நிலோஃபர் தீட்டிய சித்திரங்கள் , நீங்கள் விரும்பும் பாடலோடு…

இந்த நிலோஃபர் ,  ஸ்கேல் கொண்டு நேர்க்கோடு வரையும் என் செல்லமகள் அனீகா நிலோஃபர் அல்ல. (சும்மா கிண்டல்; அருமையாக வட்டம் வரைவாள் அனீகா – என் முகம் பார்த்து.) இது வேறு நிலோஃபர்.  கர்ப்பமாக இருக்கும் நண்பர் தாஜின் –  ஊஹூம், இப்படி எழுதினால் அர்த்தம் வேறுமாதிரி வருகிறது 😉  –   நண்பர் தாஜின் இளையமகளான ,  தற்போது நிறைமாத சூலியாக இருக்கிற , நிலோஃபர் நிஷா.  நட்பு வட்டத்தில் இன்னொரு தேவதையும் நிலோஃபர் என்ற பெயரோடு இருக்கிறாள். அவளைப் பற்றி அப்புறம்.

சரி, மகளார் வரைந்த சித்திரங்களை மறக்காமல் அனுப்பி வைத்திருக்கிறார் மகள் கவிஞர், சாரி, மஹா கவிஞர் தாஜ் .  நிலோஃபரை நிறைய பிரார்த்தனையுடன் வாழ்த்துகிறேன் –    மேலும் (வி)சித்திரங்கள் வரையவும்   ’பக்தி நிறைந்த ஞானி -cum – பாடித் திரியும் தேனி’யாக பிள்ளையொன்று பெற்றுத்தரவும்.   சந்தோஷம் காரணமாக , ‘இது சத்தியம்’ படத்தில் வரும் ’குங்குமப்பொட்டு குலுங்குதடி’யை  இங்கே சேர்க்கிறேன்.  எனக்குப் பிடித்த பாட்டு. நிலோஃபருக்கும் பிடிக்கும் என்றுதான் நினைக்கிறேன். உம்மா, இது சுசீலாம்மாவும் ஜானகியம்மாவும் அபூர்வமாகம்மா சேர்ந்தும்மா பாடியதும்மா  (இன்னொரு பாடல் : ’நானொரு பொன்னோவியம்…’. வேறு இருக்காமா?).

கேட்டாச்சா?  பழைய ’சீசன்’ ரிகார்டிங்க…  எப்படி? நண்பர் அசனாதான் கொடுத்தார். நன்றி. ‘முஸ்லிம் பாட்டு போட்டா என்னாவாம்?’  என்று முணுமுணுக்காமல் நீங்களும் வாழ்த்துங்கள் , முழுமனதோடு.

கவிஞர் தாஜின் பேரப்பிள்ளைகளாவது கவிதை எழுதாமலிருந்து , கவலையற்ற வாழ்வு நடத்த கடவுள் உதவட்டும்!  – ஆபிதீன்

***

அன்புடன்
ஆபிதீன்….

உங்களது
கடிதம் பார்க்க
அபூர்வமாகப் போய்விட்டது.

எந்தக் கோவிலில்
வேண்டிக் கொண்டு
கயிறு கட்டிக் கொண்டால்…
நீங்கள் கடிதம் எழுதக் கூடும்?
எழுதி தெரிவியுங்கள்
சித்தமாக இருக்கிறேன்.

*
சென்ற வாரம் முழுமையும்
ஆபிதீன் பக்கத்தில்
நல்ல இலக்கியம்
வெளிப்படுவதைக் கண்டு
பயமாக இருக்கிறது.
தேடி வைத்திருக்கும்
வாசகர்கள் எல்லாம்
சொல்லாமல் கொள்ளாமல்
ஓடிவிடுவார்களே என்கிற
பயம்தான் அது.
*
ஆபிதீன் பக்கங்களில்
இன்னும்
சித்திரம் வெளியாவது மட்டும்தான்
பாக்கியாக இருந்தது…
அதனை நிவர்த்தி செய்ய
சித்திரம் சிலவற்றை
அனுப்பியுள்ளேன்.
தேறுமா பாருங்கள்.

அடுத்த மாத இறுதியில்
குழந்தையைக் காண
பிரசவ வலியோடு
வீட்டில் வலம் வரும்
என் சின்ன மகள்
நிலோஃபர் வரைந்த
படங்கள்தான் இவை.

