இஜட். ஜபருல்லாவின் ‘தியானம்’

ஜபருல்லாநானாவை நாகூரில் பார்த்துப்பேசிய ஹனிபாக்கா , ’தம்பி.. இந்த மனுசன் மூளைய குழப்பிடுவாரு’ என்று என்னிடம் நடுங்கியபடியே சொன்னார்! நமக்கு அந்த பிரச்னையே இல்லை!. ‘இது அல்லது அது அல்லது இதுவும் அதுவும்’னு தேவிபாரதி வினோதமான தலைப்பு (காலச்சுவடில்) போட்ட மாதிரில இருக்கு இவர் பேசுறதுலாம்..’ என்று மேலும் விளக்கினார். வேடிக்கையாக இருந்தது கேட்க.  காக்காவின் கிண்டலை விடுங்கள். அவர் அப்படித்தான்.  முதலில் தியானம் செய்யுங்கள். அதற்கு முன் ’ மயானம் – ஒரு அறிமுகம்’ கட்டுரையை வாசித்து விடுங்கள். ஆமா..,  நண்பர் நாகூர்ரூமி அவர் தளத்தில் எழுதிய ’தியானம் ஒரு அறிமுகம்’ கட்டுரையை , தமிழ்ஹிந்து தளத்தில் அவர் பெயரைப் போடாமலேயே ஏன் வலையேற்றியிருக்கிறார்கள்?  அந்தக் கட்டுரையை எழுதியவர் இஜட். ஜபருல்லா என்று (தவறாக) புரிந்து கொண்டார்கள் போலும். அது போகட்டும், நம்ம ஜபருல்லாவின் ’தியானம்’ இதுதான். தட்டச்சு செய்து அனுப்பிய ஜாஃபர்நானாவுக்கு நன்றி.  ( ‘மனத்துவம்’ என்றால் என்ன நானா?).

***

தியானம்..

இஜட். ஜபருல்லா

இது இமைகளை மூடி
இதயத்தைத் திறப்பது.
விழிகளை மூடி
விழித்திருப்பது.
கண்களை மூடி
காட்சியை காண்பது.

மூடிய கண்ணுக்குள்
ஆடும் வெளிச்சம்
தேடிய வாழ்க்கையின்
திசையினைக் காட்டும்…!

இது –
இச்சைகளின்
உறக்கத்தில் நடக்கும்
இறைக்கூத்து…!
நா –
உச்சரிக்கின்ற
வார்த்தைகளின்
ஒளி நடனம்…!

இது –
ஆத்ம சுருதியின்
ஆனந்த ராகம்…!
ஆழ்மனத் தேடலின்
சுய தரிசனம்…!

இதில் –
இறைமைப் புள்ளி
வட்டமாய் விரியும்.
உறவு வட்டமோ
புள்ளியாய் சுருங்கும்…!

நிசப்தங்களின் நாவுகள்
சத்தமாய் பேசும்
மௌனத்தின் அதிர்வுகள்
இடியாய் இறங்கும்…!

இது –
தன்னை மறந்து
தலைவனை உணரும்
தத்துவச் சாலை…!

நாயன் அருளிய
வேதப் பரிசை
நாயகம் பெற்ற
ஞான அரங்கம்…!

மொத்தத்தில்..
இது மனிதனின் மனத்துவம்
மனசை –
முழுமையாக்க அல்ல..
வெறுமையாக்க…!

***

நன்றி : இஜட். ஜபருல்லா | Cell : 0091 9842394119

1 பின்னூட்டம்

 1. 02/08/2011 இல் 15:31

  //மனசை –
  முழுமையாக்க அல்ல..
  வெறுமையாக்க…!//

  ஆஹா, அருமை…..

  பலரும் மனசை நிரப்பத்தான்
  முயற்சிக்கிறார்கள் – தியானம் மூலம்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s