அறிந்தவைகளை விட
அறியாதவைகளைப் பற்றியே
அதிகம் பேசுகிறார்கள்…!
ஏன்..?
நட்பை விட
பகையைப் பற்றியே
அதிகம் பேசுகிறார்கள்…!
ஏன்…?
இன்றைவிட
நாளையைப் பற்றியே
அதிகம் பேசுகிறார்கள்…!
ஏன்…?
வாழ்க்கையை விட
மரணத்திற்கே
அதிகம் அஞ்சுகிறார்கள்….!
ஏன்…?
***
நன்றி : இஜட். ஜபருல்லா
abdulqaiyum said,
23/06/2011 இல் 21:45
ஏன்னு சொன்னாக்கா….
அறிஞ்சதைப் பத்தி பேசுனா ஜனங்களுவோ குத்தம் கண்டுபிடிக்குறாஹலுவோ….
அறியாததைப் பத்தி பேசுனா ஜனங்களுவோ ‘கம்முன்னு; இருக்குறாஹலுவோ…