அவள்
பி.எஸ்.சி.,
விசுவல் கம்யூனிகேசன்
படித்ததை
எப்பவாவது இப்படி
கம்யூட்டரில் கிறுக்கி
நமக்கு நினைவுறுத்திக் கொண்டிருப்பாள்.
-தாஜ்

***

நிலோபர் தீட்டிய சித்திரங்கள் :

நன்றி : மகள் நிலோஃபர், நண்பர் தாஜ்

*

last updated on 04.08.2019

9 பின்னூட்டங்கள்

 1. நாகூர் ரூமி said,

  25/07/2011 இல் 12:09

  நிலோஃபரின் இந்த மூன்றாவது ஓவியம் தாஜின் கவிதை மாதிரியே இருக்கிறது!

  • 25/07/2011 இல் 12:20

   ஓய்…, தாஜை வெடைக்கிறதுல அப்படியென்னாங்கனி குஷி? நம்ம தாஜ் அருமையா வரைவார்!

   • 25/07/2011 இல் 15:44

    என்னத்தை? கவிதையைத்தானே?

  • 25/07/2011 இல் 15:45

   நல்லவேளை! தாஜ் மாதிரி இருக்குனு சொல்லலை நீங்க!!

 2. 25/07/2011 இல் 15:56

  குழந்தைகள் தம் திறமைகளில், நம்மை மிஞ்சும்போது வரும் உணர்வு வெறும் ‘பெருமிதம்’ மட்டுமல்ல –
  அது ஒரு இனம்தெரியாத சுக உணர்வு.

  மகள் நீலோஃபரின் ஓவியங்கள் தந்ததும் அதுதான்.

  வாழ்த்துக்கள்!
  விரைவில் பேரப்பிள்ளையும் வாழ்த்துவோம்!!

 3. 25/07/2011 இல் 16:02

  நிலோஃபர் என்றாலே ஒவியம் வரைவார்களோ. என்ன விசித்திர ஒற்றுமை.

 4. 25/07/2011 இல் 19:05

  முதலில் பிரார்த்தனை, அப்புறம் வாழ்த்து, அப்புறம் தாஜ் என்னோடு இணைவதில் மகிழ்வு, அப்புறம்…….

  வேண்டாம் இன்னொரு கவிஞர், தாஜ் ஒருவர் போதும். நல்ல இசையரசன் வரட்டும்.

 5. தாஜ் said,

  25/07/2011 இல் 22:45

  ரூமி-ஆபிதீனில் இருந்து
  அத்தனை நல்ல உள்ளங்களும்
  என் மகளின் சித்திரத்தை
  சாக்காகக் கொண்டு
  என்னை மாத்து மாத்துயென
  மாத்துகிறீர்கள்
  எத்தனை நாள்
  உள்ளக்கிடைக்கையோ?
  சந்தோஷம்தனே?
  எனக்கும் சந்தோஷம்தான்.

  *
  //’பக்தி நிறைந்த ஞானி -cum – பாடித் திரியும் தேனி’யாக//

  //கவிஞர் தாஜின் பேரப்பிள்ளைகளாவது கவிதை எழுதாமலிருந்து //

  – எனது பிள்ளைகள் என்னை மாதிரி
  இருக்கக் கூடாது என நினைப்பவன் நான்.
  அப்படித்தான் இவ்வளவு காலமும்
  அவர்களை வழி நடத்தினேன்.

  என் மகன் அடர்தாடி வைத்து
  தெய்வீகமாய் தோற்றம் தந்த போதும்/
  பெரிய மகள்
  தௌஹீத் பேசிய போதும்/
  சிறியவள்
  அவளது பாட்டி மாதிரி
  விழுந்து விழுந்து தொழுத போதும்
  நான்
  அதனையெல்லாம் ரசிப்பேனே தவிர
  அவர்களது மண்டையில்
  உட்கார நினைக்க மாட்டேன்.

  என் மனைவியும் சேர்த்து
  இவர்கள் எல்லோரும்
  ரம்லானில்
  நோன்பு நோர்க்கும் போதும் கூட
  அவர்களுக்கு பிரச்சனையாகமல்
  ஒதுபுறமாய்
  நான் நானாகவே இருப்பேன்.
  சிகெரட்டும் டீயுமாக.

  இன்றைக்கும்
  என் குழந்தைகள்தான்
  என் முதல் நண்பர்கள்.
  மனைவியும் அப்படிதான்…
  நண்பி.

  பேரப் பிள்ளைகளும்
  அவர்களது
  ஞானம் செழிக்கும் போக்கில்
  வளர்வதுதான்
  சரியான வளர்வாக இருக்கும்.
  அதுதான்…
  அவர்களது பிறப்பிற்கே மரியாதை.

  *
  நிலோஃபரின் கவிதைக்கு கருத்துரைத்த
  அவளது சித்தப்பா
  ஆபிதீன்/ ரூமிக்கும்
  ஏனைய தாய் மாமன்களுக்கும்
  நன்றி கூற சொன்னாள்..
  நன்றி.
  -தாஜ்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s