் செய்வதாக முந்தாநாள் வந்த கனவில் கலக்கமுற்றேன். என்ன இது.. அப்படி நிகழ்ந்ததே இல்லையே.. சின்னச் சின்ன கோபங்கள் வந்ததுண்டுதான். ஆனால் குரல் உயர்த்தி அவர்களிடம் பேசியதே இல்லை. பின் இது என்ன? ’கெட்ட’ கனவுகளை – நம் மேல் நிஜமாகவே அக்கறையுள்ளவர் தவிர – யாரிடமும் சொல்லக்கூடாது என்பார்கள் ஹஜ்ரத். இப்போது யாரிடம் சொல்வது? ஜபருல்லாநானாவிடம் சொன்னேன் ,  ’மனசு ரொம்ப ஹராரத்தா (நிம்மதியில்லாமல்) இக்கிது நானா’ என்று.

‘யாசீன் தெரியுமா?’ என்றார்.

‘தெரியும். என் சகலப்பாடி’

‘ஓய், ஓதத் தெரியுமாண்டு கேட்டேன்’

‘அவருக்கா? தெரியும்டுதான் நெனைக்கிறேன்’

‘நோம்பு நேரத்துலெ ஏங்கனி உசுர வாங்குறா? ஒமக்கு தெரியுமாண்டு கேட்டேன்’

‘யாசீன்…அல்-குர்ஆனில் ஹகீம்…’

‘அதேதான். இத ஓதும்’

‘இவ்வளவுதான் தெரியும் நானா’

‘என்னவிட பெரிய ஷைத்தானா இக்கிறியுமே… தமிழ் குர்ஆன் இக்கிதுல.. அதப்பார்த்தாவது முழுசா அந்த சூராவ ஓதும்.’

’ஓதுனா?’

‘கனவு மாறிடும்’

‘வாப்பா என்னோட சண்ட போடுறமாதிரியா?’

‘அல்லாவே.. நான் சொல்றதெ செய்யுங்கனி.  சூராவ ஓதிட்டு மூணு தடவ ’யா அல்லா’ன்னு சொல்லும்’

‘சொல்றேன், ஆனா இதுக்கு ஆதாரம் கேட்டு என்னெ ’கப்சா’ போடுவாஹலே. என்னா செய்யிறது?’

‘நானா சொன்னாஹாண்டு சொல்லும். மேக்கொண்டு கேட்டா இந்த எஸ்.எம்.எஸை – இப்ப அனுப்புறேன் – கொடும். ஓகேயா?’

’டபுள் ஓகே’

***

கேட்க : யாசீன் சூரா (Part 1 & Part 2 )

***

SMS / 7th Aug 2011  : 

இறைவா…
சங்கையான ஆலிம்கள்
உன்னையும்
ரசூல் (ஸல்) அவர்களையும்
நரகம் சொர்க்கம் பற்றியுமே
பேசிக்கொண்டே இருக்கிறார்கள்!
அன்பு… பாசம்… உதவி… நட்பு பற்றி
பேசச் சொல்லேன்.
மலக்குகளை விட்டுவிட்டு
ஏழை மனிதர்கள் பக்கம்
பார்க்க
கட்டளை போடேன்.

உன் அடிமை,
இஜட். ஜபருல்லா

***

நன்றி : நானா | 0091 9842394119

***

முக்கியக் குறிப்பு :  அதிகாலை , ஜபருல்லாநானாவுடன் சண்டை போடுவதாக அழகிய கனவு!

6 பின்னூட்டங்கள்

 1. தாஜ் said,

  09/08/2011 இல் 15:23

  சமீபத்தில்
  வாசிப்பில்
  இந்த அளவுக்கு
  சிரித்ததில்லை நான்.
  கனவுகள் கண்டப்படிக்கு ஆபிதீனும்
  இஸ்லாத்தை தொட்டுத்தொட்டு
  புத்திமதிகள் வழங்குதல்களோடு ஜபுருல்ல நாநாவும்
  நூறாண்டு நூற்றாண்டுகள் வாழவேண்டும்
  -தாஜ்.

 2. 09/08/2011 இல் 21:03

  நானாவின் கவிதை சூப்பர்.ஆபிதீனுக்காக நான் ஒரு யாஸீன் ஓதிவிடுகிறேன்

 3. 10/08/2011 இல் 12:32

  இருந்தாலும் இவர் ரொம்ப மோசம், நான் பின்னூட்டத்துல எழுத நினச்சதையும், “முக்கியக் குறிப்பு’ ன்னு இவரே முக்கிட்டார்;

  //‘யாசீன் தெரியுமா?’ என்றார்.

  ‘தெரியும். என் சகலப்பாடி’

  ‘ஓய், ஓதத் தெரியுமாண்டு கேட்டேன்’

  ‘அவருக்கா? தெரியும்டுதான் நெனைக்கிறேன்’

  ‘நோம்பு நேரத்துலெ ஏங்கனி உசுர வாங்குறா? ஒமக்கு தெரியுமாண்டு கேட்டேன்’//

  ஜபருல்லா நானா எந்த அளவுக்கு பட்டிருப்பார்னு நம்ம சிரிச்ச அளவை வச்சு தெரிஞ்சுக்கிறலாம்!!

  • தாஜ் said,

   10/08/2011 இல் 15:16

   மஜீது…..
   உனக்குத் தெரிய வாய்ப்பில்லை.
   நம்ம….
   ஜபுருல்லா நாநாவை
   யாரும் படுத்தவெல்லாம் முடியாது.
   அவரிடம் பட்டதற்கான/
   அந்தப் பாட்டை வழிமுறையாக
   கற்றதற்கான
   சின்ன அடையாளங்கள்தான்
   இதெல்லாம்!
   -தாஜ்

 4. 11/08/2011 இல் 05:41

  சரி தான்..

  இறந்தவர்களுக்கு யாசீன் ஓதலாமா ஓதக்கூடாதா என்ற ஆதார சண்டை போக கனவுச் சண்டைக்கெல்லாம் யாசீன் ஓத சொல்றாஹலா..?

  ஜபருல்லா நானா கூட சண்ட கனவுல வந்தது வரைக்கும் ரொம்ப சந்தோஷம் ..

  நான் அல்லா அல்லாண்டுகிட்டு இருந்தேன்.. ஏங்கே சகலப்பாடிக்கூட சண்ட வந்துட போவுதோன்னு…

  • abedheen said,

   11/08/2011 இல் 09:30

   துரை, எனக்கு யாசீன் ஓதத் துடிக்கும் இந்த நாகூர் ரூமியுடன்தான் உண்மையில் சண்டை போடவேண்டும். அவருக்காக யாசீன் ஓத அனீகாவும் நதீமும் முன்வந்துவிட்டதால் விட்டுவிட்டேன். அப்புறம்.. நீங்கள் பயந்ததுபோல் சகலப்பாடியுடன் சண்டை வரவே வராது. கூடப்பிறக்காத தம்பி அவர். அதனாலேயே என் மேல் பாசமும் மரியாதையும் கொண்டவர். இன்னொன்று… ஜபருல்லாநானாவுடன் கனவில் சண்டையிடுவது எனக்குப் பிடிக்காது. நேரில்தான் போடனும். இறைவன் உதவுவானாக!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s